கனவுகள் தேடும் அந்திப் பொழுதில் அநேக நமஸ்காரங்களுடன் மீண்டும் நான் உங்கள் சித்தாரா மகேஷ்.
பரபரப்பான காலை நேரம் அது.வழமையை விட அன்று வேலைக்கு தயாராக கொஞ்சம் தாமதமாகிவிட்டிருந்தது.ஆனாலும் சோர்ந்து விடாமல் சைக்கிளை வேகமாகவே எட்டி மிதித்தாள் சாரா.சிந்தனைகள் எங்கோ சென்றுவிட்ட நிலையில் வழமையான பாதை வழியே சென்று கொண்டிருந்தாள்.
Good morning.சுயத்தில் மீண்டவளாய் விழித்தாள்.குரல் வந்த வழி நோக்கினாள்.முன்பே அறிமுகமான முகம் பதிலுக்கு புன்னகையுடன் வணக்கம் மொழிந்தாள்.நீங்க “அன்னை நாகா பூட் சிற்றியிலயா வேர்க் பண்றீங்க?” ஆமா என பதிலுரைத்தாள்.என்னை உங்களுக்கு தெரியுமா?என் பெயர்...என அவன் உரையாடிய வண்ணம் தொடர்ந்தான்.தொடரும் உரையாடலை விரும்பாதவளாய் பாதையில் கவனத்தை செலுத்தினாள்.
அவனும் அவளை தொடர்ந்தான்.Excuse me,”நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?” திடுக்கிட்டு திரும்பினாள் அவன் பக்கம்.மெல்லிய புன்னகையுடன் அவளைக் காதலுடன் நோக்கினான்.அவன் விழியைத் தொடர முடியாதவளாய் பெண்மைக்கே உரிய நாணத்துடன் தலை குனிந்தாள்.அவள் மெளனத்தை உணர்ந்தவனாய், ”அவசரமில்லை.நீங்க யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க.” சொல்லிவிட்டு அவள் முன்னே தொடர்ந்தான்.அப்போதுதான் அவளுக்கு மூச்சு வந்தது.
பெருமூச்சுடன் தலை நிமிர்ந்தாள். “என்னங்க உங்க பொட்டு கொஞ்சம் சின்னதாய் இருந்தா ரொம்ப அழகாய் இருக்கும்.” ஏதும் புரியாதவளாய் சிறுபுன்னகையுடன் அவனை நோக்கி தலையசைத்தாள்."Bye.see you later." குறுந்தாடி பூத்த முகத்தில் புன்முறுவலுடன் அவளிடம் விடைபெற்றான்.
அவன் விடைபெற்ற பின்னரும் அவள் கண்களில் அவன் முகம் நிழலாடியது.அதிகம் படித்திராவிட்டாலும் ஏதோ ஓரளவுக்கு படித்திருந்தான். அரச அலுவலகத்தில் கடமைபுரிகிறான்.பார்க்கும் பெண்கள் கொஞ்சம் தடுமாறிவிடும் அழகும், கண்களில் கனிவும் மிதமாய், கீறிவிட்ட குறுந்தாடி பூத்த புன்முறுவலுடன் அடிக்கடி அவள் வழியில் கடப்பதை அவள் உணராமலில்லை.
இருந்தும் அவள் மனம் ஒன்றை மட்டும் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டது.தவறியும் காதலில் விழுந்து விடாதே...
நினைவு திரும்பியவளாய் கடிகாரத்தை பார்த்தாள்.நேரம் 9.15 ஐக் கடந்துவிட்டிருந்ததை உணர்ந்தவளாய் வேகமாக சைக்கிளை மிதித்தாள். அவள் அலுவலகமும் அண்மித்தது.அவன் நினைவை மறந்து வேலையில் மூழ்கினாள்.

31 comments:
கதை அருமை ! கண்ணொளியில் நல்ல பாட்டு ! நன்றி !
நிமிடக்கதை போல இருக்கே ?
இருந்தாலும் கதையின் கனதி சற்று காணாதது போலவே இருக்கிறது. முதல் முயற்சியாகையால் வாழ்த்துக்கள் சகோதரம். வாசிப்புத் திறனை அதிகரித்தலின் மூலம் இன்னும் நீங்கள பட்டை தீட்டிக் கொள்ளலாம்.
நிறைய நிமிடக் கதைப் புத்தகங்கள் இருக்கிறது. யாரிடமாவது பெற்று வாசியுங்கள். அல்லது இணையத்தில் குமுதம், ஆனந்தவிகடன் என்பன மீன்னூல் வடிவில் இருக்கிறது பெற்று வாசிக்கலாம்.
இப்படியான கதைகளை தங்களுக்கு நெருக்கமானவர் யாரிடமாவது காட்டி திருத்தங்கள் அல்லது அவர் விமர்சிப்பைக் கொண்டு மெருகூட்டலாம் சகோதரி.
அழகான பதிவு வாழ்த்துக்கள் ..
கதை நல்ல வடிவா இருக்கு சித்தாரா மகேஷ் ... வாழ்த்துக்கள் சொல்லுற அளவுக்கு வயசு இருக்கா என்று தெரியல , இருந்தாலும் வாழ்த்துக்கள்.....
(தவறியும் காதலில் விழுந்து விடாதே... இந்த வரி இந்த காலத்துல பெண்களை விட ஆண்களுக்கே பொருந்தும் என்பது என்னுடைய கருத்து ) நன்றி வணக்கம் .......
கதையின் நடை பிடித்தது..கதை முடிவு பெறாததைப் போல எனக்குத்தோன்றியது..வாழ்த்துகள்..தொடர்ந்து எழுதுங்கள்..
