- காற்றுப் படப்படக் கற்பூரம் கரைந்து போவதைப்போல அதிக படிப்பிலும் வெளிப்பழக்கங்களிலும் பெண்மையின் மென்மை கரைந்து பெண்ணின் உடலோடும் ஆணின் மனதோடும் வாழ்கின்ற நிலை பெண்களுக்கு வந்துவிடுகிறது.
- ஒரு பெண் புகழ் சம்பாதிக்கலாம்,அளவற்ற அறிவைச் சம்பாதிக்கலாம். ஆனால், சாதாரண உலகத்தில்,சாதாரண முறையில் சாதாரண மனிதர்கள் வாழும் வாழ்க்கையை புரிந்துகொள்ளாதவரை சாதாரண உலகில் அவளைப் பெண்ணாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
- பெண் இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றவள்.தன்னில் தோன்றும் எந்த உணர்ச்சிச் சாயல்களையும் அவளால் மறைக்கவோ மறுக்கவோ முடிவதில்லை.
- வயது ஆக ஆக பெண்களிடத்திலே பெண்மையின் மயக்கும் அழகு மறைந்து தாய்மையின் தெய்வீக அழகு தோன்றுகிறது.
- எந்த இடத்தில் எந்த சமயத்தில் எந்த கேள்வியை கேட்கலாம்,எதைக் கேட்கக் கூடாது என்ற பாகுபாட்டை அடியோடு அறியாத ஒரு இனம் உலகத்தில் இருக்குதென்றால் அது பெண் இனம்தான்.எந்த சமயத்தில்,எந்தக் கேள்வியைக் கேட்டால் ஆண்மனம் திண்டாடுமோ அந்தக் கேள்வியைத் தவறாமல் கேட்கும் இயல்பு பெண்களுக்கு உண்டு.
- ஆண்கள் நிகழ்காலத்திற்காக மட்டும் வாழ்கிறார்கள்.ஆனால்,பெண்கள் தங்களது ஒரு தலைமுறையைச் சேர்ந்த வாழ்வு வாழ்கிறார்கள்.அதனால் அவர்களது வாழ்வு பல தலைமுறைக்கு நற்பண்பு நல்கிக் கொண்டே தொடர வேண்டிய வாழ்வாக உள்ளது.
- உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானமாயிருப்பது ஆண்தன்மை. உணர்ச்சிகளுக்கு இடமளிப்பது பெண்தன்மை.
- வார்த்தையின் உதவியில்லாமல் ஜாடை, கைநெளிவு, உடல்வளைவு, கன்னக்குழிவு,கண்பார்வை இவற்றின் மூலமாக சுலபமாக தன் உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிட்டுவிடுவார்கள் பெண்கள்.
- ஒருவனை மனத்தால் நினைத்த பிறகு இன்னொருவனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் இந்த உலகில் பல பெண்கள் கன்னிகளாகவே காலம் கழிக்க நேரிடலாம்.வயது வந்த பின் படிக்கச் செல்லும் பெண்கள் வாழ்க்கையிலும்,வேலைக்கு செல்லும் பெண்கள் வாழ்க்கையிலும் சிறு சிறு சலனங்கள் ஏற்படுவதுண்டு.தன்னுடன் படிக்கும் மாணவனிடம் மனதை பறிகொடுக்கும் மாணவியும்,சக உழியருடன் சிரித்துப் பேசி சிந்தையை சிதறவிடும் பெண்களும் உண்டு.அவர்களில் பெரும்பாலாரது ஆசைகள் பலிப்பதில்லை.
- மலருக்கு கொடுத்திருக்கும் அழகை யாருக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கிறது?பெண்ணுக்கே.அந்த மலர் இறைவன் காலடியை சந்திக்கும் பொது உயர்வு பெறுகிறது.அதே மலரின் இதழை உதிர்த்து அதன் அழகை கலைத்து இறைவனுக்கு பூஜிக்கும்போது போது அது புனிதமடைகிறது.பெண்ணும் அந்த மலரைப் போன்றவள்.அவள் அழகு குடும்பம் என்ற கோயிலுக்குள் சேர்க்கப்படும்போது உயர்வு பெறும்.கணவன் என்றும்,குழந்தை என்றும்,தியாகம் என்றும்,கடமை என்றும் அவள் அழகை இதழ் இதழாக பிரித்து அர்ச்சிக்கும்போது தான் அவள் புனிதமடைகிறாள்.
