This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday 31 December 2011

வசந்தம் என் வாசல் நாடிவந்த நாளும், என் இறுதிப் பயணமும்....


முதலில் மலரப் போகும் புதியதோர் ஆண்டு அனைவருக்கும் இனியதொரு ஆண்டாக திகழட்டும்.

அடுத்து எனது பதிவுக்கு வருகிறேன்.எல்லோருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்பது இருக்கும்தானே?பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக வாழ்வியலின் நியதி.இன்று,வருட இறுதி நாள்.நாளை மலரப் போகும் புதிய வருடத்தை வரவேற்பதில் எல்லோரும் ஆனந்தமாக ஒன்று கூடும் நன்னாள்.

இதே போல் ஓர் நாள்தான் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 31.12.2010. அன்றுதானே முதன் முதலாய் நீயும் நானும் சந்தித்துக் கொண்டோம்.நீயும் நானும் போட்டி போட்டுக் கொண்டு புதிய ஆண்டை வரவேற்றுக் கொண்டோம்.

அன்று எவ்வளவு சந்தோசமா இருந்தோம்.அதே போல் இன்றும் போட்டி போட்டுக் கொண்டு பிரிவை வரவேற்றுக் கொண்டிருக்கிறோம்.என் மீதான் உன் பாசத்தின் முன் உன் மீதான என் பாசம் என்றுமே தூசிதான் என்பதை உணர்ந்து கொண்டேன்.எப்போதும் நீ ஜெயிப்பவனாகவும் நானே தோற்பவளாகவுமே இருந்திருக்கிறோம்.

என்னை நான் புரிந்து கொண்டதால் பிடிவாதக்காரியாகவும் என்னை நீ புரிந்து கொண்டதால் சுயநலக்காரியாகவும் மாறினேன்.என்னை நியாயப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.அதையும் நீ அறிந்து கொள்ளப் போவதுமில்லை.என் நிலையை உனக்குப் புரிய வைப்பதற்கும் எனக்கு யாருமில்லை.என்றோ ஓர் நாள் என்னையும் என் நேசத்தையும் நீ புரிவாய்.அன்று உன் அருகில் நிச்சயம் இருக்கப் போவதுமில்லை.என்னை ஜெயித்த உன் சந்தோசம் மட்டும் எனக்கு போதும்.

நாளை மலரப் போகும் புத்தாண்டு உன் வாழ்வில் புத்தொளி வீச என் இதயம் மலர்ந்து உன்னை வாழ்த்திச் செல்கிறேன். 


உறக்கத்தை தொலைத்தேன்
உறவுகளை மறந்தேன் 
என் பெற்றோரையும் 
மற்றோரையும் மறந்தேன்

நாடி வந்த தோழிகளை
ஏனோ தவிர்த்தேன்
அடுத்தவருடன் அளவளாவுவதை
நிறுத்தினேன்  
   
காரணமேயன்றி 
கவிதைகள் எழுதினேன்
பெண்களுடன் நீ பேசும்போது 
கோபத்தை அள்ளி வீசினேன்

அழகிய உன் சிரிப்பினை 
அமைதியாய் ரசித்தேன்
விழி மூடி தூங்கும் போதும் 
கனவிலும் உன்னையே கண்டேன்

எனை நீ பிரிந்த போது   
மனம் துவண்டு போனேன்
பாசம் என்றால் என்னவென்று
உன்னாலே அறிந்து கொண்டேன்

பாசத்தினால் சுயநலக்காரி
என்ற பெயரெடுத்தேன்
உன் கொள்கையிலே பிடிவாதக்காரி
என்ற பட்டம் பெற்றேன் 

மனங்களை படிக்க முயன்று
வாழ்வைத் தொலைத்தேன்
கடந்து போன துயரங்களையும்
மறந்து போனேன்    

இவையெல்லாம் உன்
உன் பாசத்தில் கட்டுண்டதால்
என்னுள் மலர்ந்த 
மாற்றங்கள்....



அனைத்து பதிவுலக சகோதர சகோதரிகளுக்கும் என் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Photobucket

Monday 19 December 2011

நான் பார்த்த காதலும்,நானறிந்த காதலும்.



