This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 6 August 2011

வைரப் புதையலின் பூமி.




வைரமென்றால் வாய் பிளக்காதவர் யாரும் உண்டோ என்றால் இல்லை.வைரப் புதையலின் பூமி பற்றி உங்களுக்கு தெரியுமா?
         தென்னாபிரிக்காவில் வைரங்களை அள்ளித்தந்த புதையல் பூமி கிம்பர்லி.மத்திய தென் ஆபிரிக்கப் பகுதியில் "ஆரஞ்சு " நதியை அண்மித்து அமைந்துள்ளது இந்த சுரங்கத் தொழில் நகரம்.தற்போது ஏறத்தாழ 21 இலட்சம் பேர் இந்நகரத்தில் வசிக்கிறார்கள்.
        ஹோப்டவுனுக்கு பக்கத்திலுள்ள உள்ளூர்க்காரரின் பண்ணை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்தவர் எராமாஸ் ஜேகப்ஸ்.இவர் ஆரஞ்சு நதிக்கரையிலே ஒரு வெள்ளைக் கல்லைக் கண்டெடுத்தார்.அதைச் சுத்தப்படுத்தியபோதுதான் தெரிந்தது அது 4.25 கிராம் எடையுள்ள 21.25 கரட் விலையுயர்ந்த வைரம் என்று.ஒரு சில ஆண்டுகளின்பின் 1971 ஆம் ஆண்டு மீண்டும் அதே பகுதியில் 16.7  கிராம் எடையுள்ள 83.50 கரட் வைரம் ஒன்று கிடைத்தது.
           இப் பகுதியில் வைரம் கிடைப்பது பற்றி தகவல் பரவவே நாடெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இந்த பூமியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.அதனால் இப்பகுதியில் "நியூ ரஷ்" என்ற நகரம் உருவானது.அப்போது தென்னாபிரிக்கா பிரிட்டிஷ் காலனிகளுக்கு செயலாளராக இருந்த ஜான் வோட்ஹவுஸ் என்பவர் "நியூ ரஷ்" என்பதை "கிம்பர்லி" என்று பெயர் மாற்றினார். 
           கிம்பர்லியில் முதல் முறையாக செயற்படத் தொடங்கிய நிறுவனம் செசில் ரோட்ஸின் டீ பியர்ஸ் ஆகும்.கிம்பர்லியில் 5 மிகப் பெரிய சுரங்கங்கள் உள்ளன.இவற்றில் பெரிய சுரங்கமானது பெரிய துவாரம் 240 மீற்றர் ஆழம் கொண்டது.இது 1914 ஆம் ஆண்டு மூடப்பட்டது.டுடாயிட்ஸ்பான்,வேசல்டன்,பல்ட்பான்டீன் ஆகிய 3 வைரச் சுரங்கங்கள் 2005 ஆம் ஆண்டு மூடப்பட்டன.தற்போது ஒரு சுரங்கத்தில் மட்டும்தான் வைரம் அகழப்படுகிறது.



வைரங்களின் மீது ஆசை கொண்டவர்களின் நிஜமான பூமி கிம்பர்லி.