கதை எழுதிய விதம்...:)
கதையின் ஆரம்பம் + முடிவு வித்தியாசமாக இருக்கிறது..
தொடர வாழ்த்துக்கள்
@ திண்டுக்கல் தனபாலன் says:
நன்றி சகோதரா.
@ Videoshop Markham says:
மிக்க நன்றி சகோ தங்கள் அறிவுரைக்கும் வருகைக்கும்.தங்கள் அறிவுரையை நிச்சயம் பின்பற்றுகிறேன்.
@ wesmob says:
நன்றி சகோ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
@ Chella Thana says:
தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.
//தவறியும் காதலில் விழுந்து விடாதே... //
ஆண் பெண் இருவருக்குமே இவ்வரி பொருந்தும் என்பதே என் எண்ணம்.
@ மதுமதி says:
நன்றி சகோதரா.கதையின் முடிவு சற்று தெளிவாகவே ஆழமான நோக்கில் குழப்பத்துடன் முடித்துவிட்டேன் சகோ.
@ சிட்டுக்குருவி says:
நன்றி சகோ பறந்து வந்து கருத்திட்டமைக்கும் தங்கள் வாழ்த்துக்களுக்கும்
சித்தரா சிஸ'ரர்....வணக்கம் அக்கா..கதை எல்லாம் எழுதுறீங்க..!!!வாழ்த்துக்கள்.நிறைய தொடர்ந்து எழுதுங்க,மீண்டும் சந்திப்போம் சொந்தமே
தப்பாக நினைக்க வேண்டாம் மனதில் பட்டதையே சோன்னேன்...
அடுத்த பதிவில் தங்களின் இன்னுமொரு கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
அருமை. எனக்கும் நான் எழுதி வைத்திருக்கும் கதைகளை வரவலையில் பதிக்கலாம் என்று மனம் ஆவல் கொண்டது.
நீங்கள் என் கவிதைக்கு இட்ட பின்னூட்டம் மற்றும் உங்கள் இடுக்கை தலைப்பு எனக்கும் என் கவிதைக்கும் கேள்வியாக அமைந்தது .
"Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?"
நீரோடை மகேஷ்
சிறிய கதை... நல்லாயிருக்கு.
முடிவை இன்னும் நன்றாக சொல்லியிருக்கலாம்...
வாழ்த்துக்கள்.
முயற்சிக்கு வாழ்த்துக்கள் தங்கச்சி... இன்னும் மேம்படுத்திக் கொள்..
ஒரு பதிவிற்கு தலைப்பு எத்தனை முக்கியம் என்பதை இப்போதே உணர்கிறேன்! இந்த தலைப்பு என்னை போல் எத்தனை பேரை இங்கு இழுத்து வந்ததோ?
கதை முடிவுற்றது போல் எனக்கு தோன்றவில்லை; ஒருவேளை PART - 2 அப்புறமா எழுதுவீங்களோ?
@ Athisaya says:
சும்மா முயற்சி பண்ணிப்பார்த்தேன் தோழி.நன்றிம்மா உன் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
@ Videoshop Markham says:
மனதில் பட்டதை சொல்வதில் தப்பேதும் இல்லையே சகோ.நிச்சயம் முயற்சி செய்கிறேன்.
@ Maheswaran.M says:
நம்பிக்கையோடு தாராளமாக பகிருங்கள் சகோதரா.வாசித்து மகிழ நாங்களும் தயார்.நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@ சே. குமார் says:
ம்ம்.ஆரம்பம்தானே.இனி திருத்திக்க முயற்சிக்கின்றேன் சகோதரா.நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@ ♔ம.தி.சுதா♔ says:
நன்றி அண்ணா உன் வாழ்த்து இருக்கும்வரை நிச்சயம் எதையும் வெல்ல முடியும்.நிச்சயமாக மேம்படுத்திக் கொள்கின்றேன்.
@ வரலாற்று சுவடுகள் says:
கதை முடிவுறாதது போல இப்போதுதான் எனக்கும் தோணுது.part 2 எழுதலாமான்னு யோசிக்கிறேன்.நன்று தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
நன்றி என் இனிய உறவுகளே தங்கள் கருத்துரைகளையும் அறிவுரைகளையும் கேட்டு மிக்க மகிழ்ச்சி.நிச்சயம் உங்கள் ஊக்கப்படுத்தல் மூலம் என் மேம்படுத்தல்களை வெளிப்படுத்துகிறேன்.
படைப்பின் தலைப்பு படைப்பை விறுவிறுப்புடன் வாசிக்க தூண்டியது. இவ்வகையான முயற்சிக்கு பாராட்டுக்கள்! ஆயினும் ஒரே ஒரு சிறு குறைதான். "படைப்பு என்ன சொல்ல வருகிறது?" என அறிய முடியாமல் படைக்கப்பட்டிருக்கிறது. மேலே நண்பர்கள் சொன்ன வழிமுறைகளை முயற்சிகளுடன் செயல்படுத்தினால் நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள முடியும்! நினைவுகளிலிருந்து நீக்க முடியா பெரும் படைப்பை படைக்க, இப்பொழுதே என் வாழ்த்துக்கள்!
பார்ட் 2 கட்டாயம் எழுதுங்கள்.தொடர்ந்து முன்னேற வாழ்த்துகள்
Short n Sweet...part 2 in the making?
@ சென்னை பித்தன்
நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@ ரெவெரி
நன்றி சகோதரா.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.part2 எழுத முயற்சிக்கிறேன்.
அருமை ...
Post a Comment