Sunday 16 October 2011

தேடிப் பெற்ற சிதறல்கள்.

மனதில் ஆயிரம்
கனவுகள் தொடுத்த கேள்விகள்
பதிலேதும் புரியாத வாழ்க்கை 
இரண்டின் மத்தியிலும் 
நிலையில்லா உறவுகளைத் தேடி 
தினந்தோறும் தொடர்கிறது
என் கனவுப் பயணம்....
*********************************************************************************

ஒன்று 
அப்பா 
அம்மா 
அண்ணன்
அக்கா
தங்கை
தோழி
உயிர் 
காதல்
யாவும் ஒன்றாக இருந்தது
இப்போ...
அந்த ஒன்று மட்டும் வாழ்வில் 
என்றும்  நிரந்தரமாய்....
*********************************************************************************

சூடு வைத்தும் வேகவில்லை
என்றோ கருகிவிட்ட
என் நெஞ்சம்...
********************************************************************************
விடை தெரியா ஒரு வாழ்க்கை
விடை வருமா
இல்லை
விடை பெறுமா..
*********************************************************************************

கண்களுக்குள் ஒளித்துவைத்த
கண்ணீரெல்லாம்
உன்னை முகம் கண்டதும் 
அணை மீறும் அலைபோல 
பொங்கி வழிகின்றதே....
*********************************************************************************
உன் நினைவுகளை மறப்பதற்கென்று 
தூக்கத்தை நாடினேன் 
அங்கும் விடவில்லை
உன் நினைவுகள் 
அங்கேயும் கனவாக வந்து
துரத்துகிறாய்...
*********************************************************************************
மௌனத்தில் கரையும் என் வார்த்தைகள் 
என்றோ ஓர் நாள்
உயிர் பெற்று 
உன்னிடம் பல கேள்விகளை 
விட்டுச் செல்லும்...
*********************************************************************************

வலிகள்தான் வாழ்க்கையான போதும் 
வாழ்ந்துவிடத்தான் துடிக்கிறது இதயம்
சுமைகளிலும் ஓர் சுகம்
இருக்கத்தான் செய்கிறது.
*********************************************************************************

உனக்காக நானும்
எனக்காக நீயும்
விடையில்லா நம் வாழ்வை
வாழ்ந்து கொண்டுதான் 
இருக்கிறோம்.
*********************************************************************************

அடிக்கடி நெஞ்சு வலிப்பதாய்
ஓர் உணர்வு
எல்லாமே நெஞ்சோடு புதைந்து போகும்
நினைவுகளின் துடிப்போ....
*********************************************************************************

காத்திருப்புகளின் மத்தியிலும்
கனவுகள் கலைந்துபோன அந்த இடம்
எப்படி மறக்கும்
உனக்கும் எனக்குமான 
தடை விதிக்கப்பட்ட இடமல்லவா ...
*********************************************************************************

கூண்டுக்குள் இருக்கும் 
கிளியைப் பார்க்கும் போதெல்லாம்
நினைப்பதில்லை
கிளிக்குமட்டுமல்ல 
அந்த வாழ்க்கையென்று...
*********************************************************************************

உதடுகள் கூட
நடிக்கப் பழகிவிட்டன 
நான் நீ தவிர 
மற்றவருடன் சிரித்தது
வெறும் உதடுகள் மூலம்தான் ..
*********************************************************************************

காதலுக்கு 
நீயும் எதிரியில்லை
நானும் எதிரியில்லை
இருந்தும் ஏனடா நம் காதல்....
*********************************************************************************

என் விழி சிந்தும்
கண்ணீர்த் துளிகளைக் கூட 
சேமித்து வைக்கிறேன்
என்றோ ஓர் நாள்
அவையாவது
என் மனதை உனக்கு கூறிடுமோ...
*********************************************************************************
.

9 comments:

அத்தனை தொகுப்பும் அருமையிலும் அருமை..

படங்களின் தெரிவு வரிகளுக்கேற்றற் போல் மிக அருமை...

வணக்கம் சுடு சோற்றுச் சகோதரி,
சாரி சுடு சோற்றுக்கு போட்டி போடும் சகோதரி,

வலி, வேதனை, தவிப்பு, உறவுகளைப் பிரிந்த ஏக்க நிலை, பிடித்தமானவரின் பிடிமானம் குறைந்ததால் ஏற்படும் கலக்க நிலை ஆகியவற்றைத் தாங்கி வந்திருக்கிறது இச் சிறு கவிகள்.

அக்கா ஒரு ஒரு கவிதையும் அருமை
படங்களும்

சிறுகவிகள் அத்தனை அருமை.

--சே.குமார்
http://vayalaan.blogspot.com

என் ப்ளாக் கிற்கு வந்து கமெண்ட் இட்டதற்கு மிக்க நன்றி தோழி..... வலிகள்தான் வாழ்க்கையான போதும்
வாழ்ந்துவிடத்தான் துடிக்கிறது இதயம்
சுமைகளிலும் ஓர் சுகம்
இருக்கத்தான் செய்கிறது.

உண்மையிலும் உண்மை .....................

படங்களும் கவிதையும் மனதை சோகத்துக்கு இழுக்கின்றது.இது கற்பனையோ,நிஜமோ தெரியாது சகோதரி,எனினும் நிஜமெனில் ஒன்று கூற விரும்புகிறேன்.
விரும்பிய அன்பும் அன்புக்குரியவரையும் கட்டாயத்தினால் பெற இயலாது.அப்படிப்பட்ட அன்பு அதிகம் நிலைபெறாது.நாம்தான் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அனைத்து கவிதையிலும் காதல் வலி தெரிகிறது... கவிதை கலக்கல்

பிரிவின் துயரும் காதலின் வலியும்
சிறு கவிதை வரிகள் அனைத்திலும்
சங்கமித்துள்ளது .அருமை!........
வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க நன்றி
பகிர்வுக்கு ......

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More