Saturday 6 August 2011

வைரப் புதையலின் பூமி.




வைரமென்றால் வாய் பிளக்காதவர் யாரும் உண்டோ என்றால் இல்லை.வைரப் புதையலின் பூமி பற்றி உங்களுக்கு தெரியுமா?
         தென்னாபிரிக்காவில் வைரங்களை அள்ளித்தந்த புதையல் பூமி கிம்பர்லி.மத்திய தென் ஆபிரிக்கப் பகுதியில் "ஆரஞ்சு " நதியை அண்மித்து அமைந்துள்ளது இந்த சுரங்கத் தொழில் நகரம்.தற்போது ஏறத்தாழ 21 இலட்சம் பேர் இந்நகரத்தில் வசிக்கிறார்கள்.
        ஹோப்டவுனுக்கு பக்கத்திலுள்ள உள்ளூர்க்காரரின் பண்ணை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்தவர் எராமாஸ் ஜேகப்ஸ்.இவர் ஆரஞ்சு நதிக்கரையிலே ஒரு வெள்ளைக் கல்லைக் கண்டெடுத்தார்.அதைச் சுத்தப்படுத்தியபோதுதான் தெரிந்தது அது 4.25 கிராம் எடையுள்ள 21.25 கரட் விலையுயர்ந்த வைரம் என்று.ஒரு சில ஆண்டுகளின்பின் 1971 ஆம் ஆண்டு மீண்டும் அதே பகுதியில் 16.7  கிராம் எடையுள்ள 83.50 கரட் வைரம் ஒன்று கிடைத்தது.
           இப் பகுதியில் வைரம் கிடைப்பது பற்றி தகவல் பரவவே நாடெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இந்த பூமியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.அதனால் இப்பகுதியில் "நியூ ரஷ்" என்ற நகரம் உருவானது.அப்போது தென்னாபிரிக்கா பிரிட்டிஷ் காலனிகளுக்கு செயலாளராக இருந்த ஜான் வோட்ஹவுஸ் என்பவர் "நியூ ரஷ்" என்பதை "கிம்பர்லி" என்று பெயர் மாற்றினார். 
           கிம்பர்லியில் முதல் முறையாக செயற்படத் தொடங்கிய நிறுவனம் செசில் ரோட்ஸின் டீ பியர்ஸ் ஆகும்.கிம்பர்லியில் 5 மிகப் பெரிய சுரங்கங்கள் உள்ளன.இவற்றில் பெரிய சுரங்கமானது பெரிய துவாரம் 240 மீற்றர் ஆழம் கொண்டது.இது 1914 ஆம் ஆண்டு மூடப்பட்டது.டுடாயிட்ஸ்பான்,வேசல்டன்,பல்ட்பான்டீன் ஆகிய 3 வைரச் சுரங்கங்கள் 2005 ஆம் ஆண்டு மூடப்பட்டன.தற்போது ஒரு சுரங்கத்தில் மட்டும்தான் வைரம் அகழப்படுகிறது.



வைரங்களின் மீது ஆசை கொண்டவர்களின் நிஜமான பூமி கிம்பர்லி.

7 comments:

நல்ல தகவல்...உதை எப்படிதான் எடுப்பார்களோ...அளவில் மிக சிறியது அதனால் தான்....

நல்ல பகிர்வு. அருமையான தகவல்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
சே.குமார்
மனசு (http://vayalaan.blogspot.com)

புதிய செய்தி பகிர்வுக்கு நன்றி....!!

அருமை நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

புதிய தகவல்கள் நிறைந்த பதிவு.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

அரிய தகவலுக்கு நன்றி

///வைரங்களின் மீது ஆசை கொண்டவர்களின் நிஜமான பூமி கிம்பர்லி.////

அப்படின்னா போயிட்டாப் போச்சுது...

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More