Saturday 26 November 2011

என் மனதை திருடிய பாடல்கள்.






பூங்காற்றில் வாசம் வரும்
இசை காற்றில் பாட்டு வரும்
எதிர் காற்றில் நாம் நிலைத்தாலே 
வாழ்ந்திடும் வாழ்வில் வெற்றி வரும்
அந்த வானம் நாம் தொடுவானம் 
நமக்கிங்கு ஓர்நாள் விடியாதா 
ஒரு தேடல் கண்ணில் உண்டு 
தினம் விடியல் விண்ணில் உண்டு
ஒரு நம்பிக்கைதான் வாழ்க்கை இன்று.
                                                                               ( பூங்காற்றில் )
இந்த உலகம் முதலில் ஏசும்
அது பின்னால் வாழ்த்திப் பேசும் 
நடை போடலாம் தடை தாண்டலாம்
விதை போட்டவன் மலர் பார்க்கலாம்
சிலர் கையில் ரேகை நம்பி
சிலர் கல்லை மணியை நம்பி
சுயமுள்ளவன் சுகம் காண்கிறான் 
பயமுள்ளவன் படை தோற்கிறான் 
இதயத்திலே இதயத்திலே இடிகள் எல்லாமே
சமயத்திலே சமயத்திலே படிகள் என்றாகும்
போராட்டமே புகழ் கூட்டுமே 
அலை போலவே நெஞ்சிலே என்றும் ஓய்வேது
தரை வாழ்விலே வாழ்விலே 
எதுவும் துணையில்லை
                                                                                ( பூங்காற்றில் )
என் பாட்டும் ஒரு நாள் வெல்லும்
செங்கோட்டை வரையில் செல்லும் 
போராடுவேன் போராடுவேன்
ஒரு நாளில் நான் புகழ் சூடுவேன்
ஒரு கல்லும் வைரம் ஆக 
அது மகுடம் ஏறிப் போக
இந்த பூமியின் அடி ஆழத்தில் 
மறைவாகுமே உயர்வாகுமே 
கனவுகளே இல்லையென்றால் வாழ்வே தூக்கம்தான்
முயற்சிகளால் வாழ்வினிலே முடியும் எல்லாம்தான்
முடியாததே கிடையாதடா 
எதிர் பார்க்கலாம் பார்க்கலாம் எங்கள் திறமைதான் 
வரவேற்கலாம் ஏற்கலாம் நாளை உலகம்தான்.
                                                                                  ( பூங்காற்றில் )


வாழ்கையில எத்தனையோ ஆயிரம் பாடல்களை நாம் கேட்டதுண்டு.
ஆனாலும் கூட நம் மனசில அழியாமல் நிற்பது ஓர் சில பாடல்கள்தான்.அந்த வகையில் என் மனசில் அழியாமல் நிற்கும் ஓர் பாடல்தான் இதுவும்.சோர்ந்து துவழும் நாட்களிலெல்லாம் இந்த பாடலைக் கேட்பதுண்டு.அப்போதெல்லாம் எனக்குள்ளும் ஓர் தன்னம்பிக்கை துளிர்விடும்.

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஓர் இளைஞனின் ஓர் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் ஓர் பாடல்.போராட்டம் நிறைந்த வாழ்க்கையிலும் சோர்ந்துவிடாமல் மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் தன் இலக்கை அடைய வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு மனதில் ஓர் நம்பிக்கையைத் தரக் கூடிய ஓர் பாடல்.மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஓர் பாடல்.முன்னேறத் துடிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையினை மிக அழகாக வெளிப்படுத்திய கவிஞரின் திறமையை நிச்சயம் பாராட்டித்தான் ஆகணும்.

பாடல் பற்றிய மேலதிக தகவல் என்னால் வழங்க முடியவில்லை.அது பற்றி தெரிந்தவர்கள் இங்கே பகிரலாம்.

என்றும் அன்புடன்.
சித்தாரா மகேஷ்.

9 comments:

இதயத்திலே இதயத்திலே இடிகள் எல்லாமே
சமயத்திலே சமயத்திலே படிகள் என்றாகும்
போராட்டமே புகழ் கூட்டுமே /

அருமையான கருத்துள்ள வரிகள்.. பாராட்டுக்கள்..

கவிதையை எதிர்ப்பார்த்து வந்தேன். அருமையான பாடலைக் கேட்க வைத்துவிட்டீர்கள் என்ன சொல்வது...
”அலை போலவே நெஞ்சிலே என்றும் ஓய்வேது
தரை வாழ்விலே வாழ்விலே
எதுவும் துணையில்லை”

அருமையான வரிகளை இப்பொழுது தான் முதல் முறை ஆழமாக ரசிக்க முடிந்தது. பதிவிற்கு மிக்க நன்றி...

எஸ் அருமையான பாடல், நான் இப்போதான் இந்த பாடலை கேட்கிறேன்...!!!

இது எனக்கொருவர் சிபாரிசு செய்து தந்த பாடல்... அடிக்கடி கேட்காவிட்டாலும் சிலவேளைகளில் கேட்பேன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கடவுள்களை தொலைத்து விட்டோம்

என் பாட்டும் ஒரு நாள் வெல்லும்
செங்கோட்டை வரையில் செல்லும்
போராடுவேன் போராடுவேன்
ஒரு நாளில் நான் புகழ் சூடுவேன்

என் நிலையை விளக்குகிறது இந்த வரிகள்..

அருமையான பாடல்

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

சொக்க வைக்கிறதே இசையும் கருத்தும்.அற்புதம் !

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More