Saturday, 2 July 2011

சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I



  • மாற்ற முடியாத,திருத்தமுடியாத காரியங்களைப் பற்றி அநாவசியமாகக் கவலைப்படுவது,தனது நம்பிக்கை,கொள்கைகளைப் பிறர்மேல் வற்புறுத்தி சுமத்துவது,அற்ப விடயங்களை உதறித் தள்ள மறுப்பது,மனம் வளர்ச்சியடைய சிந்தித்து செயற்பட இடங்கொடாதிருப்பது இவையனைத்துமே மனிதனின் குறைபாடுகள்.
  • மனிதர்கள் தங்கள் செயலை நியாயமானது என்று காட்டவே சிந்தனையை பயன்படுத்துகிறார்கள்.சிந்தனையை மறைக்கவே சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
  • பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நீயே செய்து காட்டு.
  • பிடித்தமானவர் என்ன தவறு செய்தாலும் அது விருப்பமாகத்தான் இருக்கும்.வெறுக்கத்தக்க பல குறைகள் நிறைந்திருந்தாலும் தன் உடலில் யாருக்குத்தான் விருப்பமில்லை.
  • மனதில் பலவீனம் புகுந்துவிட்டால் அங்கே அமைதி ஏற்படும்வரை கோபம்தான் நிறைந்திருக்கும்.
  • துன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு நண்பன் இருந்தால் துன்பம் பாதியாகக் குறைந்துவிடும்.இன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு துணை இருந்தால் இன்பம் பலமடங்கு அதிகமாகிவிடுகிறது.
  • நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பமே தக்க சந்தர்ப்பம்.அதனால் நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்தை எப்பொழுதும் நழுவவிடக் கூடாது.
  • புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ளும் அறிவு மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்கு போதாது.மனிதர்களைப் படித்து அறிந்துகொள்ளும் ஞானம்தான் இந்தக்காலச் சமூகத்தில் வெற்றி பெறுவதற்கு சரியான கருவி.ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் பல குழப்பங்கள் நிறைந்த ஒவ்வொரு புத்தகமாகத்தான் இருக்கிறான்.அவனைப் படித்து புரிந்து கொள்வது அருமையாக இருக்கும்.
  • சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்கும் போது எத்தனையோ நினைவுகள் தானாகவே எளிதாக நிறைவேறிவிடுகின்றன.
  • நல்லவரைப் பார்க்கும்போது பின்பற்ற நினையுங்கள்.தீயவரைப் பார்த்தால் உங்கள் இதயத்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
  • மனிதன் தன்னை மட்டுமல்ல இந்த உலகத்தையே மறந்து பல கொடுமையான காரியங்களைச் செய்வது ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்படுவதால்தான்.அதே மனிதனுக்கு பெருமையையும் புகழையும் தேடிக் கொடுப்பது அவன் நிதானமாக கடைப்பிடிக்கும் அந்த ஒரு நிமிடம்தான்.
  • வெற்றி ஒரு வானவில்.எட்டத்தில் இருப்பதால்தான் அதற்கு கவர்ச்சியும் அழகும்.

Saturday, 25 June 2011

தொடரும் காத்திருப்புகள்.

                             
அருகே இருக்கையில்  வெ(ம)றுத்த
அகன்று செல்கையில் விரும்பியது ஏன்
கிட்ட இருக்க அன்பாய் தெரிந்தது
கடந்து செல்ல காதலாகியது ஏன்
பக்கம் இருக்கத் துடித்த என் இதயம் 
நீ பிரிந்து சென்றதும் தூங்கியது ஏன்

கடந்துபோன பிரிவும் கூட
என் சிந்தனைகளை மீட்டிச்செல்கிறது 
உன் சிரித்த முகம்கூட
நினைவில் வந்து போகிறது
கதை சொல்லிப்போன நினைவு
என்னைத் துடிக்க வைக்கிறது

கண்ணிமைக்காதிருந்த வினாடிகள்
உனக்காக என்னை அழ வைக்கின்றன      
மனம் தடுமாறி பின் 
சிந்திக்க வைக்கின்றன

விரும்பிய உன்னை விலக்கிய நெஞ்சம்
விரதம் இருந்து தவிப்பதும் ஏன்
நிஜத்தில் இல்லாதுபோன உணர்வு
நினைப்பிலே என்னைக் கொல்வதும் ஏன்

அன்று உன் காதலை நீ சொன்னபோது
ஏனோ ஏற்கவில்லை 
இன்று இல்லாத உனக்காக
ஏங்குகிறது என் இதயம்

உன் நினைவுகளை சுமந்தபடி 
வாழ்வதைத்தவிர
எதுவுமே முடிவதில்லை இப்போதெல்லாம்
உன் காதலுக்காக

காதலுடன் நீ 
என் அருகில் வரும்போதெல்லாம்
விரட்டியது மனசு 
எப்போ செல்வாய் என நினைத்த நான்
என்று வருவாயென இன்று
ஏங்குவதும் ஏன் 

வருவாயா மீண்டும் எனக்காக
ஒருமுறையாவது
காத்திருக்கிறேன் உனக்காக.



