Saturday, 21 May 2011

உயிருக்கு ஓர் மடல்.


உயிருக்குள் ஓர் உயிர் 
உன்னை வைத்த என் உயிரில்
எவரையும் நிறுத்தி வைக்க முடியலடா

முழுமையான அன்பைக் கூட 
நான் அறிந்து கொண்டதும் 
உன்னிடத்திலே 
 எத்தனை பாசத்தினை 
நம்மிடையே பகிர்ந்து கொண்டோம்

இப்பொழுதெல்லாம் 
 என்னை உனக்கு பிடிப்பதில்லை
இருந்தும் 
என் மனம் உன்னையே சுற்றுதடா 

முன்னெல்லாம் அடிக்கடி 
யாரோ என்னிடத்தில் கூறும் வார்த்தை
இன்னமும் என் நெஞ்சிலே 
"உனக்கு அவனைத்தானே பிடிக்கும்,
அவனுக்கும் உன்னைத்தானே பிடிக்கும்"
இருந்தும் என்னிடத்தில்தான் 
ஏனிந்த கோபம்..?

அடிக்கடி நம்மிடத்தில் தோன்றி மறையும்
சின்னச் சின்ன ஊடல்களெல்லாம் 
அன்பின் வெளிப்பாடுதான் 
என்பதை அறிந்து கொண்டேனடா

மனசு தடுமாறும் போது கூட
உன் உறவில் மட்டும் மாற்றமில்லை
எதிர்பார்ப்புகள் நிராசையாகின்றபோதும்
உன்னிடம் நான் எதிர்பார்ப்பது
உன் அன்பு ஒன்றே  

உன்னிடம் பேச  துடிக்கிறது 
என் இதயம்  
ஏனடா உன்னிடம் மனம்திறந்து பேச
வார்த்தைகள் வர மறுக்குதடா
உன்மீதான அன்பை மட்டும்
வெளிப்படுத்த தெரியவில்லை
 

ஒரு முறையாவது 
வந்து பார்த்துவிட்டு போவாயா
என் மன அறைக்குள்

உனக்காக நான் சேகரித்த 
கனவுகள்
உன்னிடம் பகிர நினைத்த
நினைவுகள் 
ஒவ்வொன்றும் சிதறிக் கிடக்கின்றன

காத்திருக்கிறேனடா
காலம் கனியும்
உன் மனதில் ஓர் மாற்றம்
நம் வாழ்விலும் ஓர் வேனிற்காலம்

அன்று சேர்வோம்
மீண்டும் ஓர் புதிய வாழ்வின்
ஆரம்பத்தில்
இன்புற்று மகிழ்வோம்.



    

  
  
 
 
   
 

17 comments:

பிரிவின் வலியையும்
அன்பின் அன்யோன்னியத்தையும்
சொன்ன சுந்தர கவிதை
வாழ்த்துக்கள்

உசுரை உலுக்கிப்போகுது
உயிருக்கு எழுதும் கடிதம்
நல்ல உணர்வு பூர்வமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

அவன் அன்புக்காக ஏங்கி காத்திருக்கும் மனம்....

அசத்தல் அசத்தல்....!!!!!

உயிருக்கு ஒரு மடல், காத்திருப்பின் பின்னே உள்ள வலிகளின் கோர்வையாக வந்திருக்கிறது.

ஒரு முறையாவது
வந்து பார்த்துவிட்டு போவாயா
என் மன அறைக்குள//

கவிதையில் மனதினை கனக்கச் செய்ய இவையே போதும்,

காத்திருப்பிற்கு விரைவில் பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்.

அருமை.. வலிமிகுந்த வரிகளை ரசித்தேன். கொஞ்சம் சுருக்கி எழுதியிருக்கலாமோ என்றும் தோன்றிற்று.

தங்கா புரிதலின்மைக்கான காரணங்களை அறிந்து திருந்தினால் இல்லையே மன ரணங்கள்....

உணர்வை எழுதுவது கவி இல்லை தங்கச்சி உணர்வை உணர்ந்தெழுதுவது தான் கவி... 5 தரம் வாசித்தால் வார்த்தைகள் சுருங்கி பொருள் அதிகரிக்கும்...

காத்திருப்பதும்
அழகான
நினைவுகள்தான்
கவிதை
பிரிவு
அட
கவிதை அருமைங்க..


அவரு வருவருங்க...
நோ பீலிங்க்ஸ் so

ஸ்டார்ட் மியூசிக் ..
அட்ரா அட்ரா நாக்கு முக்கா...

ஒரு முறையாவது
வந்து பார்த்துவிட்டு போவாயா
என் மன அறைக்குள்

உனக்காக நான் சேகரித்த
கனவுகள்
உன்னிடம் பகிர நினைத்த
நினைவுகள்
ஒவ்வொன்றும் சிதறிக் கிடக்கின்றன


ஊடலின் பின்னே இருக்கும் காதலின் பிரிவு தரும் வலியை உணரச்செய்யும் கவிதை....

valithaan tholi eppoluthu meeetham kaaathalil

>>ஒரு முறையாவது
வந்து பார்த்துவிட்டு போவாயா
என் மன அறைக்குள்

உனக்காக நான் சேகரித்த
கனவுகள்

நெஞ்சை தொட்ட வரிகள்

ஹலோ எப்படி நலமாக இருக்கிறீர்களா
"Sutha Mahesh Thillai"மூலமாக உங்களைத்தொடர்பு கொள்கிறேன். நானும் வலைப்பூ ஒன்றை நடாத்தி வருவதோடு அதில் முற்றிலும் கவிதை எழுதி வருகிறேன்."Sutha Mahesh Thillai" அவர்கள் கூறினார்கள்; உங்களைப்பற்றி. மேலும் உங்களோடு தொடர்பு கொண்டால் மேலதிகமான பல்வேறு தகவல்களை கேட்டறியலாம் என்று கூறினார் அதனால்தான் தொடர்பு கொள்கிறேன்
உங்களது வலைப்பூவில் கவிதைகளைப்பாரத்தேன் மிகச்சிறப்பாக இருந்தது கவிதைகள். தொடர்ந்து இதே போன்று சிறப்பாக எழுத என் வாழ்த்துக்கள்.
என் வலைப்பூவையும் நீங்கள் பார்க்க வேண்டும் அதற்கு விமர்சனம் கூற வேண்டும் அது என் வலைப்பூவை விருத்தி செய்ய உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
இத்துடன் முடிக்கிறேன் உங்கள் பதிலின் எதிர்பார்ப்புடன்
நன்றி

என் வலைப்பூ முகவரி www.masteralamohamed.blogspot.com

//உன்னை வைத்த என் உயிரில்
எவரையும் நிறுத்தி வைக்க முடியலடா//

அருமையான வரிகள். இனிதே தொடரட்டும்

உன்னிடம் நான் எதிர்பார்ப்பது
உன் அன்பு ஒன்றே

நன்றாக இருக்கிறது...

உன்னிடம் பேச துடிக்கிறது
என் இதயம்
ஏனடா உன்னிடம் மனம்திறந்து பேச
வார்த்தைகள் வர மறுக்குதடா
உன்மீதான அன்பை மட்டும்
வெளிப்படுத்த தெரியவில்லை

எனது கவிதையை நேரமிருப்பின் படித்துப் பார்க்கவும்
http://tamilraja-thotil.blogspot.com/2011/11/blog-post_1517.html

மிக ஆழமான உணர்வுபூர்வமான கவிதை!

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More