This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday 21 May 2011

உயிருக்கு ஓர் மடல்.


உயிருக்குள் ஓர் உயிர் 
உன்னை வைத்த என் உயிரில்
எவரையும் நிறுத்தி வைக்க முடியலடா

முழுமையான அன்பைக் கூட 
நான் அறிந்து கொண்டதும் 
உன்னிடத்திலே 
 எத்தனை பாசத்தினை 
நம்மிடையே பகிர்ந்து கொண்டோம்

இப்பொழுதெல்லாம் 
 என்னை உனக்கு பிடிப்பதில்லை
இருந்தும் 
என் மனம் உன்னையே சுற்றுதடா 

முன்னெல்லாம் அடிக்கடி 
யாரோ என்னிடத்தில் கூறும் வார்த்தை
இன்னமும் என் நெஞ்சிலே 
"உனக்கு அவனைத்தானே பிடிக்கும்,
அவனுக்கும் உன்னைத்தானே பிடிக்கும்"
இருந்தும் என்னிடத்தில்தான் 
ஏனிந்த கோபம்..?

அடிக்கடி நம்மிடத்தில் தோன்றி மறையும்
சின்னச் சின்ன ஊடல்களெல்லாம் 
அன்பின் வெளிப்பாடுதான் 
என்பதை அறிந்து கொண்டேனடா

மனசு தடுமாறும் போது கூட
உன் உறவில் மட்டும் மாற்றமில்லை
எதிர்பார்ப்புகள் நிராசையாகின்றபோதும்
உன்னிடம் நான் எதிர்பார்ப்பது
உன் அன்பு ஒன்றே  

உன்னிடம் பேச  துடிக்கிறது 
என் இதயம்  
ஏனடா உன்னிடம் மனம்திறந்து பேச
வார்த்தைகள் வர மறுக்குதடா
உன்மீதான அன்பை மட்டும்
வெளிப்படுத்த தெரியவில்லை
 

ஒரு முறையாவது 
வந்து பார்த்துவிட்டு போவாயா
என் மன அறைக்குள்

உனக்காக நான் சேகரித்த 
கனவுகள்
உன்னிடம் பகிர நினைத்த
நினைவுகள் 
ஒவ்வொன்றும் சிதறிக் கிடக்கின்றன

காத்திருக்கிறேனடா
காலம் கனியும்
உன் மனதில் ஓர் மாற்றம்
நம் வாழ்விலும் ஓர் வேனிற்காலம்

அன்று சேர்வோம்
மீண்டும் ஓர் புதிய வாழ்வின்
ஆரம்பத்தில்
இன்புற்று மகிழ்வோம்.



    

  
  
 
 
   
 

Saturday 14 May 2011

கோபத்தைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்களேன்.....

 நீ கோபித்துக் கொள்ளும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடி இன்பத்தை இழந்து விடுகிறாய்.

தீராக் கோபம் போராய் முடியும்.

கோபம் கூடாது.அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது.சாந்தமே முகத்திற்கு அழகு தருகின்றது.

சினம் கொள்வது ஆண்மையாகாது.பொறுமையும் இன்சொல்லும்தான்தான்  ஆண்மை.ஆகவே சினம் கொள்பவன் ஆற்றலும் தைரியமும் அற்றவன்.

ஒருமுறை கோபம் எழுந்தால் மூன்று மாதம் வாழத் தேவையான சக்தி வீணடிக்கப்படுகிறது.

கோபம் எழுந்ததும் கையாளக் கூடிய உத்திகள் சில.

1. வாயை மூடல்.

2. மௌனமாதல்.

3. கடவுள் நாமத்தை உச்சரித்தல்.

4. அந்த இடத்தை விட்டு நகர்தல்.

5. குளிர் நீரை அருந்துதல். 

6. வேகமான நடை போடல்.

7. கண்ணாடியில் பார்த்தல்.

8. சுவாமி அறைக்குள் சென்று பிரார்த்தனை செய்தல்.

9. கோபத்தின் வெளிப்பாட்டை சிறிது நேரம் தாமதித்து வைத்தல்.

10. நீர்க் குழாயை திறந்து நீர் பாயும் ஸ்ருதியுடன் பாட்டுப் பாடல்.

 ஒரு கடிதத்தை எடுக்க வேண்டியவர் எடுக்காவிட்டால் அக்கடிதம் அனுப்பப்பட்டவரிடமே  திரும்பி விடுகிறது.இதே போன்று மற்றவர்களின் தூற்றுக்களையும் ,கௌரவப் பேச்சுக்களையும்  நாம் உள்வாங்காது போனால் அது சொன்னவரிடமே திரும்பிவிடும்.

உனக்கு கோபம் வருகிறது என்று வைத்துக் கொள்.எதற்கோ மனம் படபடக்கிறது.அப்போது ஓரிடத்தில் தனியாக அமர்ந்து  I'm not a dog,I'm a man.என்று  10 தடவை சொல்லிப் பார்.கோபம் உன்னை விட்டு தானாக ஓடி விடும்.

இது நடக்காது என்று எந்த விசயத்தையும் கைவிடாதீர்கள்.நீங்கள் நம்பிக்கையோடு போராடுகின்றபோது எதிர்மறையான விசயங்கள் கூட பயந்து விலகி வெற்றி சாத்தியமாகும்.

இனியாவது உணர்ந்து பாருங்க வாழ்க்கை புரியும்.


Saturday 7 May 2011

உயிர் தந்த தாயே இது உனக்காக..............




அன்னையே.....
இன்று உனக்கான நாள்
இன்றுகூட உன்னை 
வாழ்த்த முடியவில்லை  

  என் மனம் உன்னிடம் மட்டுமே
 உன்னை தொலைவில் வைத்து 
பார்ப்பதற்கு மட்டுமே
என் விதி எழுதப்பட்டுவிட்டதே
எத்தனையோ அன்னையர் தினம் 
வந்துதான் கழிகிறது 
உன்னையும் என்னையும் மட்டும்
விதி பிரித்து வைத்து விட்டதே
                                               
 என்ன ஜென்மமடா 
உரிமை இருந்தும் ஏனோ 
உன்னை பாசத்துடன் 
அம்மா என்றழைக்க முடியவில்லை 

இக்கணத்திலிருந்தாவது 
உனக்காக வாழ விரும்புகிறேன்
வந்துவிடு அன்னையே என்னுடன்...... 



ஒரு துளியில் உருவாகி 
உனக்குள்ளே கருவாகி 
உன் ரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி  
உயிர் பெற்று வந்தோமம்மா...




Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More