 

Wednesday, 1 June 2011

ராக்கெட் விடுறவங்களுக்கு கொடுக்கிற நோஸ்கட் என்பது இதுதானோ ?

             
               காதலை உலகம் எப்பிடியெல்லாம் கொண்டாடுகிறது.பலர் தம் காதலை வெளிப்படுத்த தெரியாமல் பெரும் அவஸ்தைப்படுகிறார்கள்.சிலர் காதலை வெளிப்படுத்தி காதலில் வென்றும் இருக்கிறார்கள்.சிலர் தோற்றும் இருக்கிறார்கள்.இங்கும் ஒருத்தன் எவ்வாறு தன் காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்றுதான் பாருங்கள்.இது ஒரு லெட்டர் வடிவிலான காதல் காமடி.கொஞ்சம் படிச்சுத்தான் பாருங்களேன்.

ஒரு மாணவன் லவ் லெட்டர் எழுதுகிறான்......

அன்பே சுசி ! 
கீழே நான் கொடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கும் உனக்கு சரியென்று தோன்றும் பதிலை தெரிவு செய்.

1. நீ நம்ம கிளாசுக்கு உள்ளே வரும் போதெல்லாம் நிச்சயம் உன் பார்வை என்மேல விழுகிறது.அதுக்கு  காரணம் :
அ. காதல்
ஆ. என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியல
இ. உண்மையாவா?அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே


2. நீ ஒருநாள் கிளாஸ்ல பாடிக் கொண்டிருந்தப்போ அந்த நேரம் பார்த்து நான் உள்ளே வந்தேன்.நீ உடனே பாடுறதை நிறுத்திவிட்டாய் .அதுக்கு காரணம்:
அ. உன் முன்னால் பாடுறதுக்கு எனக்கு வெட்கமா இருந்திச்சு
ஆ. நான் பாடிக் கொண்டிருந்தது உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு எனக்கு பயமா இருந்திச்சு
இ. நீ திடீரென்று உள்ளே வந்தது எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு


3. உன்னோட சின்ன வயசு போட்டோவை நீ எல்லோருக்கும் காட்டிக் கொண்டிருந்தாய்.ஆனால் நான் கேட்டதும் நீ அதை மறைச்சிட்டாய்.அதுக்கு காரணம்:
அ. எனக்கு வெட்கமா இருந்திச்சு
ஆ. உன்கிட்ட காட்டுறதுக்கு எனக்கு ஏதோ ஒரு சங்கடம்.
இ. என்னவோ தெரியல.


4. நாங்க சுற்றுலா போனப்போ, ஒரு மேடு ஏறும்போது நானும் என்கூட இருந்த நண்பனும் உனக்கு கை கொடுக்க வந்தோம்.நீ அவனோட கையை பிடிச்சு மேல ஏறி வந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உன்னோட ஏமாற்றத்தை பார்க்க ஆசைப்பட்டேன்.
ஆ. உன் கையை பிடிச்சா, உடனே விட்டுட்டு போக எனக்கு மனசு வராது
இ. முதன் முதலில் உன் கையை அப்பிடியா பிடிக்கிறது

5. நீ நேற்று பஸ் ஸ்டாண்டில காத்துக் கொண்டிருந்தாய்.ஆனா பஸ்ல ஏறல.அதுக்கு காரணம்:
அ. நீ ஏறும்போது ஏறலாம்னுதான்
ஆ. நீ என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை குழப்ப வேணாம் என்று நினைச்சேன்.              
இ. உன்னை நினைச்சிட்டு இருந்ததில பஸ் வந்தததை கவனிக்கல 

