நீ கோபித்துக் கொள்ளும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடி இன்பத்தை இழந்து விடுகிறாய்.
தீராக் கோபம் போராய் முடியும்.
கோபம் கூடாது.அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது.சாந்தமே முகத்திற்கு அழகு தருகின்றது.
சினம் கொள்வது ஆண்மையாகாது.பொறுமையும் இன்சொல்லும்தான்தான் ஆண்மை.ஆகவே சினம் கொள்பவன் ஆற்றலும் தைரியமும் அற்றவன்.
ஒருமுறை கோபம் எழுந்தால் மூன்று மாதம் வாழத் தேவையான சக்தி வீணடிக்கப்படுகிறது.
கோபம் எழுந்ததும் கையாளக் கூடிய உத்திகள் சில.
1. வாயை மூடல்.
2. மௌனமாதல்.
3. கடவுள் நாமத்தை உச்சரித்தல்.
4. அந்த இடத்தை விட்டு நகர்தல்.
5. குளிர் நீரை அருந்துதல்.
6. வேகமான நடை போடல்.
7. கண்ணாடியில் பார்த்தல்.
8. சுவாமி அறைக்குள் சென்று பிரார்த்தனை செய்தல்.
9. கோபத்தின் வெளிப்பாட்டை சிறிது நேரம் தாமதித்து வைத்தல்.
10. நீர்க் குழாயை திறந்து நீர் பாயும் ஸ்ருதியுடன் பாட்டுப் பாடல்.
ஒரு கடிதத்தை எடுக்க வேண்டியவர் எடுக்காவிட்டால் அக்கடிதம் அனுப்பப்பட்டவரிடமே திரும்பி விடுகிறது.இதே போன்று மற்றவர்களின் தூற்றுக்களையும் ,கௌரவப் பேச்சுக்களையும் நாம் உள்வாங்காது போனால் அது சொன்னவரிடமே திரும்பிவிடும்.
உனக்கு கோபம் வருகிறது என்று வைத்துக் கொள்.எதற்கோ மனம் படபடக்கிறது.அப்போது ஓரிடத்தில் தனியாக அமர்ந்து I'm not a dog,I'm a man.என்று 10 தடவை சொல்லிப் பார்.கோபம் உன்னை விட்டு தானாக ஓடி விடும்.
இது நடக்காது என்று எந்த விசயத்தையும் கைவிடாதீர்கள்.நீங்கள் நம்பிக்கையோடு போராடுகின்றபோது எதிர்மறையான விசயங்கள் கூட பயந்து விலகி வெற்றி சாத்தியமாகும்.
இனியாவது உணர்ந்து பாருங்க வாழ்க்கை புரியும்.
24 comments:
/////கோபம் கூடாது.அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது./////
அப்படியா தங்கா அப்படின்னா நாம கோபப்படலாம் தானே....
மிகவும் (எனக்கு) உபயோகமான கற்கண்டு கருத்துக்கள்
வாழ்கையை வாழ்கையில் தெரிந்து கொள்ளவேண்டிய
முது முத்து சொற்கள்
நன்றி நவின்றதர்க்கு
பாராட்டு பகின்றதர்க்கு
//I'm not a dog,I'm a man.என்று 10 தடவை சொல்லிப் பார்.கோபம் உன்னை விட்டு தானாக ஓடி விடும்.//
இது சூப்பர் ஐடியாவா இருக்கே.....!!!!
கோவக்கார நண்பா உன் கோபத்தை அடக்க எளிய வழி...
மிகவும் அருமையான ஆக்கம்... இந்தளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் அடங்கிப் போய் இருக்கிங்களோ பொறுங்க எல்லாத்தக்கும் இருக்கு...
ஒருமுறை கோபம் எழுந்தால் மூன்று மாதம் வாழத் தேவையான சக்தி வீணடிக்கப்படுகிறது.இதுவரை கோவத்தைப் பற்றி நான் அறியாத் தகவல் சித்தாரா...நல்ல பதிவு வாழ்த்துக்கள்....
அதோடு நீ சொன்ன உத்திகளையும் முயற்சிக்கிறேன்..
