அனைவருக்கும் என் அநேக நமஸ்காரங்கள்.
நீண்டதொரு இடைவெளியின் பின் தங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இன்பமாய் கழிந்து கொண்டிருந்த என் வாழ்வில் ஒரு புயலடித்து ஓய்ந்தமாதிரி ஒருவாறு தடைகளையெல்லாம் தகர்த்தெறிஞ்சு சுமூகமான ஒரு நிலைக்கு வந்தாச்சு.(நான் வேலையை சொன்னேங்க). இனி எந்த தடையுமின்றி வலையுலகத்தை ஒரு வலம் வரலாமென்று நினைக்கிறேன்.(இது எத்தனை நாளைக்கென்று பார்க்கலாம் ஹ ஹ ஹ ஹா என்று யாரோ மனசுக்குள்ளே சிரிக்கிறதும் எனக்கு கேட்குதுங்கோ- அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா)
நீண்ட நாளா என் மனச குடைஞ்சு கொண்டிருந்த ஒரு விடயம் என்னவென்றால்,
* அண்ணன் தங்கை பாசமென்றது எந்தளவுக்கு உண்மையானது?
* ஒரு அண்ணன், தங்கை மேல வச்சிருக்கிற நேசம் உண்மையானதா, ஒரு தங்கை, அண்ணன் மேல வச்சிருக்கிற நேசம் உண்மையானதா?
* இவை வாழ்வின் இறுதிவரை புரிந்துணர்வுடன் தொடருமா இல்லை இளமைக் காதல் போன்று பாதியில் நேசம் உடைந்து போவதா?
சிறு வயதில் இருந்தே அண்ணன் என்றாலே கொள்ளைப் பிரியம்.எவரிடமும் விட்டுத்தர மாட்டேன்.அவனை யாராவது ஏதும் சொன்னால் அவர்களை இரண்டில் ஒன்று பார்த்து விட்டுத்தான் மறு வேலை.
உதாரணமாக, நானே வீட்டின் கடைக் குட்டி (இது எனக்கு நானே வச்சுக் கொண்ட பெயர்) என்பதால் ஏதாவது தின்பண்டம் பகிரும் பொறுப்பு என்னிடமே அதிகம் வருபதுண்டு.அப்போதெல்லாம் முதலில் அண்ணனுக்கென்று எடுத்து வச்சிடுவன்.அதை யார் கேட்டாலும் தரமாட்டேன்.இப்போது கூட அவனுக்கென்று ஒரு பொருள் வாங்கினால் அதை பயன்படுத்த எவரையும் அனுமதிக்க விடமாட்டேன். இதனால எனது அக்காவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டையும் நடக்கும்.அவ கூட அடிக்கடி சொல்வதுண்டு.உனக்கும் அண்ணனைத்தானே பிடிக்கும்.அவனுக்கும் உன்னைத்தானே பிடிக்கும்.(இந்த இடத்தில அக்கா கொஞ்சம் யோசிக்கணும்).
உலகத்தில அண்ணன் தங்கை பாசம்தான் இருக்கணுமா? ஏன் அக்கா தம்பி பாசம்கூட இருக்கலாம்தானே? அப்போதெல்லாம் இதை பெரிதாக எடுத்துக்கிறதில்ல.இப்ப யோசிச்சுப் பார்க்கிறப்போ எனக்கு தோணும்.
அண்ணன் மேல இருக்கிற பிரியத்தில எந்தவொரு வயதுக்கு மூத்த ஆணென்றாலும் உடனே அண்ணா என்றுதான் அழைப்பதுண்டு.என்னதான் ஒரு பெண் அண்ணனாக நினைத்து பழகினாலும் எல்லா ஆண்களும் பெண்களை ஒரு தங்கையாய் நினைப்பதில்லை (இது காலம் கடந்த ஞானம்).
அண்ணாவுக்கும் எனக்குமிடையில் எத்தனையோ சிறு சிறு சண்டைகள் வருவதுண்டு.அடுத்த நிமிசமே அவன் மேல் இருந்த கோபம் மாறி அண்ணா என்று அவனிடம் ஓடிடுவேன்.அக்காகூட ஊடல் கொண்டு பல நாள் பேசாதிருந்தது அன்றுமுண்டு இன்றுமுண்டு.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இதுவரை இருவருமே உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த பாசத்தை வெளிக்காட்டியதில்லை.அண்ணன் மேலிருந்த பாசங்கள் கற்பனைக் கோட்டைகளைத் தாண்டி சில வேளைகளில் ஏக்கங்களானதுமுண்டு.
எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அண்ணன், தங்கைகளை பார்க்கும் போது சிரித்துக் கொண்டதுண்டு.எப்போதும் அடிபட்டு மனதை காயப்படுத்திக் கொள்ளாமல் மனதோடு பாசம் இருந்தாலும் அளவோடு பாசத்தை வெளிப்படுத்துவது எவ்வளவு நல்லதென்று.