6. எனக்கு ரோஜாப்பூ  பிடிக்கும்னு ஒருநாள் சொன்னேன்.அடுத்தநாள் நீ தலையில ரோஜாப்பூ வச்சிட்டு வந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உனக்குத்தான் ரோஜாப்பூ பிடிக்குமே அதுக்காக
ஆ. உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கு பிடிக்க வேணாமா
இ. நீ காரணம் கேட்டால் உனக்கு மட்டும்தான் ரோஜா பிடிக்குமான்னு சண்டை பிடிக்கலாம்னு நினைச்சேன்

7. என் பிறந்தநாள் அன்று காலையில் நான் கோயிலுக்கு வந்தேன்.நீயும் அன்று கோயிலுக்கு காலையில் கோயிலுக்கு வந்திருந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உன் பிறந்த நாளன்று உன் கூட சாமி கும்பிடலாம்னு
ஆ. உன் பிறந்தநாளன்று எல்லோருக்கும் முதல் நான் உன்னைப்
பார்க்கணும்னு
இ. உனக்கு கோயிலில் வச்சு வாழ்த்து சொல்லணும்னு
ஆசைப்பட்டேன்.

இந்தக் கேள்விகளுக்கு நீ எந்தப் பதிலை தெரிவு செய்திருந்தாலும் தப்பில்லை.எல்லா கேள்விகளுக்கும் ஒரு புள்ளி இருக்குது.
அ- இற்கு 10 புள்ளி.
ஆ- இற்கு 5 புள்ளி.
இ- இற்கு 3 புள்ளி.
இந்த கேள்விகளுக்கு நீ வாங்கியிருக்கிற மொத்தப் புள்ளிகள்....


-50 புள்ளிகளுக்கு மேல இருந்தால், "நீ என்னை காதலிக்கிறாய் ஏன் அதை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாய்."
-30 இற்கும் 40 இற்குமிடையில் இருந்தால், "உனக்கு என்மேல காதல் வர ஆரம்பிச்சிருக்கு"
-30 இற்கும் கீழே இருந்தால்,"உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு.ஆனால், காதலிக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கிறாய்."
உன்னோட பரீட்சை முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.
                                                                                                                  -உன் அன்புக் காதலன்.

இந்த லெட்டரை பார்த்திட்டு எரிச்சலான அந்தப் பொண்ணு , முள்ளை முள்ளால்தான் எடுக்கணும் என்று அவன் கொடுத்த மாதிரியே ஒரு பதில் லெட்டர் எழுதிக் கொடுத்தாள். 




இது அவளோட லெட்டர்,

1. வகுப்பிலே முதல் வரிசையில யாராவது உட்கார்ந்திருந்தா உள்ளே வாறவங்க அவங்களை பார்க்கிறது சகஜம்.
1. ஆம்.                                                              2. இல்லை.

2. பாட்டுப் பாடும்போது, திடீரென்று பாட்டு வரி மறந்து போனால் பாடுறவங்க பாடுறதை பாதியிலே நிறுத்துவாங்கதானே.
1. ஆம்.                                                              2. இல்லை.

3. நான் என்னோட சின்ன வயசுப் போட்டோவை என் நண்பிகள் கிட்ட காட்டிக் கொண்டிருந்தப்போ நீ நடுவில வந்து மூக்கை நுழைச்சிட்டாய்.
1. ஆம்.                                                              2. இல்லை.

4. சுற்றுலாவில உன் கையைப் பிடிச்சு மேடு ஏறுவதை நான் தவிர்த்தேன்.அது ஏனென்று உனக்கு இன்னும் புரியவில்லை.
1. ஆம்.                                                              2. இல்லை.

