This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday 24 March 2012

என் மனதை நீயறியும் நாளெதுவோ....



நீ தந்த நினைவுப் பரிசு 
ஒன்று மட்டுமே 
யாருமறியாது 
எப்போதும் என்னுடனே...


எப்போதும் உன்னையே 
முதலாய் எண்ணியவளிடம் 
எப்படி உரைத்தாய் 
என் முடிவே நீதானென்று...

விலகிடு விலகிடு என்றாயே 
மறுக்கவில்லை 
ஒற்றை வார்த்தையில் உரைத்துவிடு 
எனை மறந்து நீ
மகிழ்வாயென்று... 
உன்னை மறக்க உரைத்த நீ 
மறக்கும் வழியை மட்டும் 
உரைக்க மறுத்ததேன் 
எப்படி முடியும் 
நீயே அறியாததை...


அலை வந்து அழிப்பதைஅறிந்தும் 
கரை மணலில் எழுதும் சிறுமி போல் 
நீ வந்து அழிக்க வேண்டுமென்பதற்காகவே 
வாசலில் தவம் கிடக்கும் 
நான் கிறுக்கும் கிறுக்கல்கள்..

வேடன் விரித்த வலையில் 
சிக்கிய குருவி 
பத்திரமாய் திரும்பி 
மறுபடியும் மாட்டிக் கொண்டது 
மீள் முடியா பாசவலையில்...


சிறகுகள் விரிந்தன 
பறவைக்கோ மனமில்லை பறந்திட 
முடிவில் ஒடித்துக் கொண்டது 
தானே தன் சிறகினை... 

கடவுளிடம் எப்போதும் மன்றாடுவேன் 
மீண்டும் மீண்டும் 
பாவியாய் பிறக்க வேண்டும் 
அங்கும் உனைத் தேடித் தேடி 
அலைய வேண்டும் 
முடிவில் உன் மடியில் 
உயிர் பிரிய வேண்டும்...
வாழ்வு பறிபோன போது கூட 
கலங்கினதில்லை 
இப்போது மட்டும் எதற்காக? 
உனக்காவது புரிகிறதா?



எப்போதும்  
தனிமையை விரும்பும் உன்னிடத்தே 
 எப்படி உரைப்பேன்   
நான் உன்னிடம் வெறுப்பது  
அது ஒன்றே...

x_3c3f863d

Sunday 18 March 2012

மகிழ்வான வாழ்வுக்கு எளிதான சில வழிமுறைகள்.



  • உங்க வாழ்க்கை எப்பவுமே உங்க கையிலேதான் தங்கியிருக்கிறது.அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
  • எப்போதும் மற்றவர்களில் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • உங்க மனசுக்கு சரியென்று தோன்றுவதை பண்ணுங்கள்.ஆனால் ஏனையவர்களது மனநிலையையும் புரிந்துகொண்டு செயற்படுங்கள்.
  • மனசாட்சிக்கு விரோதமான எந்தவொரு காரியத்தையும் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • எல்லோரும் உங்க விருப்பப்படி நடந்து கொள்ளணும்னு கட்டுப்படுத்தாதீங்க.மற்றவங்க விருப்பு வெறுப்புகளையும் உணர்ந்து பாருங்க.
  • உறவுகளிடம் எல்லா விடயங்களிலும் விட்டுக் கொடுத்துப் பழகிக் கொள்ளுங்க.
  • அதிகமாக எதையும் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்வதைவிட தவிர்த்துக் கொள்ளுங்க.
  • உறவுகளின் எதிர்பார்ப்புகளை முடிந்தவரை நிறைவேற்றிப் பழகுங்க.
  • எல்லோரும் உங்களுக்காக மட்டும் வாழனும்னு எதிர்பார்க்காதீங்க.
  • உங்க கடமைகளை சரிவர செய்து முடியுங்க.
  • தவறுகள்,தப்புகள் பண்ணுவதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்.
  • தவறுகளை உணரும்பட்சத்தில் மன்னிப்பு கேட்கத் தவறாதீர்கள்.
  • பழிவாங்கும் எண்ணங்களை கைவிடுங்கள்.
  • உறவுகளைப் பிரித்து வைக்க நினைக்காதீங்க.முடிந்தால் பிரிந்த உறவுகளை இணத்து வைக்க முயலுங்க.
  • உங்க மனசை மகிழ்வாக வைச்சிருப்பதோடு உங்கள சுற்றியிருக்கும் இடத்தையும் மகிழ்ச்சியாக வைச்சிருங்க.
அன்பு ஒன்றே உன்னதமான வாழ்வின் எல்லை.முடியாததென்பது கிடையாது.முயன்று பார்த்தால் எதுவும் முடியும்.

Thursday 8 March 2012

அன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.

x_3c2f33f7


அன்பு காட்டுகையில் அண்ணனாய் 
அறிவுரை கூறுகையில் தந்தையாய்
நெறிப்படுத்துகையில் நல்லாசானாய்
துன்பம் நேர்கையில் தோழனாய்
அநியாயங்களை தட்டி கேட்பதில் வீரனாய் 
குறும்புகளை ரசிக்கையில் குழந்தையாய் 
புன்சிரிப்புடன் என்றும் உலாவரும்
என் அன்பு குட்டி அண்ணா,

நீ பதிவுலகில் மட்டுமல்ல 
என்றும் பார் போற்றும் தலைமகனாய் 
இந்நாளல்ல எந்நாளும்
புன்னகையுடன் நலமாக வாழ
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கடலில் எழுந்து கரையில் அழியும் 
அலையல்ல பாசமென்பது
உடைந்த அலைகள் உயிர் பெற்று 
மீண்டும் கடலை சேர்வது போல
உன் பாசம் கூட
சிறு சிறு பிரிவுகளின் பின்
துளிர்விடத்தான் செய்கிறது.

இன்று (08.03.2012 )பிறந்தநாள் கொண்டாடும் என் அன்பு அண்ணன் ம.தி.சுதாவிற்கு அன்புத் தங்கையின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

x_3c2f8cc4

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More