Sunday, 20 November 2011

நிஜமாகிப்போன வாழ்க்கை.



முடிவேதுமின்றி 
தனிமையில் கழியும் என் நாட்கள்
உன்னிடம் பகிராமலே
மனதில் புதையும் சோக சுக ராகங்கள்
வெளியிட முடியாது
மறைக்கப்பட்ட ஆசை கனவுகள்


எப்போதோ மறுக்கப்பட்ட
 நம் பாச நேசங்கள் 
மறக்க முடியாத 
உன் நினைவு அலைகள்
உன்னையே ஞாபகப்படுத்தும்
நீ தந்த நினைவுச் சின்னங்கள்


உன்னாலே  தூரமாகிப்போன 
என் உறக்கம்
கனவுகளுக்காய் காத்திருக்கும்
இரவுகள் 
விட்டத்தையே பார்த்திருக்கும்
என் விழிகள் 

என்னடா வாழ்க்கை இது......?


3 comments:

ஏன் இந்த சோகம்

உங்கள் கவிதை அமைந்த விதம், அதற்கான படத்தேர்வு அழகியல். கவிதையில் லேசான சோகம் இழையோடுவதை வரிகள் மட்டுமின்றி படமும் சொல்கிறது

வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் கவிதைப் பயணம்

சித்தாரா...ஏன் இத்தனை வெறுப்பு.சந்தோஷம் எம் கைகளில்தான் !

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More