காதல் அது எப்பொழுது வருகிறது? எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? என்பது யாருக்குமே தெரிவதில்லை.எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத காலத்தில் எதிர்பாராத முறையில் திடீரென வருகிறது.சிலருக்கு கை கூடும்.சிலருக்கு கை கூடுவதில்லை.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.அது வந்தபின் பெண்களைச் சுயநிலை இழக்கச் செய்து விடுகிறது.

சாஜகான்-மும்தாஜ், அம்பிகாபதி-அமராவதி, லைலா-மஜ்னு, தேவதாஸ்-பார்வதி போன்ற காதல்களைப் போல சரித்திரத்தில் நின்று உலக மக்களின் நெஞ்சங்களிலும் வாழ்கின்ற காதல்கள், இன்னும் பிரபலப்படுத்தப்படாத தெய்வீகக் காதல்கள் எத்தனையோ......

நீர்க்குமிழிகள் போல சிதறிப் போகும் கல்லூரிக் காதல்களும்,காதலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் ஜெயித்து பெருமை கண்ட காதல்களும் உண்டு.

ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொள்வதுதான் காதல்.இந்த காதல் அழகைப் பார்த்து வருகிறதா? அல்லது ,அகத்தை உணர்ந்து  மலர்கிறதா?அழியும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காதலுக்கு ஆயுளும் குறைவுதான்.உள்ளத்தை நேசித்து மலர்ந்த காதலோ என்றும் அழியாமல் வரலாற்றில் சேரும்.

இன்றைய நவீன காலத்தில் கையடக்க தொலைபேசிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஒரு பொம்மை உடைந்ததும் குழந்தை மற்றொரு பொம்மையை வைத்து விளையாடுகிறது.அதனால் குழந்தைக்கு முதல் பொம்மையிடம் இருந்த அன்பு பொய்யாக இருப்பதில்லை.ஆனால் அதே அன்பை அது இரண்டாவது பொம்மையிடமும் செலுத்த முடிகிறது.இளமையில் மனிதன் காதல் செய்வதும் இதுபோலத்தான்.

மனிதாபிமானம் கூடிய, விட்டுக் கொடுத்து இன்பம் காண்கின்ற, மன்னித்து மகிழ்கின்ற இரு மனங்களின் சந்திப்பில் மலருகின்ற உன்னதமான ஒரு ஆண் பெண் உறவுதான் காதல் என்பதாகும்.

வசந்தத்தில் குயில் பாடுவது ஏன்? மரங்கள் பூப்பது ஏன்? கோடையில் அடியோடு காணப்படாத மின்னல் மழை காலத்தில் இயல்பாக தோன்றுவது ஏன்? மொட்டு மலர்வது ஏன்? நதி கடலையே நோக்கி ஓடுவது ஏன்? பூமி சூரியனையே சுற்றி சுற்றி வருவது ஏன்? எல்லாமே ஏதோ ஓர் வகையில் காதல்தான். 

உலகத்தில் என்றும் அழியாத இரண்டு உண்மைகள் இருக்கின்றன.அவைதான் காதலும் சாதலும்.காதல் சாவைக் கூட வெல்வதனால்தான் ஓயாமல் தீயைக் கக்க வைக்கும் இந்த உலகில் மனித  வாழ்ந்தும் போராடியும் எதிர்கால நம்பிக்கையோடு வாழ்வில் முன்னேறுகின்றான்.
தாமரை மலரிடத்திலே ஒரு வண்டு வருகிறது.மலருக்கும் அது பிரியமாகவே இருக்கிறது.அது தன் உள்ளத்தில் வண்டிற்கு இடம் கொடுக்கிறது.ஆனால் தன் மகரந்த ரசத்தை மட்டும் தொடக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்கிறது.இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது தாமரைக்கு தன்னிடத்தில் இரக்கம் உண்டாகுமென்றும் அது தன் மகரந்தத்தை பருகக் கொடுக்கும் என்று வண்டு நினைக்கிறது.ஆனால் தாமரை தன் பிடிவாதத்தை விடவேயில்லை.இறுதியில் வண்டு அலுத்துப் போய் அதைவிட்டு பறந்து விடுகிறது.தாமரை மனதிற்குள் சொல்லிக் கொண்டது, "ஆண் சாதி எப்பவுமே இப்படித்தான் மோசம் செய்யும்."






