வணக்கம் சகோதர சகோதரிகளே. சிறியதொரு இடைவெளியின் பின் என் கதையின் பாகம் இரண்டுடன் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
Love - 02
“சாரா செக் எல்லாம் ரெடியா?”...
எக்கவுண்டன் கேட்டது கூட புரியாமல் அமர்ந்திருந்தாள்.
“சாரா என்னாச்சு உடல்நிலை ஏதாவது சரியில்லையா? வேணுமென்றால் லீவு போட்டு வீட்டுக்கு சென்று ரெஸ்ற் எடுத்துக்கோ”
”Sorry Sir.இல்லை பரவாயில்லை.இதோ செக் எல்லாம் ரெடியாச்சு.” என்று சொல்லி அவரிடம் செக் எல்லாவற்றையும் எடுத்துச் சென்று கொடுத்தாள்.
“சேர் 2 நாள் லீவு வேண்டும்”
சாரா ஒருநாளும் வேலையில் கவனம் சிதறவிட்டதில்லை.மற்றவர்கள் போல தேவையில்லாம லீவு எடுத்ததுமில்லை.அவள் மேல் அவருக்கு தனி நம்பிக்கை. அப்படிப்பட்டவள் இன்று இவ்வாறு இருந்ததை அவரால் நம்ப முடியவில்லை.மறுப்பேதும் சொல்லாமல் லீவு அனுமதித்துவிட்டார்.
லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவளுக்கு மனம் ஓரிடத்தில் நிம்மதியாக மாட்டேன் என்றது.தொண்டைக்குழிக்குள் உணவு இறங்க மறுத்தது.எவரிடமும் பேச மனமின்றி தன் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள்.தியானம்கூட பண்ணிப் பார்த்தாள்பயனேதுமில்லை.இதுவரை அவள் மனதில் இப்படியேதும் குழப்பம் தோன்றியது கிடையாது.அவனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திணறித்தான் போனாள்.2நாள் குழப்பத்தின் பின் ஒரு முடிவுக்கு வந்தாள்.ஆனால் அதை அவனிடம் எப்படி சொல்லிவிடுவது என்பதை மட்டும் கொஞ்சம் யோசித்தாள்.
நாட்களைக் கடத்தாது எப்படியாவது இன்று அவனிடம் தன் முடிவைச் சொல்லிவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.
வழமையை விட கொஞ்சம் சீக்கிரமே வேலைக்கு தயாராகினாள்.அவன் வேலைக்கு செல்லும் நேரம் முன்பே அறிந்திருந்ததால் அதற்கேற்றவாறு தன்னைத் தயார் படுத்தினாள்.கோயிலுக்கு சென்று விட்டு போகும் வழியில் அவனை சந்தித்து பேசிவிட நேரமும் சரியாக இருக்கும்.
அம்மனை வழிபட்டுத் திரும்பிய போது எதிரே அவன் நின்றிருந்தாள். அவள் நினைத்ததும் அவள் முன் அவன்.இதுதான் காதலோ...புரியாமல் அவள் திகைத்தாள்.அவள் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அந்த அம்மனிடம் செல்வது அவன் கண்டிருக்கிறான்.அன்று அவனும் அவளை எதிர்பார்த்தே அங்கு வந்திருந்தான்.
“மகி, உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?” அவன் கண்களை நோக்கி ஒருவித தயக்கத்துடன் கேட்டாள்.
“என்ன சாரா, அதுக்காகத்தானே நான் காத்திட்டிருக்கேன். 2 நாளா உன்னை காணாமல் என்னாச்சோ ஏதாச்சோன்னு துடிச்சுப் போட்டன் தெரியுமா? சொல்லு சாரா” அவன் சஸ்பென்ஸ் தாங்காமல் கேட்டான்.
அவள் தொடர்ந்தாள்.”மகி உங்க காதலை நான் மதிக்கிறன்.அதை நான் மறுக்கல.ஆனா..” என்று சொல்லி இடைநிறுத்தினாள்.
திகைப்போடு அவளை நோக்கினான்.
”மகி இது உங்களுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனாலும் இதை உங்ககிட்ட சொல்லித்தான் ஆகனும்.உங்களுக்கு தெரியுமா?நான் ஒரு விதவை.”
அவள் கண்கள் கலங்கியதை அவன் கவனிக்க தவறவில்லை.அவள் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு அவனை நோக்கினாள்.அவன் மலர்ந்த முகம் சிவந்திருப்பதை கண்டு திகைத்தாள்.
“சாரா, உனக்குத் தெரியுமா? இந்த விசயம் எனக்கு எப்பவோ தெரியும்.உன்னோட பழைய வாழ்வு பற்றி நான் ஏதும் கேட்கப் போறதில்லை.உன் மனசைத் தான் நான் நேசிக்கிறேன்.கடைசி வரை உன்னுடன் சந்தோசமா வாழனும் எனக்கு அது போதும்.” என்று காதலுடன் சொல்லிக் கொண்டே போனான்.
சாராவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
காதல் தொடரும்...

10 comments:
விதவையாக இருந்தால் என்ன ?... நல்லதொரு முடிவு... பதிவிற்கேற்ற பாட்டு... வாழ்த்துக்கள்... நன்றி...
Valthukal
என்ன சொல்ல சித்தாரா.............. என்னவோ நினைச்சன், ஏதோ நடந்துட்டுது, வித்தியாசமான முடிவு
வார்த்தைகளின் எண்ணிக்கை குறைத்து வியப்போடு ரசிக்க வைதது முடித்து விட்டாய் சகோதரி...
சித்தாரா அக்கா...சுபமான ஒரு முடிவு தந்தமைக்கு பாராட்டுகளும் நன்றிகளும;!சந்திப்போம்.!
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!
முதல் பகுதியை விட... இந்த பகுதி கொஞ்சம் வேகம் அதிகம் அதற்க்கு முதலில் வாழ்த்துக்கள்.!
இரண்டாம் பகுதி எழுதும் போது பதிவின் ஆரம்பத்திலேயே அதற்க்கு முந்தைய பகுதியின் இணைப்பை தருவது முக்கியம். புதிதாய் வருபவர்கள் முதல் பகுதியை தேடி அலைந்துகொண்டிருக்க கூடாதல்லவா? அப்படி கொடுப்பதால் ஏற்கனவே வாசித்தவர்களும் கூட இணைப்பை கிளிக் செய்து பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது இது உங்கள் பேஸ் வியூ அதிகரிக்க உதவும்..!
உங்களிடம் திறமை உள்ளது முயற்சித்தால் இன்னும் மேலே வரலாம்.! வாழ்த்துக்கள்.!
பேசாம சினிமாவுக்கு கதையெழுதிடுங்களேன்...
நன்றாக இருக்கிறது தொடருங்கள்
அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறோம்!
கதை நன்றாக உள்ளது.
பாராட்டுக்கள் தோழி.
கதையோட்டம் அருமை.ரசித்தேன் சித்தாரா !
Post a Comment