
உயிருக்குள் ஓர் உயிர்
உன்னை வைத்த என் உயிரில்
எவரையும் நிறுத்தி வைக்க முடியலடா
முழுமையான அன்பைக் கூட
நான் அறிந்து கொண்டதும்
உன்னிடத்திலே
எத்தனை பாசத்தினை
நம்மிடையே பகிர்ந்து கொண்டோம்
இப்பொழுதெல்லாம்
என்னை உனக்கு பிடிப்பதில்லை
இருந்தும்
என் மனம் உன்னையே சுற்றுதடா
முன்னெல்லாம் அடிக்கடி
யாரோ என்னிடத்தில் கூறும் வார்த்தை
இன்னமும் என் நெஞ்சிலே
"உனக்கு அவனைத்தானே பிடிக்கும்,
அவனுக்கும் உன்னைத்தானே பிடிக்கும்"
இருந்தும்...