
முதலில் மலரப் போகும் புதியதோர் ஆண்டு அனைவருக்கும் இனியதொரு ஆண்டாக திகழட்டும்.
அடுத்து எனது பதிவுக்கு வருகிறேன்.எல்லோருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்பது இருக்கும்தானே?பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக வாழ்வியலின் நியதி.இன்று,வருட இறுதி நாள்.நாளை மலரப் போகும் புதிய வருடத்தை வரவேற்பதில் எல்லோரும் ஆனந்தமாக ஒன்று கூடும் நன்னாள்.
இதே போல் ஓர் நாள்தான் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 31.12.2010. அன்றுதானே முதன் முதலாய் நீயும் நானும் சந்தித்துக் கொண்டோம்.நீயும் நானும் போட்டி போட்டுக் கொண்டு புதிய ஆண்டை வரவேற்றுக் கொண்டோம்.
அன்று எவ்வளவு சந்தோசமா இருந்தோம்.அதே போல் இன்றும் போட்டி போட்டுக் கொண்டு பிரிவை வரவேற்றுக் கொண்டிருக்கிறோம்.என் மீதான் உன் பாசத்தின் முன் உன் மீதான என் பாசம் என்றுமே தூசிதான் என்பதை உணர்ந்து கொண்டேன்.எப்போதும் நீ ஜெயிப்பவனாகவும் நானே தோற்பவளாகவுமே இருந்திருக்கிறோம்.
என்னை நான் புரிந்து கொண்டதால் பிடிவாதக்காரியாகவும் என்னை நீ புரிந்து கொண்டதால் சுயநலக்காரியாகவும் மாறினேன்.என்னை நியாயப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.அதையும் நீ அறிந்து கொள்ளப் போவதுமில்லை.என் நிலையை உனக்குப் புரிய வைப்பதற்கும் எனக்கு யாருமில்லை.என்றோ ஓர் நாள் என்னையும் என் நேசத்தையும் நீ புரிவாய்.அன்று உன் அருகில் நிச்சயம் இருக்கப் போவதுமில்லை.என்னை ஜெயித்த உன் சந்தோசம் மட்டும் எனக்கு போதும்.
நாளை மலரப் போகும் புத்தாண்டு உன் வாழ்வில் புத்தொளி வீச என் இதயம் மலர்ந்து உன்னை வாழ்த்திச் செல்கிறேன்.
உறக்கத்தை தொலைத்தேன்
உறவுகளை மறந்தேன்
என் பெற்றோரையும்
மற்றோரையும் மறந்தேன்
நாடி வந்த தோழிகளை
ஏனோ தவிர்த்தேன்
அடுத்தவருடன் அளவளாவுவதை
நிறுத்தினேன்
நாடி வந்த தோழிகளை
ஏனோ தவிர்த்தேன்
அடுத்தவருடன் அளவளாவுவதை
நிறுத்தினேன்
காரணமேயன்றி
கவிதைகள் எழுதினேன்
பெண்களுடன் நீ பேசும்போது
கோபத்தை அள்ளி வீசினேன்
அழகிய உன் சிரிப்பினை
அமைதியாய் ரசித்தேன்
விழி மூடி தூங்கும் போதும்
கனவிலும் உன்னையே கண்டேன்
எனை நீ பிரிந்த போது
மனம் துவண்டு போனேன்
பாசம் என்றால் என்னவென்று
உன்னாலே அறிந்து கொண்டேன்
பாசத்தினால் சுயநலக்காரி
என்ற பெயரெடுத்தேன்
உன் கொள்கையிலே பிடிவாதக்காரி
என்ற பட்டம் பெற்றேன்
பாசத்தினால் சுயநலக்காரி
என்ற பெயரெடுத்தேன்
உன் கொள்கையிலே பிடிவாதக்காரி
என்ற பட்டம் பெற்றேன்
மனங்களை படிக்க முயன்று
வாழ்வைத் தொலைத்தேன்
கடந்து போன துயரங்களையும்
மறந்து போனேன்
இவையெல்லாம் உன்
உன் பாசத்தில் கட்டுண்டதால்
என்னுள் மலர்ந்த
மாற்றங்கள்....
அனைத்து பதிவுலக சகோதர சகோதரிகளுக்கும் என் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
5 comments:
கவிதையில் உங்கள் உணர்வுகள் வெளிப்படுகிறது..அதிக அன்பு ஆளையே மாற்றி விடுகிறது..வாழ்த்துகள்..
த.ம 2
த.10 6
அன்போடு அழைக்கிறேன்..
உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)
அனைவருக்கும் கூகிள்சிறியின் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்!
பாசம் ஏக்கம், தவிப்பு உள்ள கவிதை... :))
எல்லா வரிகளிலும் ஒரு எளிமை இழையோடுவதை உணர முடிகிறது.
இந்த எளிமையைத் தேடித் தான் அனைவரும் பயணிக்கிறார்கள்.
இந்த கவிதையில் அந்த எளிமையான அன்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
இவையெல்லாம் உன்
உன் பாசத்தில் கட்டுண்டதால்
என்னுள் மலர்ந்த
மாற்றங்கள்....
அருமையாய் மலட்ந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்..
Post a Comment