Photobucket

Wednesday 7 December 2011

உயிரில் பூத்த என் ஒற்றைக் காதல்.

அன்று... 
அவனை முதன்முறையாய் கண்ட நாள் 
இருளும் ஒளியும் ஒன்று கூடிடும் நேரம் 
என் தோழிகள் சூழ்ந்த நிலையில் நானும் அவனும் 




முதல் தடவை சந்தித்தவேளையிலும் 
பலநாள் பழகிய ஓர் உணர்வுடன் 
தோழமையுடன் கை குலுக்கிக் கொண்டோம் 
பாதி வார்த்தைகளாலும் மீதி பார்வைகளாலும்
உணர்வுப் பரிமாற்றம் நடந்தது


அவன் பார்வையில் இருந்த நேசமும் 
அவன் அருகாமையில் என்னுள் மலர்ந்த  
பெண்மையின் மென்மையும் 
ஒரு கணம் சிலிர்க்க வைத்தது 



என்னவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில்
இதயமோ துடித்தது
அவனைப் பிரியப் போவதை எண்ணி 
மனமோ தவித்தது



பேச வார்த்தைகளின்றி
அவனையே ரசித்தபடியே நின்றிருந்தேன்          
அவன் வார்த்தைகள் எதுவும் 
என் செவிகளில் விழவேயில்லை
அவன் குரல் மட்டும் 
கணீரென ஒழித்துக் கொண்டிருக்க 
மௌனமாய் நானிருந்தேன்

நேரமாவது கூட அறியவில்லை 
யாரோ என்னைத் தட்டும் ஓர் உணர்வில் 
திரும்பிப் பார்த்தேன் 
என் தோழிகள்
"எல்லோரும் உன்னைத் தேடுறாங்க
 வாடி நேரமாச்சு "

பிரிய மனமின்றி அவனும்
போக மனமின்றி நானும்
வேறு வழியின்றி விடை கூறினோம்

அவன் பெயரையும் என் பெயரையும் 
இணைத்து வைத்த இறைவன் 
இருவரையும் தூரமாக்கி வைத்ததும் ஏனோ? 



ஒருவேளை...
இருளும் ஒளியும் ஒன்று கூடிடும் நேரம் 
முதன்முறை நாம் சந்தித்ததாலோ...??? 
ஆம் வானில் முழுமதியும் கதிரவனும் 
ஒன்று சேர்வது எப்படி சாத்தியமாகும்? 



இருந்தும்... 
இறுதிவரை என் காதல் 
என் மனவறைக்குள் மட்டுமே 
அழிவதெல்லாம் அழியும் 
அவன் தந்த என் காதல்  
நினைவொன்றைத் தவிர...



Friday 2 December 2011

உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.02.12.2011


எப்படியெல்லாம் வாழலாம் என்று வாழும் இன்றைய மானிட சமூகத்தில் இப்படித்தான் வாழணும்னு தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு வாழும் மனிதர் எத்தனை பேர்? தான் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் சமூகத்தில் தன்னைச் சூழ்ந்த சமூகமும் துன்பமின்றி வாழனும் என்ற உயர்ந்த எண்ணம் எங்களில் எத்தனை பேருக்குத்தான் வரும்?எல்லா வசதி,வாய்ப்புகள்  இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவணும்கிற மனம் எல்லோர்க்கும் எளிதில் வருவதில்லை.தனது உறவுகளுக்கே உதவும் மனமில்லாத உறவுகள் மத்தியில்,தனது உறவுகள் மட்டுமல்லாது முகமறியா உறவுகளுக்கும் உதவணும்கிற கருணை உள்ளம் கொண்ட ஓர் பிறவி.

