This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 29 August 2011

வரமொன்று தருவாயா?


உறவுளை இணைத்து வைத்தவனே 

இன்று உறவுக்காய் ஏங்குகையில்
மௌனமாய் தவமிருக்கிறாயே தாயே 
எம் அழுகுரல்கள் உன் செவிகளில்
இன்னுமா விழவில்லை?
இல்லை புரிந்தும் புரியாமலிருக்க  
நீயுமென்ன கல்லா!

Monday, 15 August 2011

பெண்மையைப் பற்றி கொஞ்சம்.....  • காற்றுப் படப்படக் கற்பூரம் கரைந்து போவதைப்போல அதிக படிப்பிலும் வெளிப்பழக்கங்களிலும் பெண்மையின் மென்மை கரைந்து பெண்ணின் உடலோடும் ஆணின் மனதோடும் வாழ்கின்ற நிலை பெண்களுக்கு வந்துவிடுகிறது.
  • ஒரு பெண் புகழ் சம்பாதிக்கலாம்,அளவற்ற அறிவைச் சம்பாதிக்கலாம். ஆனால், சாதாரண உலகத்தில்,சாதாரண முறையில் சாதாரண மனிதர்கள் வாழும் வாழ்க்கையை புரிந்துகொள்ளாதவரை சாதாரண உலகில் அவளைப் பெண்ணாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
  • பெண் இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றவள்.தன்னில் தோன்றும் எந்த உணர்ச்சிச் சாயல்களையும் அவளால் மறைக்கவோ மறுக்கவோ முடிவதில்லை.
  • வயது ஆக ஆக பெண்களிடத்திலே பெண்மையின் மயக்கும் அழகு மறைந்து தாய்மையின் தெய்வீக அழகு தோன்றுகிறது.
  • எந்த இடத்தில் எந்த சமயத்தில் எந்த கேள்வியை கேட்கலாம்,எதைக் கேட்கக் கூடாது என்ற பாகுபாட்டை அடியோடு அறியாத ஒரு இனம் உலகத்தில் இருக்குதென்றால் அது பெண் இனம்தான்.எந்த சமயத்தில்,எந்தக் கேள்வியைக் கேட்டால் ஆண்மனம் திண்டாடுமோ அந்தக் கேள்வியைத் தவறாமல் கேட்கும் இயல்பு பெண்களுக்கு உண்டு.
  • ஆண்கள் நிகழ்காலத்திற்காக மட்டும் வாழ்கிறார்கள்.ஆனால்,பெண்கள் தங்களது ஒரு தலைமுறையைச் சேர்ந்த வாழ்வு வாழ்கிறார்கள்.அதனால் அவர்களது வாழ்வு பல தலைமுறைக்கு நற்பண்பு நல்கிக் கொண்டே தொடர வேண்டிய வாழ்வாக உள்ளது.
  • உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானமாயிருப்பது ஆண்தன்மை. உணர்ச்சிகளுக்கு இடமளிப்பது பெண்தன்மை.
  • வார்த்தையின் உதவியில்லாமல் ஜாடை, கைநெளிவு, உடல்வளைவு, கன்னக்குழிவு,கண்பார்வை இவற்றின் மூலமாக சுலபமாக தன் உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிட்டுவிடுவார்கள் பெண்கள்.
  • ஒருவனை மனத்தால் நினைத்த பிறகு இன்னொருவனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் இந்த உலகில் பல பெண்கள் கன்னிகளாகவே காலம் கழிக்க நேரிடலாம்.வயது வந்த பின் படிக்கச் செல்லும் பெண்கள் வாழ்க்கையிலும்,வேலைக்கு செல்லும் பெண்கள் வாழ்க்கையிலும் சிறு சிறு சலனங்கள் ஏற்படுவதுண்டு.தன்னுடன் படிக்கும் மாணவனிடம் மனதை பறிகொடுக்கும் மாணவியும்,சக உழியருடன் சிரித்துப் பேசி சிந்தையை சிதறவிடும் பெண்களும் உண்டு.அவர்களில் பெரும்பாலாரது ஆசைகள் பலிப்பதில்லை.
  • மலருக்கு கொடுத்திருக்கும் அழகை யாருக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கிறது?பெண்ணுக்கே.அந்த மலர் இறைவன் காலடியை சந்திக்கும் பொது உயர்வு பெறுகிறது.அதே மலரின் இதழை உதிர்த்து அதன் அழகை கலைத்து இறைவனுக்கு பூஜிக்கும்போது போது அது புனிதமடைகிறது.பெண்ணும் அந்த மலரைப் போன்றவள்.அவள் அழகு குடும்பம் என்ற கோயிலுக்குள் சேர்க்கப்படும்போது உயர்வு பெறும்.கணவன் என்றும்,குழந்தை என்றும்,தியாகம் என்றும்,கடமை என்றும் அவள் அழகை இதழ் இதழாக பிரித்து அர்ச்சிக்கும்போது தான் அவள் புனிதமடைகிறாள்.

