Sunday 5 August 2012

அந்த ஏழு நாட்கள்...


உன்னை நேசிக்கத் தொடங்கி
அன்றோடு முடிந்திருந்தது
என் வாழ்வையே வானவில்லாய்
மாற்றியிருந்த அந்த ஏழு நாட்கள்...


உன் முகம் பார்த்தறியேன்
உன் குரல் யாசித்தறியேன்
உன்னை மட்டும் அறிந்தேன்
உன்னைத் தான் நேசித்தேன்


அந்த ஏழு நாட்களில்
என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்
யாரிடம் உரைப்பேன்


என் மனவறைக்குள்
நுழைத்திட்ட உன்னை
மணவறையில் சந்திக்கும்
அந்நாளில்...

முதன் முதலாய்
உனை காணும் அந்த திருநாள்
தோழிகள் எனை சீண்ட
வெட்கம் எனை தூண்ட


யாருமறியாது கடைவிழியால்
உன் திருமுகம் நோக்க
உன்விழி மோதிய விபத்தில்
தடுமாறிய என் பெண்மை


புரியாத பாஷையில் அந்தணர்
மந்திரங்கள் வானோக்கி ஒலிக்க
என்னிடம் நீ மாட்டிக் கொண்டதாய்
மறைமுகமாக உரைத்த
மேள தாளங்கள் செவிகளில் இடியிறக்க
உறவுகள் முன்றலில்
உன் திருமங்கலநாண்
என் கழுத்தில் ஏறிட


நன்றியை விழிகளினால் கூறிட
அதை உணர்ந்தவனாய்
என் கரம் தழுவி
உன் காதலை நீ உணர்த்திட
மகிழ்வின் எல்லைக்கே
சென்று வந்த அந்நாள்...


எத்தனை எத்தனை கனவுகள்
எனக்குள்ளும்
உன் நினைவுகளின் ஏக்கங்களுடன்
காத்திருக்கிறேன்
காதலுடன் நீ எனைத் தழுவும்
அந்நாளுக்காய்...



x_3cc5fda9

8 comments:

காதலும் அன்பும் உருகி புரண்டோடும் அழகிய கவிதை[கள்]]!!!!

அனைத்து கவிதைகளும் அருமை சகோ!

யாருமறியாது கடைவிழியால்
உன் திருமுகம் நோக்க
உன்விழி மோதிய விபத்தில்
தடுமாறிய என் பெண்மை/////////

பிரமிப்பு........

உருகி எழுதப்பட்ட காதல் வரிகள்.

எல்லோரும் மறக்க முடியாத நாளை, அழகிய கவிதை மூலம் சொல்லி உள்ளது அருமை...

(முடிவில் எல்லாம் கனவு ஆகி விடக்கூடாது... வாழ்நாள் முழுவதும் தொடரவும் வேண்டும்...)

தொடர வாழ்த்துக்கள்... நன்றி…

என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

அந்த ஏழு நாட்கள் அழகான நேசக்கவிதை - பிடிச்சிருக்கு

மனதிற்கு மகிழ்வாக உள்ளது இக்கவி வரிகள்.வாழ்த்துக்கள்.சித்தாரா அக்கா அருமை!

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More