Friday 2 December 2011

உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.02.12.2011


எப்படியெல்லாம் வாழலாம் என்று வாழும் இன்றைய மானிட சமூகத்தில் இப்படித்தான் வாழணும்னு தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு வாழும் மனிதர் எத்தனை பேர்? தான் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் சமூகத்தில் தன்னைச் சூழ்ந்த சமூகமும் துன்பமின்றி வாழனும் என்ற உயர்ந்த எண்ணம் எங்களில் எத்தனை பேருக்குத்தான் வரும்?எல்லா வசதி,வாய்ப்புகள்  இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவணும்கிற மனம் எல்லோர்க்கும் எளிதில் வருவதில்லை.தனது உறவுகளுக்கே உதவும் மனமில்லாத உறவுகள் மத்தியில்,தனது உறவுகள் மட்டுமல்லாது முகமறியா உறவுகளுக்கும் உதவணும்கிற கருணை உள்ளம் கொண்ட ஓர் பிறவி.

என்னால் நம்ப முடியவில்லை இப்படியும் ஓர் மனிதரா!
நம்பித்தான் ஆகணும்.இதுநாள் வரை  நான் கண்டதில்லை இப்படி ஓர் மனிதனை.இப்போதுதான் கண்டேன் இத்தகைய ஓர் அரிய உன்னத பிறவியை.அந்த மனிதர் வாழும் சுழலில் அவர் நிழலில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கையில் எனக்கும் ஓர் பெருமிதம்.

இத்தகைய ஓர் உன்னத மனிதருக்கு இன்று மணிவிழாவாம்.நான் கண்ட உன்னத உறவை வாழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததையிட்டு பெரும் உவகையடைகிறேன்.நாயகன் இல்லாது கொண்டாடிய ஓர் மணிவிழா.ஆனாலும் அவரை நேசித்த உறவுகள் மறக்கவில்லை.அவரால் வரமுடியாத நிலையிலும் மணிவிழாக் காணும் நாயகனைப் பெருமைபடுத்தி கௌரவிக்க மறக்கவில்லை.எத்தனை பேர் அறிந்திருப்பீர்களோ தெரியவில்லை.

அவர்தான்,தியாகி அறக்கொடை நிதிய (Thiyahie Charitable Trust) ஸ்தாபகர் உயர்திரு.வாமதேவா தியாகேந்திரன் அவர்கள்.தளராத அறச் சிந்தனை விடாமுயற்சியாய்,உயர்ந்திட்ட செல்வம் பாலெனப் பொங்கிட காராம்பசுவானார் எங்கள் தியாகி.எல்லோர்க்கும் பேர்க்கு ஏற்றாற்போல் குணம் அமைவதில்லை.இவருக்கு மட்டும் பேருக்கேற்றாற்போல் குணமும் அமைந்ததுதான் அதிசயம்.வசதி வாய்ப்புக்கேற்ற மிடுக்கோ கர்வமோ இல்லாது ஒரு சாதாரண மனிதனாக தோன்றும் இவரா அவர் என வியக்க வைக்கும்.எல்லோரிடமும் பாசத்துடனும் மிகுந்த அக்கறையுடனும் பழகுவார்.

ஒருவருடம் இருவருடமல்ல 20 வருடங்களாக இந்த அறப்பணியை யார் உதவியுமின்றி தனியொரு மனிதனாய் மேற்கொண்டு வருகிறார்.சுவிஸ் நாட்டில் வாழ்ந்தாலும் கூட தனது தாய் நாட்டின் மீதுள்ள பற்றினால்,நலிவுற்ற சமூகத்தினது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கிற்காக அயராது பாடுபட்டு வருகிறார்.தனது உழைப்பின் பெரும் பகுதியை ஏழை மக்களின் நலனுக்காகவே செலவு செய்து வருகிறார்.இவரது பணிகள் பற்றி சொல்லப்போனால் ஒரு பதிவு போதாது.பிறிதொரு பதிவில் அதை கூறலாம் என நினைக்கிறேன்.

தானில்லாத காலத்தில் கூட இந்த அறப்பணிகள் விடாது தொடர வேண்டுமென்பதற்காக TCT பல்பொருள் விற்பனை நிலையம்,TCT  விருந்தினர் விடுதி மற்றும் சொர்ணாம்பிகை திருமண மண்டபம் என்பனவற்றை அமைத்து அதன் மூலம் வரும் வருமானங்களையும் இந்த அறப்பணிக்கே செலவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாது,TCT சிறுவர் இல்லாம் ஒன்று அமைத்து அதில் 20  இற்கும் மேற்பட்ட சிறுவர்களை பராமரித்து வருவதுடன் அவர்களுக்கு கல்வி வசதிகளையும் அளித்து வருகிறார்.

மெழுகாய் உருகி ஒளியாய் திகழும் இந்த தியாக தீப ஒளியால் ஒளிரும் முதியோர்,இளையோர்,மாணவர்,விதவைகள்,மாற்று வழுவூர்,ஆதரவற்றோர் என இன,மத,குல பேதமின்றியும்,நாடு கடந்து எட்டுத்திசையிலிருந்தும் வாழ்த்தொலிகள் ஒலிக்க இந்த நன்னாளில் மணிவிழா நாயகனை நானும் பால்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
     
Photobucket

24 comments:

வீட்டில தான் இல்ல இங்கயாச்சும் சுடு சோறு கிடைக்குமா?

வாறன் சாப்பிட்டுட்டு அப்புறமா?

