Tuesday, 12 June 2012

எனக்கும் ஓர் காதல் வேண்டும்.

மீண்டும் ஒரு இனிய மாலைப்பொழுதில் என் கனவில் பூத்த என் காதலுடன் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.


செல்லக் குறும்புகளால்
என் காதோரம்
சில்வண்டாய் ரீங்காரம் பாடிட

சொல்லம்புகளால்
என் செல்களை துளைத்திட

துக்கம் கொண்டு 
நெஞ்சினில் சாய்கையில்
தென்றலாய் என் தலை கோதிட 
கடற்கரை மணலில் 
அவன் தோளுரசி 
காலார நடை பயின்றிட
முழு நிலாப்பொழுதில் 
நிலாச் சோற்றை என் கையால் 
அவனுக்கு ஊட்டிட
ஓர் திருவிழா மாலையில் 
நல்லூர் மணலில் 
என்னோடமர்ந்து சுண்டல்
சுவைத்து மகிழ்ந்திட
என் ஊர்த் தெருவில்
பார்ப்போர் கண்விரிய
அவன் கை கோர்த்து
நகர்வலம் சென்றிட
என் கண்களினால் காதல் பேசி 
கவிதைகளால் 
அவன் உள்ளமதை உரசிட
என்னை மட்டும் நேசித்து
எனக்காக மட்டும் சுவாசித்திட
என் காதலை அவன் மறந்து 
அவன் நினைவினில் மட்டும் வாழ்ந்திட
இவையெல்லாம் நிகழ்ந்திட
கனவில் மட்டும் 
எனக்கும் ஓர் காதல் வேண்டும்...

x_3c8f649c

29 comments:

சித்தாரா அக்கா வணக்கம்,எனக்கும் ஓர் காதலன் வேண்டும்??????!!!!!!
அழகு...!அக்கா நான் உதவி 1 செய்யவா?,,இல்லல்ல அது உங்களால தான் முடியும்.!சந்திப்போம் சொந்தமே!!

தங்கா மற்றவருக்கு கருத்திடாமல் எவ்வளவு நல்ல ஆக்கம் பைடத்தாலும் நீங்க மட்டுமே வாசிக்க வேண்டியிருக்கும்

வலிகள் வேண்டும் என்று சொல்
தருகிறேன்

காதல் !!!

******************

உங்கள் கவிதை அருமை ... !

காதல் வரிகளுடன் மழையில் நனையும் அந்த ஜோடி சூப்பர்.
//ஓர் திருவிழா மாலையில்
நல்லூர் மணலில்
என்னோடமர்ந்து சுண்டல்
சுவைத்து மகிழ்ந்திட// ஆமா! காசு யார் கொடுத்தது?

தங்கள் கவிதையே கனவில் கண்ட காதல் தானே!
நன்று!

சா இராமாநுசம்

கனவில் மட்டும் எனக்கும் ஒரு காதல் வேண்டும். அருமை. நிஜக்காதல் வலிகளை நிரம்பத் தரும். கனவுக் காதல் என்றும் மகிழ்வையே தரும். இல்லையா... கவிதையை மிக ரசித்தேன்.

அது என்னங்க கனவில் மட்டும் . நிஜத்தில் வேண்டாமா ? கவிதை அழகு .

@ Athisaya,
தோழி நீ சின்னப் பொண்ணும்மா.உனக்கு இப்ப இதெல்லாம் வேணாம்மா.சொன்னா கேளும்மா!

@ ♔ம.தி.சுதா♔,
மன்னிச்சுக்கோ அண்ணா.நான் இனி உன் வழி நடக்கிறேன்.

