இன்று உறவுக்காய் ஏங்குகையில்
மௌனமாய் தவமிருக்கிறாயே தாயே
எம் அழுகுரல்கள் உன் செவிகளில்
இன்னுமா விழவில்லை?
இல்லை புரிந்தும் புரியாமலிருக்க
உயிர்கொண்ட உறவுகளை
பிரித்தது போதும்
நிறுத்திவிடு தாயே
சோதனைகளும் வேதனைகளும்
நெஞ்சை துளைத்தது போதும்
உயிர்பலிதான் உன் இச்சையென்றால்
ஈடாக எடுத்துவிடு என்னுயிரை
கொடுத்துவிடு நம் அண்ணனை
இனியாவது வாழவிடு அவர்களை
நியாய தர்மங்கள் தோற்பதில்லை
பாச நேசங்கள் பொய்ப்பதில்லை
என்பது உன் சந்நிதியில் நிஜமென்றால்
நீயும் ஓர் தெய்வமென்றால்
போக்கிவிடு அவர்தம் துயரினை
வாழவிடு நம் உறவுகளை
ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி
மௌனங்களில் கரைந்தபடியே
காத்திருக்கிறேன்
நம் உறவுகளின் விடிவுக்காய்.
4 comments:
உயிர்பலிதான் உன் இச்சையென்றால்
ஈடாக எடுத்துவிடு என்னுயிரை
கொடுத்துவிடு நம் அண்ணனை
இனியாவது வாழவிடு அவர்களை
ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி
மௌனங்களில் கரைந்தபடியே
காத்திருக்கிறேன்
நம் உறவுகளின் விடிவுக்காய்.
நானும் தான்...
ஒரு செங்கோடியோடு , உயிர் இழப்பு நிக்கட்டும்...
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம் சகோதரி .
இனியுமா கடவுளிடம் மன்றாட வேண்டும்........
உங்களுக்கு அறுதல் சொல்வதை விட வேறு ஒண்டுமே என்னால் செய்ய முடியாது............வருந்துகிறேன்..
நல்லதோர் சேதி கிடைக்கும் டீச்சர்,
தருமத்தின் பக்கம் தற்போது தீர்ப்பு வந்திருக்கிறது,
நம்பிக்கையோடு காத்திருப்போம்.
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
Post a Comment