Monday 19 December 2011

நான் பார்த்த காதலும்,நானறிந்த காதலும்.



காதல் அது எப்பொழுது வருகிறது? எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? என்பது யாருக்குமே தெரிவதில்லை.எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத காலத்தில் எதிர்பாராத முறையில் திடீரென வருகிறது.சிலருக்கு கை கூடும்.சிலருக்கு கை கூடுவதில்லை.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.அது வந்தபின் பெண்களைச் சுயநிலை இழக்கச் செய்து விடுகிறது.

சாஜகான்-மும்தாஜ், அம்பிகாபதி-அமராவதி, லைலா-மஜ்னு, தேவதாஸ்-பார்வதி போன்ற காதல்களைப் போல சரித்திரத்தில் நின்று உலக மக்களின் நெஞ்சங்களிலும் வாழ்கின்ற காதல்கள், இன்னும் பிரபலப்படுத்தப்படாத தெய்வீகக் காதல்கள் எத்தனையோ......

நீர்க்குமிழிகள் போல சிதறிப் போகும் கல்லூரிக் காதல்களும்,காதலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் ஜெயித்து பெருமை கண்ட காதல்களும் உண்டு.

ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொள்வதுதான் காதல்.இந்த காதல் அழகைப் பார்த்து வருகிறதா? அல்லது ,அகத்தை உணர்ந்து  மலர்கிறதா?அழியும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காதலுக்கு ஆயுளும் குறைவுதான்.உள்ளத்தை நேசித்து மலர்ந்த காதலோ என்றும் அழியாமல் வரலாற்றில் சேரும்.

இன்றைய நவீன காலத்தில் கையடக்க தொலைபேசிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஒரு பொம்மை உடைந்ததும் குழந்தை மற்றொரு பொம்மையை வைத்து விளையாடுகிறது.அதனால் குழந்தைக்கு முதல் பொம்மையிடம் இருந்த அன்பு பொய்யாக இருப்பதில்லை.ஆனால் அதே அன்பை அது இரண்டாவது பொம்மையிடமும் செலுத்த முடிகிறது.இளமையில் மனிதன் காதல் செய்வதும் இதுபோலத்தான்.

மனிதாபிமானம் கூடிய, விட்டுக் கொடுத்து இன்பம் காண்கின்ற, மன்னித்து மகிழ்கின்ற இரு மனங்களின் சந்திப்பில் மலருகின்ற உன்னதமான ஒரு ஆண் பெண் உறவுதான் காதல் என்பதாகும்.

வசந்தத்தில் குயில் பாடுவது ஏன்? மரங்கள் பூப்பது ஏன்? கோடையில் அடியோடு காணப்படாத மின்னல் மழை காலத்தில் இயல்பாக தோன்றுவது ஏன்? மொட்டு மலர்வது ஏன்? நதி கடலையே நோக்கி ஓடுவது ஏன்? பூமி சூரியனையே சுற்றி சுற்றி வருவது ஏன்? எல்லாமே ஏதோ ஓர் வகையில் காதல்தான். 

உலகத்தில் என்றும் அழியாத இரண்டு உண்மைகள் இருக்கின்றன.அவைதான் காதலும் சாதலும்.காதல் சாவைக் கூட வெல்வதனால்தான் ஓயாமல் தீயைக் கக்க வைக்கும் இந்த உலகில் மனித  வாழ்ந்தும் போராடியும் எதிர்கால நம்பிக்கையோடு வாழ்வில் முன்னேறுகின்றான்.
தாமரை மலரிடத்திலே ஒரு வண்டு வருகிறது.மலருக்கும் அது பிரியமாகவே இருக்கிறது.அது தன் உள்ளத்தில் வண்டிற்கு இடம் கொடுக்கிறது.ஆனால் தன் மகரந்த ரசத்தை மட்டும் தொடக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்கிறது.இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது தாமரைக்கு தன்னிடத்தில் இரக்கம் உண்டாகுமென்றும் அது தன் மகரந்தத்தை பருகக் கொடுக்கும் என்று வண்டு நினைக்கிறது.ஆனால் தாமரை தன் பிடிவாதத்தை விடவேயில்லை.இறுதியில் வண்டு அலுத்துப் போய் அதைவிட்டு பறந்து விடுகிறது.தாமரை மனதிற்குள் சொல்லிக் கொண்டது, "ஆண் சாதி எப்பவுமே இப்படித்தான் மோசம் செய்யும்."






Photobucket

9 comments:

காதலுணர்வு பற்றிய நிதர்சன உண்மைகள்.

அருமையான பதிவு
தொடர்கிற நிலையில் பதிவை நிறுத்தி இருக்கிறீர்கள் என
நினைக்கிறேன்.தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

காதல் பற்றி சரியாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்...

சித்தாரா...காதலின் உணர்வை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அனுபவ உண்மையோ !

அனைத்து உறவுகளுக்கும் என்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

தாமரைப்பூவினில் வண்டு வந்து அமரும்
இனிய படம் அருமை..

உலகத்தில் என்றும் அழியாத இரண்டு உண்மைகள் இருக்கின்றன.அவைதான் காதலும் சாதலும்.காதல் சாவைக் கூட வெல்வதனால்தான் ஓயாமல் தீயைக் கக்க வைக்கும் இந்த உலகில் மனித வாழ்ந்தும் போராடியும் எதிர்கால நம்பிக்கையோடு வாழ்வில் முன்னேறுகின்றான்.

Very nice to read. My best wishes.

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More