என்னால் நம்ப முடியவில்லை இப்படியும் ஓர் மனிதரா!
நம்பித்தான் ஆகணும்.இதுநாள் வரை  நான் கண்டதில்லை இப்படி ஓர் மனிதனை.இப்போதுதான் கண்டேன் இத்தகைய ஓர் அரிய உன்னத பிறவியை.அந்த மனிதர் வாழும் சுழலில் அவர் நிழலில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கையில் எனக்கும் ஓர் பெருமிதம்.

இத்தகைய ஓர் உன்னத மனிதருக்கு இன்று மணிவிழாவாம்.நான் கண்ட உன்னத உறவை வாழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததையிட்டு பெரும் உவகையடைகிறேன்.நாயகன் இல்லாது கொண்டாடிய ஓர் மணிவிழா.ஆனாலும் அவரை நேசித்த உறவுகள் மறக்கவில்லை.அவரால் வரமுடியாத நிலையிலும் மணிவிழாக் காணும் நாயகனைப் பெருமைபடுத்தி கௌரவிக்க மறக்கவில்லை.எத்தனை பேர் அறிந்திருப்பீர்களோ தெரியவில்லை.

அவர்தான்,தியாகி அறக்கொடை நிதிய (Thiyahie Charitable Trust) ஸ்தாபகர் உயர்திரு.வாமதேவா தியாகேந்திரன் அவர்கள்.தளராத அறச் சிந்தனை விடாமுயற்சியாய்,உயர்ந்திட்ட செல்வம் பாலெனப் பொங்கிட காராம்பசுவானார் எங்கள் தியாகி.எல்லோர்க்கும் பேர்க்கு ஏற்றாற்போல் குணம் அமைவதில்லை.இவருக்கு மட்டும் பேருக்கேற்றாற்போல் குணமும் அமைந்ததுதான் அதிசயம்.வசதி வாய்ப்புக்கேற்ற மிடுக்கோ கர்வமோ இல்லாது ஒரு சாதாரண மனிதனாக தோன்றும் இவரா அவர் என வியக்க வைக்கும்.எல்லோரிடமும் பாசத்துடனும் மிகுந்த அக்கறையுடனும் பழகுவார்.

ஒருவருடம் இருவருடமல்ல 20 வருடங்களாக இந்த அறப்பணியை யார் உதவியுமின்றி தனியொரு மனிதனாய் மேற்கொண்டு வருகிறார்.சுவிஸ் நாட்டில் வாழ்ந்தாலும் கூட தனது தாய் நாட்டின் மீதுள்ள பற்றினால்,நலிவுற்ற சமூகத்தினது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கிற்காக அயராது பாடுபட்டு வருகிறார்.தனது உழைப்பின் பெரும் பகுதியை ஏழை மக்களின் நலனுக்காகவே செலவு செய்து வருகிறார்.இவரது பணிகள் பற்றி சொல்லப்போனால் ஒரு பதிவு போதாது.பிறிதொரு பதிவில் அதை கூறலாம் என நினைக்கிறேன்.

தானில்லாத காலத்தில் கூட இந்த அறப்பணிகள் விடாது தொடர வேண்டுமென்பதற்காக TCT பல்பொருள் விற்பனை நிலையம்,TCT  விருந்தினர் விடுதி மற்றும் சொர்ணாம்பிகை திருமண மண்டபம் என்பனவற்றை அமைத்து அதன் மூலம் வரும் வருமானங்களையும் இந்த அறப்பணிக்கே செலவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாது,TCT சிறுவர் இல்லாம் ஒன்று அமைத்து அதில் 20  இற்கும் மேற்பட்ட சிறுவர்களை பராமரித்து வருவதுடன் அவர்களுக்கு கல்வி வசதிகளையும் அளித்து வருகிறார்.

மெழுகாய் உருகி ஒளியாய் திகழும் இந்த தியாக தீப ஒளியால் ஒளிரும் முதியோர்,இளையோர்,மாணவர்,விதவைகள்,மாற்று வழுவூர்,ஆதரவற்றோர் என இன,மத,குல பேதமின்றியும்,நாடு கடந்து எட்டுத்திசையிலிருந்தும் வாழ்த்தொலிகள் ஒலிக்க இந்த நன்னாளில் மணிவிழா நாயகனை நானும் பால்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
     
Photobucket

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More