This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday 26 November 2011

என் மனதை திருடிய பாடல்கள்.






பூங்காற்றில் வாசம் வரும்
இசை காற்றில் பாட்டு வரும்
எதிர் காற்றில் நாம் நிலைத்தாலே 
வாழ்ந்திடும் வாழ்வில் வெற்றி வரும்
அந்த வானம் நாம் தொடுவானம் 
நமக்கிங்கு ஓர்நாள் விடியாதா 
ஒரு தேடல் கண்ணில் உண்டு 
தினம் விடியல் விண்ணில் உண்டு
ஒரு நம்பிக்கைதான் வாழ்க்கை இன்று.
                                                                               ( பூங்காற்றில் )
இந்த உலகம் முதலில் ஏசும்
அது பின்னால் வாழ்த்திப் பேசும் 
நடை போடலாம் தடை தாண்டலாம்
விதை போட்டவன் மலர் பார்க்கலாம்
சிலர் கையில் ரேகை நம்பி
சிலர் கல்லை மணியை நம்பி
சுயமுள்ளவன் சுகம் காண்கிறான் 
பயமுள்ளவன் படை தோற்கிறான் 
இதயத்திலே இதயத்திலே இடிகள் எல்லாமே
சமயத்திலே சமயத்திலே படிகள் என்றாகும்
போராட்டமே புகழ் கூட்டுமே 
அலை போலவே நெஞ்சிலே என்றும் ஓய்வேது
தரை வாழ்விலே வாழ்விலே 
எதுவும் துணையில்லை
                                                                                ( பூங்காற்றில் )
என் பாட்டும் ஒரு நாள் வெல்லும்
செங்கோட்டை வரையில் செல்லும் 
போராடுவேன் போராடுவேன்
ஒரு நாளில் நான் புகழ் சூடுவேன்
ஒரு கல்லும் வைரம் ஆக 
அது மகுடம் ஏறிப் போக
இந்த பூமியின் அடி ஆழத்தில் 
மறைவாகுமே உயர்வாகுமே 
கனவுகளே இல்லையென்றால் வாழ்வே தூக்கம்தான்
முயற்சிகளால் வாழ்வினிலே முடியும் எல்லாம்தான்
முடியாததே கிடையாதடா 
எதிர் பார்க்கலாம் பார்க்கலாம் எங்கள் திறமைதான் 
வரவேற்கலாம் ஏற்கலாம் நாளை உலகம்தான்.
                                                                                  ( பூங்காற்றில் )


வாழ்கையில எத்தனையோ ஆயிரம் பாடல்களை நாம் கேட்டதுண்டு.
ஆனாலும் கூட நம் மனசில அழியாமல் நிற்பது ஓர் சில பாடல்கள்தான்.அந்த வகையில் என் மனசில் அழியாமல் நிற்கும் ஓர் பாடல்தான் இதுவும்.சோர்ந்து துவழும் நாட்களிலெல்லாம் இந்த பாடலைக் கேட்பதுண்டு.அப்போதெல்லாம் எனக்குள்ளும் ஓர் தன்னம்பிக்கை துளிர்விடும்.

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஓர் இளைஞனின் ஓர் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் ஓர் பாடல்.போராட்டம் நிறைந்த வாழ்க்கையிலும் சோர்ந்துவிடாமல் மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் தன் இலக்கை அடைய வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு மனதில் ஓர் நம்பிக்கையைத் தரக் கூடிய ஓர் பாடல்.மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஓர் பாடல்.முன்னேறத் துடிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையினை மிக அழகாக வெளிப்படுத்திய கவிஞரின் திறமையை நிச்சயம் பாராட்டித்தான் ஆகணும்.

பாடல் பற்றிய மேலதிக தகவல் என்னால் வழங்க முடியவில்லை.அது பற்றி தெரிந்தவர்கள் இங்கே பகிரலாம்.

என்றும் அன்புடன்.
சித்தாரா மகேஷ்.

Sunday 20 November 2011

நிஜமாகிப்போன வாழ்க்கை.



முடிவேதுமின்றி 
தனிமையில் கழியும் என் நாட்கள்
உன்னிடம் பகிராமலே
மனதில் புதையும் சோக சுக ராகங்கள்
வெளியிட முடியாது
மறைக்கப்பட்ட ஆசை கனவுகள்


எப்போதோ மறுக்கப்பட்ட
 நம் பாச நேசங்கள் 
மறக்க முடியாத 
உன் நினைவு அலைகள்
உன்னையே ஞாபகப்படுத்தும்
நீ தந்த நினைவுச் சின்னங்கள்


உன்னாலே  தூரமாகிப்போன 
என் உறக்கம்
கனவுகளுக்காய் காத்திருக்கும்
இரவுகள் 
விட்டத்தையே பார்த்திருக்கும்
என் விழிகள் 

என்னடா வாழ்க்கை இது......?


Tuesday 1 November 2011

நீ..நான்..யாரோ..


எப்போதும் வார்த்தைகளால்
மட்டுமே உன்னுடன் பேசிய நெஞ்சம்
இப்போது கொஞ்சம் 
மௌனங்களிலும் நேசத்தை 
பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறது 

மனங்களைப் படித்தவர்களே 
நம் மனதை உணராதபோது 
மற்றவர்களை நாம் ஏன் 
தப்பாக நோக்கணும்

உன் நினைவுகளால்
தினந்தினம் நான் படும் அவஸ்தைக்கு
உன் பிரிவுதான் 
தீர்வாக எழுதிய நெஞ்சம் 
ஓர் நாள் நமக்காகவும் கலங்கும்
அன்றே நமக்கான நாள்

என்றோ ஓர் நாள்
சேமித்து வைத்த உன் நினைவுகள்தான்
இன்று என் உயிர்த்துடிப்பை 
வழிப்படுத்தும் நிலை 

நீயில்லாத என் பொழுதுகளை
எண்ணிப் பார்க்கிறேன்
இப்போது உனக்காகச் சிந்தக்கூட
விழிகளினுள் ஏதுமில்லை
வலிகளினூடும் உன் நினைவுகளில்
என் வாழ்வு தொடர்கிறது

உனக்காக மட்டும் உருகிய நெஞ்சம்
இப்போது எதற்கும் உருகவில்லையே
ஏனடா.....????



Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More