பயனுள்ள பதிவு
கோபத்தை அடக்க
கடைபிடிக்க எளிதான
வழிகளையும்சொல்லி அசத்தியிருக்கிறீர்கள்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உங்கட டெம்ப்ளட் மிக அருமை
கோவம் பற்றிய அவசியமான பதிவு
கோவம் வரும் வந்த உடன் சென்று விடும்
கோவம் இருக்கும் இடத்தில தானே குணம் இருக்கும்
ஒரு சில நேரம் கோவப்படாமல் இருக்க முடியவில்லை
இருந்தாலும் முயற்சிக்கிறேன்
நன்மை பயக்கும் தொகுப்பு
நன்றி தோழி சித்தர மகேஷ்
தங்கள் முதல் வருகைக்கும் ...
இதுவரைக்கும் கோபம் வரலை.. இதை படிச்ச பின்னால தான் லைட்டா கோபம் வருது ஹி ஹி
பிளாக் லே அவுட் செம
நல்லதொரு தகவல்...
♔ம.தி.சுதா♔ said...
/////கோபம் கூடாது.அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது./////
அப்படியா தங்கா அப்படின்னா நாம கோபப்படலாம் தானே....
அண்ணா உனக்குத்தான் கோபமே வராதே.அப்புறம் எப்பிடியாம் கோபப்படுறது...?
A.R.RAJAGOPALAN said...
மிகவும் (எனக்கு) உபயோகமான கற்கண்டு கருத்துக்கள்
வாழ்கையை வாழ்கையில் தெரிந்து கொள்ளவேண்டிய
முது முத்து சொற்கள்
நன்றி நவின்றதர்க்கு
பாராட்டு பகின்றதர்க்கு
நன்றி சகோதரா..
MANO நாஞ்சில் மனோ said...
//I'm not a dog,I'm a man.என்று 10 தடவை சொல்லிப் பார்.கோபம் உன்னை விட்டு தானாக ஓடி விடும்.//
இது சூப்பர் ஐடியாவா இருக்கே.....!!!!
ஆமால்ல.......
♔ம.தி.சுதா♔ said...
மிகவும் அருமையான ஆக்கம்... இந்தளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் அடங்கிப் போய் இருக்கிங்களோ பொறுங்க எல்லாத்தக்கும் இருக்கு...
அண்ணா பூவோட சேர்ந்து நாரும் மணம் வீசும்னு பெரியவா சொல்வாளே.நாங்களும் ஏதோ கொஞ்சம்.விடுங்களேன்.
@ரேவா
ரொம்ப நன்றி சகோதரி ...
@Ramani
ரொம்ப நன்றி சகோதரா...
@# கவிதை வீதி # சௌந்தர்
ரொம்ப நன்றி சகோதரா...
siva said...
உங்கட டெம்ப்ளட் மிக அருமை
கோவம் பற்றிய அவசியமான பதிவு
கோவம் வரும் வந்த உடன் சென்று விடும்
கோவம் இருக்கும் இடத்தில தானே குணம் இருக்கும்
ஒரு சில நேரம் கோவப்படாமல் இருக்க முடியவில்லை
இருந்தாலும் முயற்சிக்கிறேன்
நன்மை பயக்கும் தொகுப்பு
நன்றி தோழி சித்தர மகேஷ்
தங்கள் முதல் வருகைக்கும் ...
டெம்ப்ளட் என் அண்ணனோட Creation.
ரொம்ப நன்றி சகோதரா ..
சி.பி.செந்தில்குமார் said...
இதுவரைக்கும் கோபம் வரலை.. இதை படிச்ச பின்னால தான் லைட்டா கோபம் வருது ஹி ஹி
அடப்பாவிகளா.படிச்சவன் பாட்டை கெடுத்தவன் கதையா ஆகிடும் போல இருக்கே.........
I'm not a dog,I'm a man.
அருமையான ஐடியா.
கோவம் வந்தா ....அது கோவம்தான்.
பேச்சேயில்லை அப்புறம் !
very good. nice information to good life
'I'm not a dog,I'm a man.'
ஆமால்ல நான் மறந்தே போட்டன்.......................
நல்ல பதிவு! எனக்கென்றே சொன்னமாதிரி...! :-)
பதிவு அருமை.
Post a Comment