This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 28 June 2012

Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?

கனவுகள் தேடும் அந்திப் பொழுதில் அநேக நமஸ்காரங்களுடன் மீண்டும் நான் உங்கள் சித்தாரா மகேஷ்.


பரபரப்பான காலை நேரம் அது.வழமையை விட அன்று வேலைக்கு தயாராக கொஞ்சம் தாமதமாகிவிட்டிருந்தது.ஆனாலும் சோர்ந்து விடாமல் சைக்கிளை வேகமாகவே எட்டி மிதித்தாள் சாரா.சிந்தனைகள் எங்கோ சென்றுவிட்ட நிலையில் வழமையான பாதை வழியே சென்று கொண்டிருந்தாள்.
                  Good morning.சுயத்தில் மீண்டவளாய் விழித்தாள்.குரல் வந்த வழி நோக்கினாள்.முன்பே அறிமுகமான முகம் பதிலுக்கு புன்னகையுடன் வணக்கம் மொழிந்தாள்.நீங்க “அன்னை நாகா பூட் சிற்றியிலயா வேர்க் பண்றீங்க?” ஆமா என பதிலுரைத்தாள்.என்னை உங்களுக்கு தெரியுமா?என் பெயர்...என அவன் உரையாடிய வண்ணம் தொடர்ந்தான்.தொடரும் உரையாடலை விரும்பாதவளாய் பாதையில் கவனத்தை செலுத்தினாள்.
                 அவனும் அவளை தொடர்ந்தான்.Excuse me,”நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?” திடுக்கிட்டு திரும்பினாள் அவன் பக்கம்.மெல்லிய புன்னகையுடன் அவளைக் காதலுடன் நோக்கினான்.அவன் விழியைத் தொடர முடியாதவளாய் பெண்மைக்கே உரிய நாணத்துடன் தலை குனிந்தாள்.அவள் மெளனத்தை உணர்ந்தவனாய், ”அவசரமில்லை.நீங்க யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க.” சொல்லிவிட்டு அவள் முன்னே தொடர்ந்தான்.அப்போதுதான் அவளுக்கு மூச்சு வந்தது.
                பெருமூச்சுடன் தலை நிமிர்ந்தாள். “என்னங்க உங்க பொட்டு கொஞ்சம் சின்னதாய் இருந்தா ரொம்ப அழகாய் இருக்கும்.” ஏதும் புரியாதவளாய் சிறுபுன்னகையுடன் அவனை நோக்கி தலையசைத்தாள்."Bye.see you later." குறுந்தாடி பூத்த முகத்தில் புன்முறுவலுடன் அவளிடம் விடைபெற்றான்.
                அவன் விடைபெற்ற பின்னரும் அவள் கண்களில் அவன் முகம் நிழலாடியது.அதிகம் படித்திராவிட்டாலும் ஏதோ ஓரளவுக்கு படித்திருந்தான். அரச அலுவலகத்தில் கடமைபுரிகிறான்.பார்க்கும் பெண்கள் கொஞ்சம் தடுமாறிவிடும் அழகும், கண்களில் கனிவும் மிதமாய், கீறிவிட்ட குறுந்தாடி பூத்த புன்முறுவலுடன் அடிக்கடி அவள் வழியில் கடப்பதை அவள் உணராமலில்லை.
                இருந்தும் அவள் மனம் ஒன்றை மட்டும் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டது.தவறியும் காதலில் விழுந்து விடாதே...
                நினைவு திரும்பியவளாய் கடிகாரத்தை பார்த்தாள்.நேரம் 9.15 ஐக் கடந்துவிட்டிருந்ததை உணர்ந்தவளாய் வேகமாக சைக்கிளை மிதித்தாள். அவள் அலுவலகமும் அண்மித்தது.அவன் நினைவை மறந்து வேலையில் மூழ்கினாள்.


x_3c9fa917

Tuesday, 12 June 2012

எனக்கும் ஓர் காதல் வேண்டும்.

