அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்ளும்
முன்னெல்லாம் நெஞ்சு நிறைந்த
இனம்புரியாத ஓர் மகிழ்ச்சியுடன்
தேடி வரும் அந்த இடம்
இன்று மனதிலே சுமக்கமுடியாத
பெரும் சுமையுடன்
தாண்டிச் சென்றது
ஒரு கணம்
உயிர் துடிப்பது நின்றது போல் உணர்வு
கண்களில் துளிர்த்த நீரை
யாரும் அறியாது அழித்துவிட்டேன்
உன் நினைவுகளை என்ன செய்வேன்
ஓய்வில்லாத பொழுதுகளில் கூட
உன் நினைவுகள் விடவேயில்லை
சிறு நெஞ்சம் எவ்வலிதான் தாங்கும்
தவமேதுமின்றி வரமாக உன்னைப்
பெற்றதனாலேயோ
இப்போது உனக்காக
தவமிருக்க வைக்கிறது
காத்திருப்பேன்
நீ என்னை நாடிவரும் அந்த
இறுதி கணம் வரை.
ஒருவேளை
நான் இறந்திருந்தாலும்
நான் மறுபடியும் பிறந்திருப்பேன்
உன் காலைச் சுற்றும்
ஓர் நாய்க் குட்டியாக.....
9 comments:
//ஒரு கணம்
உயிர் துடிப்பது நின்றது போல் உணர்வு
கண்களில் துளிர்த்த நீரை
யாரும் அறியாது அழித்துவிட்டேன்
உன் நினைவுகளை என்ன செய்வேன்//
லயித்து எழுதியுள்ளீர்கள்
பகிர்வு மிகவும் அருமை நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...
வாழ்த்துக்கள்.
-சே.குமார்
http://vayalaan.blogspot.com
:)
//
ஒருவேளை
நான் இறந்திருந்தாலும்
நான் மறுபடியும் பிறந்திருப்பேன்
உன் காலைச் சுற்றும்
ஓர் நாய்க் குட்டியாக.....
//
அருமையான வரிகள்
என்று என் வலையில்
விஜய் vs அஜித் யார் புத்திசாலி?
இப்படி காலைச் சுற்றிக்கிடப்பதிலும் ஒரு சுகம் உண்டு தோழி!
காதல் கவிதை மாதிரி தெரியவில்லையே
அருமை
வலியுடன் கூடிய காதல் கவிதை கலக்கல்
இந்த கவிதையை படிக்கும் போது மனது மிகவும் கனத்துவிட்டது சகோ உன்மை. . .காத்ல் பிரிவில் மிகவும் கொடுமையான விசயம் பழகிய இடங்களுக்கு மீண்டும் செல்வது. . .உன்மையான காதல் நன்றியுன் காத்திருக்கும். . .நன்றி சகோ மனது வலிக்க ஒரு கவிதையை படித்து முடித்தேன். . .ஒவ்வொரு வரிகளும் ஆழமாய் (நினைவு) காயப்படுத்திவிட்டன. . .
Post a Comment