5. நான் என்னோட தோழிக்காக பஸ் ஸ்டாண்டில காத்துக் கொண்டிருக்கக் கூடாதா?
1. ஆம்.                                                              2. இல்லை.

6. உனக்கு ரோஜா மட்டுமல்ல தாமரை,காலீப்ளவர் கூட பிடிக்கும்னு சொன்னாயே.அது உண்மைதானே?
1. ஆம்.                                                              2. இல்லை.

7. ஓ அன்று உன் பிறந்தநாளா? அதுதான் கோயில் பக்கம் பார்த்தேனா? நான் தினமும் காலையில் கோயிலுக்கு வருவேன்.அது உனக்கு தெரியுமா?
1. ஆம்.                                                              2. இல்லை.

மேலே சொன்ன கேள்விகளில்,


-ஒரு கேள்விக்காவது நீ "ஆம்" என்று சொல்லியிருந்தால் நான் உன்னைக் காதலிக்கவில்லை.
-ஒரு கேள்விக்காவது நீ "இல்லை" என்று சொல்லியிருந்தால் உனக்கு காதலென்றால் என்னென்றே தெரியல.                                                                         
                                                                                                                                         -சுசி.

இது எப்புடீ.............?
         






  

 
   

Saturday, 21 May 2011

உயிருக்கு ஓர் மடல்.


உயிருக்குள் ஓர் உயிர் 
உன்னை வைத்த என் உயிரில்
எவரையும் நிறுத்தி வைக்க முடியலடா

முழுமையான அன்பைக் கூட 
நான் அறிந்து கொண்டதும் 
உன்னிடத்திலே 
 எத்தனை பாசத்தினை 
நம்மிடையே பகிர்ந்து கொண்டோம்

இப்பொழுதெல்லாம் 
 என்னை உனக்கு பிடிப்பதில்லை
இருந்தும் 
என் மனம் உன்னையே சுற்றுதடா 

முன்னெல்லாம் அடிக்கடி 
யாரோ என்னிடத்தில் கூறும் வார்த்தை
இன்னமும் என் நெஞ்சிலே 
"உனக்கு அவனைத்தானே பிடிக்கும்,
அவனுக்கும் உன்னைத்தானே பிடிக்கும்"
இருந்தும் என்னிடத்தில்தான் 
ஏனிந்த கோபம்..?

அடிக்கடி நம்மிடத்தில் தோன்றி மறையும்
சின்னச் சின்ன ஊடல்களெல்லாம் 
அன்பின் வெளிப்பாடுதான் 
என்பதை அறிந்து கொண்டேனடா

மனசு தடுமாறும் போது கூட
உன் உறவில் மட்டும் மாற்றமில்லை
எதிர்பார்ப்புகள் நிராசையாகின்றபோதும்
உன்னிடம் நான் எதிர்பார்ப்பது
உன் அன்பு ஒன்றே  

உன்னிடம் பேச  துடிக்கிறது 
என் இதயம்  
ஏனடா உன்னிடம் மனம்திறந்து பேச
வார்த்தைகள் வர மறுக்குதடா
உன்மீதான அன்பை மட்டும்
வெளிப்படுத்த தெரியவில்லை
 

ஒரு முறையாவது 
வந்து பார்த்துவிட்டு போவாயா
என் மன அறைக்குள்

உனக்காக நான் சேகரித்த 
கனவுகள்
உன்னிடம் பகிர நினைத்த
நினைவுகள் 
ஒவ்வொன்றும் சிதறிக் கிடக்கின்றன

காத்திருக்கிறேனடா
காலம் கனியும்
உன் மனதில் ஓர் மாற்றம்
நம் வாழ்விலும் ஓர் வேனிற்காலம்

அன்று சேர்வோம்
மீண்டும் ஓர் புதிய வாழ்வின்
ஆரம்பத்தில்
இன்புற்று மகிழ்வோம்.



    

  
  
 
 
   
 

Saturday, 14 May 2011

கோபத்தைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்களேன்.....