நிஜக்கலப்பில்லாமல் முழுப் பொய்யாக ஒன்றுமே வெளிவராதுங்க. அதேபோல முழு நிஜமாக பொய் கலப்பில்லாம எதுவுமே வராதுங்க.ஏதும் புரிஞ்சுதாங்க?ஹ ஹ ஹ ஹா....
14 comments:
gud sithara :) ! keep it up..
அவள் அழகு குடும்பம் என்ற கோயிலுக்குள் சேர்க்கப்படும்போது உயர்வு பெறும்.கணவன் என்றும்,குழந்தை என்றும்,தியாகம் என்றும்,கடமை என்றும் அவள் அழகை இதழ் இதழாக பிரித்து அர்ச்சிக்கும்போது தான் அவள் புனிதமடைகிறாள்.
செம்ம வரிகள். . .அருமை. . .நீங்க கடைசியா சொன்னதும் புரிஞ்சதுங்க. . .
நல்லபகிர்வு....
வாழ்த்துக்கள்.
-சே.குமார்.
http://vayalaan.blogspot.com
அழகாக சொல்லி இருகிறீர்கள்..............
:)
அடடா நீங்கள் அந்தளவு மென்மையானவங்களா ?
ரசிக்கக் கூடிய வகையில் அருமையாக பிரித்து வரைந்திருக்கிறீர்கள் அருமையாக உள்ளது தங்கச்சி...
பெண்மை,மென்மை தன்மை
சொன்னது உண்மை
நன்று!
புலவர் சா இராமாநுசம்
அழகை இதழ் இதழாக பிரித்து அர்ச்சிக்கும்போது தான் அவள் புனிதமடைகிறாள்.//
அர்ச்சித்த அழகுப் பூக்களுக்குப் பாராட்டுக்கள்.
பெண்மை பற்றி பேசும் இந்த படைப்பு அருமை
பெண்கள் சமந்தம்மா நடுநிலையோடு அவர்கள் பெருமையையும் அவர்களின் மறை பக்கங்களையும் சொல்லியிருக்க்ரீர்கள்
வரிகள் ஒவோன்ரும் வைரம் போன்றது
பெண்மை தாய்மை ஆகி தெய்வீக தன்மை அடைவார்கள் என்பது பிடிச்சிருக்கு உண்மையும் கூடவே
கவித்துவமான அழகான
பெண்மையின் மென்மை குறித்த பதிவு
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
//அவள் அழகு குடும்பம் என்ற கோயிலுக்குள் சேர்க்கப்படும்போது உயர்வு பெறும்.கணவன் என்றும்,குழந்தை என்றும்,தியாகம் என்றும்,கடமை என்றும் அவள் அழகை இதழ் இதழாக பிரித்து அர்ச்சிக்கும்போது தான் அவள் புனிதமடைகிறாள்.//
...வாவ்.. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. :)
//நிஜக்கலப்பில்லாமல் முழுப் பொய்யாக ஒன்றுமே வெளிவராதுங்க. அதேபோல முழு நிஜமாக பொய் கலப்பில்லாம எதுவுமே வராதுங்க.ஏதும் புரிஞ்சுதாங்க?ஹ ஹ ஹ ஹா....//
...அவ்வ்வ்வ்... நல்லாத் தானே போயிட்டு இருந்தது.. ஏன் ஏன்.. திடீர்னு இப்படி ஒரு ஆசை?? ;)))
நீட்
பெண்ணின் பார்வையில் பெண்மை ரசிக்கும்படியான எழுத்து.
//நிஜக்கலப்பில்லாமல் முழுப் பொய்யாக ஒன்றுமே வெளிவராதுங்க. அதேபோல முழு நிஜமாக பொய் கலப்பில்லாம எதுவுமே வராதுங்க...//
ரொம்பவும் கவர்ந்த வரிகள்.
Post a Comment