மீண்டும் ஒரு இனிய மாலைப்பொழுதில் என் கனவில் பூத்த என் காதலுடன் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.


செல்லக் குறும்புகளால்
என் காதோரம்
சில்வண்டாய் ரீங்காரம் பாடிட

சொல்லம்புகளால்
என் செல்களை துளைத்திட

துக்கம் கொண்டு 
நெஞ்சினில் சாய்கையில்
தென்றலாய் என் தலை கோதிட 
கடற்கரை மணலில் 
அவன் தோளுரசி 
காலார நடை பயின்றிட
முழு நிலாப்பொழுதில் 
நிலாச் சோற்றை என் கையால் 
அவனுக்கு ஊட்டிட
ஓர் திருவிழா மாலையில் 
நல்லூர் மணலில் 
என்னோடமர்ந்து சுண்டல்
சுவைத்து மகிழ்ந்திட
என் ஊர்த் தெருவில்
பார்ப்போர் கண்விரிய
அவன் கை கோர்த்து
நகர்வலம் சென்றிட
என் கண்களினால் காதல் பேசி 
கவிதைகளால் 
அவன் உள்ளமதை உரசிட
என்னை மட்டும் நேசித்து
எனக்காக மட்டும் சுவாசித்திட
என் காதலை அவன் மறந்து 
அவன் நினைவினில் மட்டும் வாழ்ந்திட
இவையெல்லாம் நிகழ்ந்திட
கனவில் மட்டும் 
எனக்கும் ஓர் காதல் வேண்டும்...

x_3c8f649c

Tuesday, 5 June 2012

விடுகதையாய் தொடரும் உறவுகள்.அனைவருக்கும் என் அநேக நமஸ்காரங்கள்.

நீண்டதொரு இடைவெளியின் பின் தங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இன்பமாய் கழிந்து கொண்டிருந்த என் வாழ்வில் ஒரு புயலடித்து ஓய்ந்தமாதிரி ஒருவாறு தடைகளையெல்லாம் தகர்த்தெறிஞ்சு சுமூகமான ஒரு நிலைக்கு வந்தாச்சு.(நான் வேலையை சொன்னேங்க). இனி எந்த தடையுமின்றி வலையுலகத்தை ஒரு வலம் வரலாமென்று நினைக்கிறேன்.(இது எத்தனை நாளைக்கென்று பார்க்கலாம் ஹ ஹ ஹ ஹா என்று யாரோ மனசுக்குள்ளே சிரிக்கிறதும் எனக்கு கேட்குதுங்கோ- அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா)

நீண்ட நாளா என் மனச குடைஞ்சு கொண்டிருந்த ஒரு விடயம் என்னவென்றால்,

* அண்ணன் தங்கை பாசமென்றது எந்தளவுக்கு உண்மையானது?
* ஒரு அண்ணன், தங்கை மேல வச்சிருக்கிற நேசம் உண்மையானதா, ஒரு தங்கை, அண்ணன் மேல வச்சிருக்கிற நேசம் உண்மையானதா?
* இவை வாழ்வின் இறுதிவரை புரிந்துணர்வுடன் தொடருமா இல்லை இளமைக் காதல் போன்று பாதியில் நேசம் உடைந்து போவதா?

சிறு வயதில் இருந்தே அண்ணன் என்றாலே கொள்ளைப் பிரியம்.எவரிடமும் விட்டுத்தர மாட்டேன்.அவனை யாராவது ஏதும் சொன்னால் அவர்களை இரண்டில் ஒன்று பார்த்து விட்டுத்தான் மறு வேலை.