 நீ கோபித்துக் கொள்ளும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடி இன்பத்தை இழந்து விடுகிறாய்.

தீராக் கோபம் போராய் முடியும்.

கோபம் கூடாது.அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது.சாந்தமே முகத்திற்கு அழகு தருகின்றது.

சினம் கொள்வது ஆண்மையாகாது.பொறுமையும் இன்சொல்லும்தான்தான்  ஆண்மை.ஆகவே சினம் கொள்பவன் ஆற்றலும் தைரியமும் அற்றவன்.

ஒருமுறை கோபம் எழுந்தால் மூன்று மாதம் வாழத் தேவையான சக்தி வீணடிக்கப்படுகிறது.

கோபம் எழுந்ததும் கையாளக் கூடிய உத்திகள் சில.

1. வாயை மூடல்.

2. மௌனமாதல்.

3. கடவுள் நாமத்தை உச்சரித்தல்.

4. அந்த இடத்தை விட்டு நகர்தல்.

5. குளிர் நீரை அருந்துதல். 

6. வேகமான நடை போடல்.

7. கண்ணாடியில் பார்த்தல்.

8. சுவாமி அறைக்குள் சென்று பிரார்த்தனை செய்தல்.

9. கோபத்தின் வெளிப்பாட்டை சிறிது நேரம் தாமதித்து வைத்தல்.

10. நீர்க் குழாயை திறந்து நீர் பாயும் ஸ்ருதியுடன் பாட்டுப் பாடல்.

 ஒரு கடிதத்தை எடுக்க வேண்டியவர் எடுக்காவிட்டால் அக்கடிதம் அனுப்பப்பட்டவரிடமே  திரும்பி விடுகிறது.இதே போன்று மற்றவர்களின் தூற்றுக்களையும் ,கௌரவப் பேச்சுக்களையும்  நாம் உள்வாங்காது போனால் அது சொன்னவரிடமே திரும்பிவிடும்.

உனக்கு கோபம் வருகிறது என்று வைத்துக் கொள்.எதற்கோ மனம் படபடக்கிறது.அப்போது ஓரிடத்தில் தனியாக அமர்ந்து  I'm not a dog,I'm a man.என்று  10 தடவை சொல்லிப் பார்.கோபம் உன்னை விட்டு தானாக ஓடி விடும்.

இது நடக்காது என்று எந்த விசயத்தையும் கைவிடாதீர்கள்.நீங்கள் நம்பிக்கையோடு போராடுகின்றபோது எதிர்மறையான விசயங்கள் கூட பயந்து விலகி வெற்றி சாத்தியமாகும்.

இனியாவது உணர்ந்து பாருங்க வாழ்க்கை புரியும்.


Saturday, 7 May 2011

உயிர் தந்த தாயே இது உனக்காக..............




அன்னையே.....
இன்று உனக்கான நாள்
இன்றுகூட உன்னை 
வாழ்த்த முடியவில்லை  

  என் மனம் உன்னிடம் மட்டுமே
 உன்னை தொலைவில் வைத்து 
பார்ப்பதற்கு மட்டுமே
என் விதி எழுதப்பட்டுவிட்டதே
எத்தனையோ அன்னையர் தினம் 
வந்துதான் கழிகிறது 
உன்னையும் என்னையும் மட்டும்
விதி பிரித்து வைத்து விட்டதே
                                               
 என்ன ஜென்மமடா 
உரிமை இருந்தும் ஏனோ 
உன்னை பாசத்துடன் 
அம்மா என்றழைக்க முடியவில்லை 

இக்கணத்திலிருந்தாவது 
உனக்காக வாழ விரும்புகிறேன்
வந்துவிடு அன்னையே என்னுடன்...... 



ஒரு துளியில் உருவாகி 
உனக்குள்ளே கருவாகி 
உன் ரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி  
உயிர் பெற்று வந்தோமம்மா...




Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More