- மாற்ற முடியாத,திருத்தமுடியாத காரியங்களைப் பற்றி அநாவசியமாகக் கவலைப்படுவது,தனது நம்பிக்கை,கொள்கைகளைப் பிறர்மேல் வற்புறுத்தி சுமத்துவது,அற்ப விடயங்களை உதறித் தள்ள மறுப்பது,மனம் வளர்ச்சியடைய சிந்தித்து செயற்பட இடங்கொடாதிருப்பது இவையனைத்துமே மனிதனின் குறைபாடுகள்.
- மனிதர்கள் தங்கள் செயலை நியாயமானது என்று காட்டவே சிந்தனையை பயன்படுத்துகிறார்கள்.சிந்தனையை மறைக்கவே சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
- பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நீயே செய்து காட்டு.
- பிடித்தமானவர் என்ன தவறு செய்தாலும் அது விருப்பமாகத்தான் இருக்கும்.வெறுக்கத்தக்க பல குறைகள் நிறைந்திருந்தாலும் தன் உடலில் யாருக்குத்தான் விருப்பமில்லை.
- மனதில் பலவீனம் புகுந்துவிட்டால் அங்கே அமைதி ஏற்படும்வரை கோபம்தான் நிறைந்திருக்கும்.
- துன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு நண்பன் இருந்தால் துன்பம் பாதியாகக் குறைந்துவிடும்.இன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு துணை இருந்தால் இன்பம் பலமடங்கு அதிகமாகிவிடுகிறது.
- நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பமே தக்க சந்தர்ப்பம்.அதனால் நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்தை எப்பொழுதும் நழுவவிடக் கூடாது.
- புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ளும் அறிவு மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்கு போதாது.மனிதர்களைப் படித்து அறிந்துகொள்ளும் ஞானம்தான் இந்தக்காலச் சமூகத்தில் வெற்றி பெறுவதற்கு சரியான கருவி.ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் பல குழப்பங்கள் நிறைந்த ஒவ்வொரு புத்தகமாகத்தான் இருக்கிறான்.அவனைப் படித்து புரிந்து கொள்வது அருமையாக இருக்கும்.
- சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்கும் போது எத்தனையோ நினைவுகள் தானாகவே எளிதாக நிறைவேறிவிடுகின்றன.
- நல்லவரைப் பார்க்கும்போது பின்பற்ற நினையுங்கள்.தீயவரைப் பார்த்தால் உங்கள் இதயத்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
- மனிதன் தன்னை மட்டுமல்ல இந்த உலகத்தையே மறந்து பல கொடுமையான காரியங்களைச் செய்வது ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்படுவதால்தான்.அதே மனிதனுக்கு பெருமையையும் புகழையும் தேடிக் கொடுப்பது அவன் நிதானமாக கடைப்பிடிக்கும் அந்த ஒரு நிமிடம்தான்.
- வெற்றி ஒரு வானவில்.எட்டத்தில் இருப்பதால்தான் அதற்கு கவர்ச்சியும் அழகும்.
18 comments:
தங்கச்சி சுடு சோறு கிடைக்குமா ?
Very Good artical . .Very Good artical . .
இதைப் படிச்சும் நான் திருந்தாட்டில் நான் மனுசனே இல்லை...
ஃஃஃஃஃஃபுத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ளும் அறிவு மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்கு போதாதுஃஃஃஃஃ
அதுக்காக புத்தகமே படிக்கமால் இருக்கலாமா ? இந்த உலகத்தில் மனிதர்களை விட புத்தகமே சிறந்தது... அது யாரையும் திரும்பத் திரும்ப நோகடிக்காது.. ஹ..ஹ..
அருமையான இடுகை... வாழ்த்துக்கள்.
துன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு நண்பன் இருந்தால் துன்பம் பாதியாகக் குறைந்துவிடும்.இன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு துணை இருந்தால் இன்பம் பலமடங்கு அதிகமாகிவிடுகிறது.
உண்மை உண்மை
நல்லாத்தான் இருக்குது அனால் இதை பின்தொடர்வதுதான் கஷ்டம்..........
//தீயவரைப் பார்த்தால் உங்கள் இதயத்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்//.
இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்
மாடுகளைக் கண்டால் ஐந்து முழம் குதிரைக்கு
பத்து முழம் யானைக்கு ஆயிரம் முழம் விலகிப்
போனா போதும் ஆனால்
தீங்கினர் கண்ணுக்கு தெரியாமல் போவதே
நன்று என அறநூல் கூறுகின்றது
தேவையான பதிவு
வாழ்த்துக்கள்
புலவர் சா இராமாநுசம்
ஒரு நிமிடத்தில் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகள் பல தீய விளைவுகளைத் தருகிறது நல்ல பதிவு.
தோழி முடிந்தளவு மின்னஞ்சல் போடுங்கள் புலம் பெயர்வில் நல்லபதிவுகளைப் படிக்க சில நேரங்களில் இனையம் சதி செய்கிறது .
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு புத்தகம் போல் தான் உள்ளான்
அவர்களைப் படித்து தெரிந்து கொள்வது அவர்களில் நல்லவர்களுடனான
தொடர்பை தொடர்வதுமே இன்பத்தைக் கூட்டவும்
துன்பத்தை குறைக்கவும் செய்யும்
பயனுள்ள தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
////
மனதில் பலவீனம் புகுந்துவிட்டால் அங்கே அமைதி ஏற்படும்வரை கோபம்தான் நிறைந்திருக்கும்.//////
உண்மையான வார்த்தை..
குட் ஒன்
பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நீயே செய்து காட்டு.
//நல்லவரைப் பார்க்கும்போது பின்பற்ற நினையுங்கள்.தீயவரைப் பார்த்தால் உங்கள் இதயத்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்//
மிகச்சரி! அருமையான பதிவு சகோ!
அருமையான கருத்துகள்
இன்று என் வலையில்
என்ன கன்றாவி இது ?
மனிதன் தன்னை மட்டுமல்ல இந்த உலகத்தையே மறந்து பல கொடுமையான காரியங்களைச் செய்வது ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்படுவதால்தான்.அதே மனிதனுக்கு பெருமையையும் புகழையும் தேடிக் கொடுப்பது அவன் நிதானமாக கடைப்பிடிக்கும் அந்த ஒரு நிமிடம்தான்.
இது போன்ற அனைத்தும் பதிக்கவேண்டிய முத்துக்கள்
சீரிய கருத்துக்களின் சிறிய தொகுப்பு ,அருமை
Post a Comment