உதாரணமாக, நானே வீட்டின் கடைக் குட்டி (இது எனக்கு நானே வச்சுக் கொண்ட பெயர்) என்பதால் ஏதாவது தின்பண்டம் பகிரும் பொறுப்பு என்னிடமே அதிகம் வருபதுண்டு.அப்போதெல்லாம் முதலில் அண்ணனுக்கென்று எடுத்து வச்சிடுவன்.அதை யார் கேட்டாலும் தரமாட்டேன்.இப்போது கூட அவனுக்கென்று ஒரு பொருள் வாங்கினால் அதை பயன்படுத்த எவரையும் அனுமதிக்க விடமாட்டேன். இதனால எனது அக்காவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டையும் நடக்கும்.அவ கூட அடிக்கடி சொல்வதுண்டு.உனக்கும் அண்ணனைத்தானே பிடிக்கும்.அவனுக்கும் உன்னைத்தானே பிடிக்கும்.(இந்த இடத்தில அக்கா கொஞ்சம் யோசிக்கணும்).

உலகத்தில அண்ணன் தங்கை பாசம்தான் இருக்கணுமா? ஏன் அக்கா தம்பி பாசம்கூட இருக்கலாம்தானே? அப்போதெல்லாம் இதை பெரிதாக எடுத்துக்கிறதில்ல.இப்ப யோசிச்சுப் பார்க்கிறப்போ எனக்கு தோணும்.
அண்ணன் மேல இருக்கிற பிரியத்தில எந்தவொரு வயதுக்கு மூத்த ஆணென்றாலும் உடனே அண்ணா என்றுதான் அழைப்பதுண்டு.என்னதான் ஒரு பெண் அண்ணனாக நினைத்து பழகினாலும் எல்லா ஆண்களும் பெண்களை ஒரு தங்கையாய் நினைப்பதில்லை (இது காலம் கடந்த ஞானம்).

அண்ணாவுக்கும் எனக்குமிடையில் எத்தனையோ சிறு சிறு சண்டைகள் வருவதுண்டு.அடுத்த நிமிசமே அவன் மேல் இருந்த கோபம் மாறி அண்ணா என்று அவனிடம் ஓடிடுவேன்.அக்காகூட ஊடல் கொண்டு பல நாள் பேசாதிருந்தது அன்றுமுண்டு இன்றுமுண்டு.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இதுவரை இருவருமே உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த பாசத்தை வெளிக்காட்டியதில்லை.அண்ணன் மேலிருந்த பாசங்கள் கற்பனைக் கோட்டைகளைத் தாண்டி சில வேளைகளில் ஏக்கங்களானதுமுண்டு.

எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அண்ணன், தங்கைகளை பார்க்கும் போது சிரித்துக் கொண்டதுண்டு.எப்போதும் அடிபட்டு மனதை காயப்படுத்திக் கொள்ளாமல் மனதோடு பாசம் இருந்தாலும் அளவோடு பாசத்தை வெளிப்படுத்துவது எவ்வளவு நல்லதென்று.

ஆனால் இப்போதுதான் மனம் தெளிவடைந்தது.பாசங்களை வெளிப்படுத்தாது மனசுக்குள் பூட்டி வைப்பதை விட செல்லச் சண்டைகளின் வலிகளின் பின்னால் இருவருக்குமிடையிலான புரிந்துணர்வுடன் கூடிய இன்பமும் உள்ளது.இதை உணரும்போதே அதன் இனிமை புரியும்.

என்னைப் பொறுத்தவரை புரிந்துணர்வுடன் தொடரும் அண்ணன் தங்கை நேசமென்பது, உயிருள்ளவரை தொடரும் உறவாகத்தான் இருக்கும் என்பது உறுதியே.கால ஓட்டங்களில் திசைமாறிச் செல்லும் வாழ்க்கையிலும் தொடரும் உறவாகவே இந்த நேசம் நிலைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.ஆசையோடு தடவிடும் கையில்
யானைகூட அடங்கிடும் நொடியில்
உறவை மனது சேரும்போது
பெருகிடும் சுகமே

பிழை எப்போது உலகினில் பிறந்திடும்
கரம் பற்றாத பொழுதினில் வளர்ந்திடும்
துளி கண்ணீரிலே கண்ணீரிலே
அடடா சந்தோசமே....Photobucket

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More