@ இக்பால் செல்வன்,
//வலிகள் வேண்டும் என்று சொல்
தருகிறேன்

காதல் !!! //

நண்பா அதுதான் வலியில்லாக் காதல் கேட்கிறேன்.மிக்க நன்றி நண்பா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

@ விச்சு,
//காதல் வரிகளுடன் மழையில் நனையும் அந்த ஜோடி சூப்பர்.
//ஓர் திருவிழா மாலையில்
நல்லூர் மணலில்
என்னோடமர்ந்து சுண்டல்
சுவைத்து மகிழ்ந்திட// ஆமா! காசு யார் கொடுத்தது?//

நன்றி நண்பா.அப்பாவின் சட்டைப் பைக்குள் சுட்டுக்கலாம்.ஹ ஹ ஹ ஹா...

@ புலவர் சா இராமாநுசம்,
நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

@ பா.கணேஷ்,
//கனவில் மட்டும் எனக்கும் ஒரு காதல் வேண்டும். அருமை. நிஜக்காதல் வலிகளை நிரம்பத் தரும். கனவுக் காதல் என்றும் மகிழ்வையே தரும். இல்லையா...//

உண்மைதான் சகோதரா.
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

@ Sasi Kala,
//அது என்னங்க கனவில் மட்டும் . நிஜத்தில் வேண்டாமா ? கவிதை அழகு .//

கனவுக் காதல் ரொம்பவே இனிமையுங்கோ.எல்லாம் அனுபவிச்சுப் பார்த்தால்தான் புரியும்.வாங்களேன் கனவு காணலாம்?

கமெண்ட்டு போடுபவர்களை எல்லாம் அண்ணன் என்று சொல்லிகொண்டிருந்தால் காதலன் கிடைப்பது மிக அரிது!!

I know, u are going to call me "Anna". however, i wont be sad.

@ Katz,
சகோதரா அதுதான் நான் நிஜத்தில காதல் கேட்கலயே???ஆகவே நீங்க கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லையே!!!

நேத்தைக்கே வந்தேன் படிக்க முடியாமல் போய்விட்டது சரி இன்னைக்காவது படிப்போம் எண்று வந்தால் அத்ற்குள்ளும் அடுத்த வேலை வந்து விட்டது...:(

கவிதை நன்றாக இருக்கிறது.... எனக்கும் ஒரு காதல் தாங்கோ..கனவில அல்ல..:)

தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்

நீ போய் தூங்கு முதல்ல - அப்பதான் கனவு வரும்! பிறகுதான் மத்ததெல்லாம்!

@சிட்டுக்குருவி,
நிச்சயமா சகோதரா.நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

@நிலவன்பன்,
அதைத்தானே ரொம்ப நாளா பண்ணிட்டிருக்கேன்பா..

சில சந்தோஷங்கள் கனவில் மட்டும்தானோ என்கிறமாதிரி இருக்கு வரிகள்.ஆனாலும் காதல் சுகம் சித்தாரா !

‘கொய்யா முத்தம்’...பறிக்காத..எடுக்கப்படாத...என்று அர்த்தப்படும் !

//சில சந்தோஷங்கள் கனவில் மட்டும்தானோ என்கிறமாதிரி இருக்கு வரிகள்.ஆனாலும் காதல் சுகம் சித்தாரா !//

கனவில் காணும் இன்பம் எவராலும் தட்டிப் பறிக்க முடியா, நாம் மட்டும் உணர்ந்து கொள்ளும் ஓர் தனிச்சுகம் அக்கா.அந்த அனுபவம் ரொம்ப இனிமை.

//‘கொய்யா முத்தம்’...பறிக்காத..எடுக்கப்படாத...என்று அர்த்தப்படும் !//
கொஞ்சம் புரிந்தது.ஆனாலும் சின்ன சந்தேகம் அதுதான் கேட்டேன் அக்கா.

@திண்டுக்கல் தனபாலன்,
நன்றி சகோதரா தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

ரொம்ப நல்லா லவ்வி இருக்கிங்க..,

@.αηαη∂...
ரொம்ப நன்றி சகோதரா.

நீங்க சொன்னா சரிங்ககககக

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More