திருப்பதிக்கே அல்வாவா?வாருங்கள் வாருங்கள் அன்புச் சகோதரரே...

மனமார வாழ்த்துகிறேன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன், இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால்தான் நாட்டில் கொஞ்சமேனும் மழை பெய்கிறது...!!!

அவர் இன்னும் பல ஆண்டு இந்த வையகத்தில் வாழ்ந்து எம் மக்களுக்க பல உதவி செய்ய இறைவனை வேண்டுகிறேன்...

அந்த புனிதனைக் காண ஆவலாயுள்ளேன்...

MANO நாஞ்சில் மனோ@
மனமார வாழ்த்துகிறேன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன், இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால்தான் நாட்டில் கொஞ்சமேனும் மழை பெய்கிறது...!!!

உண்மைதான் மனோ அங்கிள்.இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்ப்பதும் ரொம்பவே அரிது.

இவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் பத்தாயிரம் பேரில் ஒருத்தருக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான்..

இந்த உயர்ந்த உள்ளம் இன்னும் பல ஆண்டுகள் சீறோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துக்கிறேன் சகோ..

மனமார்ந்த வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்

நல்ல உள்ளம். கருணை வடிவம் !தொண்டு புரியும் ஐயாவை !நானும் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகின்றேன் !

நாயகன் இல்லாது கொண்டாடிய ஓர் மணிவிழா.

நாடு கடந்து எட்டுத்திசையிலிருந்தும் வாழ்த்தொலிகள் ஒலிக்க இந்த நன்னாளில் மணிவிழா நாயகனை நானும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

சித்தாரா...உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்திக்கொள்கிறேன்.நல்ல மனங்களுக்கு என்றும் ஒரு குறையும் இருக்காது !

வாழ்துவதை விட வணங்குகிறேன். எதிர்காலக்கனவின் ஆட்காட்டியாய் இவர்.
பகிர்வுக்கு நன்றி சகோ.

வணக்கம் அக்காச்சி,
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நாமும் இவரைப் போல வாழ்ந்தால் எப்படி இருக்கும் எனும் எண்ணம் தோன்றும் வண்ணம் முன் மாதிரியாகச் செயற்படும் மகானினைப் பற்றிய பதிவினைத் தந்திருக்கிறீங்க. நன்றி.

நல்ல மனிதர்கள்கள் கண்டிப்பாக போற்றப்படுவார்கள்...

தற்போது அவர்கள் கண்டுக்கொள்ள படவில்லையென்றால் ஒளிமயமான எதிர்காலம் அவர்களை வரவேற்க்கும்...

இந்த நன்னாளில் மணிவிழா நாயகனை நானும் பால்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.//
நானும் வாழ்த்திக்கொள்கிறேன். முடிந்தால் அனைவரும் இவரை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு வாழ்ந்தால் எங்கும் அன்பு நிறைந்திருக்கும் சகோ..

பகிர்விற்கு நன்றி.இவர் பற்றி இப்போதுதான் முதன் முறை கேள்விப்படுகிறேன்.வாழ்த்துகள்.

முதல் முறை கேள்விப்படுகிறேன். பகிர்வுக்கு நன்றிகள்
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் நீடுழி வாழ வேண்டும்,அவரைப் போல் பல உள்ளங்கள் உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

Sirantha manithargal than Sirantha Nattai uruvaakka mudiyum. Avarukku en vaalthukkal.
TM 8.

அந்த மகத்தான உள்ளத்துக்கு,சிறியோனின் வாழ்த்துக்களும்!

என் வாழ்த்தையும் சேர்த்துக்கோங்க சகோ

மதுமதி says:
இவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் பத்தாயிரம் பேரில் ஒருத்தருக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான்..

நிச்சயமா உங்கள் சந்தேகம் சரியானதுதான்.இப்படிப்பட்ட மனிதரைக் காண்பது மிகவும் அரிது.

@சம்பத் குமார்
@தனிமரம்
@இராஜராஜேஸ்வரி
@ஹேமா
@Tamilraja k
@துரைடேனியல்
@Yoga.S.FR
@ராஜி

எல்லோர்க்கும் நன்றிகள்.
அனைவரது வாழ்த்துகளும் அந்த மகானைப் போய்ச் சேரட்டும்.

றமேஸ்says:
வாழ்துவதை விட வணங்குகிறேன். எதிர்காலக்கனவின் ஆட்காட்டியாய் இவர்.
பகிர்வுக்கு நன்றி சகோ.

ம் ம்.எனக்கும் கூட.

நிரூபன் says:
வணக்கம் அக்காச்சி,
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நாமும் இவரைப் போல வாழ்ந்தால் எப்படி இருக்கும் எனும் எண்ணம் தோன்றும் வண்ணம் முன் மாதிரியாகச் செயற்படும் மகானினைப் பற்றிய பதிவினைத் தந்திருக்கிறீங்க. நன்றி

அவரின் உயர்ந்த உள்ளம் எல்லோர்க்கும் இருந்தால் நாட்டில் வறுமையே இருக்காது.நம்மில் எத்தனைபேர் அப்படி இருக்கிறோம்?

வேடந்தாங்கல் - கருன்says:
இந்த நன்னாளில் மணிவிழா நாயகனை நானும் பால்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.//
நானும் வாழ்த்திக்கொள்கிறேன். முடிந்தால் அனைவரும் இவரை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு வாழ்ந்தால் எங்கும் அன்பு நிறைந்திருக்கும் சகோ..

உண்மைதான் சகோதரா.இனியாவது முயற்சிப்போம்.

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More