
முதலில் மலரப் போகும் புதியதோர் ஆண்டு அனைவருக்கும் இனியதொரு ஆண்டாக திகழட்டும்.
அடுத்து எனது பதிவுக்கு வருகிறேன்.எல்லோருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்பது இருக்கும்தானே?பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக வாழ்வியலின் நியதி.இன்று,வருட இறுதி நாள்.நாளை மலரப் போகும் புதிய வருடத்தை வரவேற்பதில் எல்லோரும் ஆனந்தமாக ஒன்று கூடும் நன்னாள்.
இதே போல் ஓர் நாள்தான் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 31.12.2010. அன்றுதானே முதன் முதலாய் நீயும் நானும் சந்தித்துக் கொண்டோம்.நீயும்...