நிஜக்கலப்பில்லாமல் முழுப் பொய்யாக ஒன்றுமே வெளிவராதுங்க. அதேபோல முழு நிஜமாக பொய் கலப்பில்லாம எதுவுமே வராதுங்க.ஏதும் புரிஞ்சுதாங்க?ஹ ஹ ஹ ஹா....


Saturday, 6 August 2011

வைரப் புதையலின் பூமி.
வைரமென்றால் வாய் பிளக்காதவர் யாரும் உண்டோ என்றால் இல்லை.வைரப் புதையலின் பூமி பற்றி உங்களுக்கு தெரியுமா?
         தென்னாபிரிக்காவில் வைரங்களை அள்ளித்தந்த புதையல் பூமி கிம்பர்லி.மத்திய தென் ஆபிரிக்கப் பகுதியில் "ஆரஞ்சு " நதியை அண்மித்து அமைந்துள்ளது இந்த சுரங்கத் தொழில் நகரம்.தற்போது ஏறத்தாழ 21 இலட்சம் பேர் இந்நகரத்தில் வசிக்கிறார்கள்.
        ஹோப்டவுனுக்கு பக்கத்திலுள்ள உள்ளூர்க்காரரின் பண்ணை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்தவர் எராமாஸ் ஜேகப்ஸ்.இவர் ஆரஞ்சு நதிக்கரையிலே ஒரு வெள்ளைக் கல்லைக் கண்டெடுத்தார்.அதைச் சுத்தப்படுத்தியபோதுதான் தெரிந்தது அது 4.25 கிராம் எடையுள்ள 21.25 கரட் விலையுயர்ந்த வைரம் என்று.ஒரு சில ஆண்டுகளின்பின் 1971 ஆம் ஆண்டு மீண்டும் அதே பகுதியில் 16.7  கிராம் எடையுள்ள 83.50 கரட் வைரம் ஒன்று கிடைத்தது.
           இப் பகுதியில் வைரம் கிடைப்பது பற்றி தகவல் பரவவே நாடெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இந்த பூமியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.அதனால் இப்பகுதியில் "நியூ ரஷ்" என்ற நகரம் உருவானது.அப்போது தென்னாபிரிக்கா பிரிட்டிஷ் காலனிகளுக்கு செயலாளராக இருந்த ஜான் வோட்ஹவுஸ் என்பவர் "நியூ ரஷ்" என்பதை "கிம்பர்லி" என்று பெயர் மாற்றினார். 
           கிம்பர்லியில் முதல் முறையாக செயற்படத் தொடங்கிய நிறுவனம் செசில் ரோட்ஸின் டீ பியர்ஸ் ஆகும்.கிம்பர்லியில் 5 மிகப் பெரிய சுரங்கங்கள் உள்ளன.இவற்றில் பெரிய சுரங்கமானது பெரிய துவாரம் 240 மீற்றர் ஆழம் கொண்டது.இது 1914 ஆம் ஆண்டு மூடப்பட்டது.டுடாயிட்ஸ்பான்,வேசல்டன்,பல்ட்பான்டீன் ஆகிய 3 வைரச் சுரங்கங்கள் 2005 ஆம் ஆண்டு மூடப்பட்டன.தற்போது ஒரு சுரங்கத்தில் மட்டும்தான் வைரம் அகழப்படுகிறது.வைரங்களின் மீது ஆசை கொண்டவர்களின் நிஜமான பூமி கிம்பர்லி.

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More