ஆனால் இப்போதுதான் மனம் தெளிவடைந்தது.பாசங்களை வெளிப்படுத்தாது மனசுக்குள் பூட்டி வைப்பதை விட செல்லச் சண்டைகளின் வலிகளின் பின்னால் இருவருக்குமிடையிலான புரிந்துணர்வுடன் கூடிய இன்பமும் உள்ளது.இதை உணரும்போதே அதன் இனிமை புரியும்.
என்னைப் பொறுத்தவரை புரிந்துணர்வுடன் தொடரும் அண்ணன் தங்கை நேசமென்பது, உயிருள்ளவரை தொடரும் உறவாகத்தான் இருக்கும் என்பது உறுதியே.கால ஓட்டங்களில் திசைமாறிச் செல்லும் வாழ்க்கையிலும் தொடரும் உறவாகவே இந்த நேசம் நிலைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
ஆசையோடு தடவிடும் கையில்
யானைகூட அடங்கிடும் நொடியில்
உறவை மனது சேரும்போது
பெருகிடும் சுகமே
பிழை எப்போது உலகினில் பிறந்திடும்
கரம் பற்றாத பொழுதினில் வளர்ந்திடும்
துளி கண்ணீரிலே கண்ணீரிலே
அடடா சந்தோசமே....

10 comments:
வாங்க சிறிய ஒரு இடைவெளியின் பின் சந்திக்கிறேன்..
உண்மையில் அன்னன் தங்கை பாசம் என்பது மிகவும் வித்தியாசமான ஒன்றுதான் செல்லச் சண்டைகளின் பின் சேரும் உறவுகளில் இந்த உறவுதான் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் உறவு.
பாசங்களை வெளிப்படுத்தாது மனசுக்குள் பூட்டி வைப்பதை விட செல்லச் சண்டைகளின் வலிகளின் பின்னால் இருவருக்குமிடையிலான புரிந்துணர்வுடன் கூடிய இன்பமும் உள்ளது.இதை உணரும்போதே அதன் இனிமை புரியும்.
நிச்சயமான உண்மை சித்தாரா... பதிவுகள் தொடரட்டும், கசப்புகள் மறையட்டும் தங்கையே... தொடர்ந்து எழுதுங்கள்...
உங்கள் பாச கூடு வித்தியாசமானது. வெளியே சிரித்து உள்ளே முறாய்ப்பதிலும் விட உயிர் பிைணப்போடு இருப்பதே உண்மையான பாசம்
உண்மையில் அவர்கள் உங்களை மற்றவரிடம் விட்டுக் கொடுக்காமல் பேசுகையில் தான் உண்மையான பாசம் தெரியும். ஆனால் பெரும்பாலும் அதை காணவோ அறியவோ தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது
சித்தாரா அக்கா மீண்டும் சந்திப்பது மிகவே மகிழ்சி..!உறவுகளின் நெருக்கங்களையும் நேசங்களையும் சில சமயங்களில் பிரிவுகள் தான் உணர்த்திச்செல்லும்.உண்மையான பாசம் என்றும் தோற்காது அக்கா..!
@சிட்டுக்குருவி,
வாருங்கள் சகோ.உங்க வருகையை இட்டு மிக்க மகிழ்ச்சி.
@ரேவா ,
நிச்சயமா அக்கா தங்கள் ஆசியுடன் என் பயணத்தை தொடர்வேன்.உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா
♔ம.தி.சுதா♔
//உண்மையில் அவர்கள் உங்களை மற்றவரிடம் விட்டுக் கொடுக்காமல் பேசுகையில் தான் உண்மையான பாசம் தெரியும். ஆனால் பெரும்பாலும் அதை காணவோ அறியவோ தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது//
உண்மைதான் அண்ணா.புரிந்து கொண்டேன்.ஆனாலும் ஏதோ மனசில் ஒரு ஏக்கம்.
Athisaya
வாருங்கள் தோழியாரே மறுமொழிக்கு தாமதமானதற்கு மன்னிக்கவும்.
//உறவுகளின் நெருக்கங்களையும் நேசங்களையும் சில சமயங்களில் பிரிவுகள் தான் உணர்த்திச்செல்லும்.உண்மையான பாசம் என்றும் தோற்காது அக்கா..!//
உறவுகளின் இனிமையும் பிரிவுகளின் கொடுமையும் எல்லாம் அனுபவங்கள் உணர்த்தும்.
இப்படி ஒரு பாசக்கூடா! எல்லாம் உறவின் சிக்கல்தான்/ஹீஈஈஈஈஈ
Post a Comment