Friday 4 March 2011

உனக்கான என் தேடல்


நடு நிசியின் நிசப்தத்தில் 
இருளை வெறித்தபடி
உறங்காதிருக்கும் என்
விழிகள் இரண்டிலும்
உன்னைப் பற்றிய நினைவுகள் 
ஏக்கங்களின் மொத்த உருவமாய்.

ஒன்றாய் கூடி மகிழ்ந்திருந்த 
அந்த நாட்களில்
நாம் நினைத்ததில்லையே 
இப்படி ஓர் பிரிவை .

விதியின் விளையாட்டா- இல்லை 
உறவுகளின் சதியா.
அன்றேல் 
உண்மை நேசத்திற்கு
கிடைத்த வெகுமதியா.

சிட்டுக் குருவியாய்
அன்று பாடித்திரிந்த அந்த நாட்கள்
இன்னும் நெஞ்சில்  ஈரமாய்.
பிரிவை நினைத்து 
கண்ணீரில் கரைந்த
இறுதி நாள்.

பசுமையான நினைவுகளை
கொஞ்சம் மீட்டிப் பார்க்கின்றேன்
கண்ணீர் துளிர்க்கின்றது.
கூடவே காற்றலையில் 
எங்கோ ஒலிக்கின்றது 
வைரமுத்துவின் வைர வரிகள்.

உன்னோடு நானிருந்த 
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் 
மறக்காது கண்மணியே.

நெஞ்சில் ஏதோ நெருடல்
கண்ணில் ஏதோ ஓர் கலக்கம்.
தூக்கமின்றி விடிகிறது
மீண்டும் ஓர் அதிகாலை.
 
 

20 comments:

ஃஃஃஃதூக்கமின்றி விடிகிறது
மீண்டும் ஓர் அதிகாலைஃஃஃஃ

சகோதரி அந்த இரவு இருப்பதை உணர்கிறிர்களல்லவா.. அப்படியானால் விடியல் வரும் தானே.. உலகம் ஒரு நாள் விடியும்.. காத்திருங்கள்..

அப்படியே ஆகட்டும் சகோதரா.........

காதலின் ஏக்கத்தை சொல்லும் அருமையான கவிதை..
வாழ்த்துக்கள்..

காதலை வேறு கோணத்தில் சொல்லும் ஒரு காதல் கவிதை முடிந்தால் படித்து பாருங்கள்..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_04.html

தூக்கமின்றி விடிகிறது
மீண்டும் ஓர் அதிகாலை. உனக்கான என் தேடல்

அருமை சகோ....நல்லா எழுதிருக்கேங்க வாழ்த்துக்கள்

//ஒன்றாய் கூடி மகிழ்ந்திருந்த
அந்த நாட்களில்
நாம் நினைத்ததில்லையே
இப்படி ஓர் பிரிவை .//

ரசிச்சு ரசிச்சு படித்தேன் இவ்வரிகளை

நெஞ்சில் ஏதோ நெருடல்
கண்ணில் ஏதோ ஓர் கலக்கம்.
தூக்கமின்றி விடிகிறது
மீண்டும் ஓர் அதிகாலை.


.....உணர்வுகளை அருமையாய் வெளிப்படுத்தும் வரிகள்!

அடடே.. நல்லாருக்கே...

/////உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும்
மறக்காது கண்மணியே//////////////


அருமை...

நெஞ்சில் ஏதோ நெருடல்
கண்ணில் ஏதோ ஓர் கலக்கம்.
தூக்கமின்றி விடிகிறது
மீண்டும் ஓர் அதிகாலை..

அருமையான வரிகள். உண்மை உணரவான கவிதை.. வாழ்த்துக்கள் தொடருங்கள் சித்தாரா..

பிரிவின் ஏக்கம் தெரிகிறது வரிகளில். நல்ல கவிதை

வைரமுத்துவின் வைர வரிகள்.

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும்
மறக்காது கண்மணியே.//
அருமை.

@# கவிதை வீதி # சௌந்தர்
நன்றி அண்ணா.........

@ரேவா
நன்றி அக்கா.........

@சங்கவி
நன்றி அக்கா.........

@சித்ரா
நன்றி அக்கா.........

@ராஜ ராஜ ராஜன்
நன்றி அண்ணா.........

@இது உங்களுக்கு
நன்றி தோழி ..........

@தோழி பிரஷா
நன்றி அக்கா.........

@எல் கே
நன்றி அண்ணா.........

@இராஜராஜேஸ்வரி
நன்றி அக்கா.........

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

அழகிய வரிகளால் காதல் உணரப்பட்டிருக்கிறது இல்லை இல்லை உணர்த்தப்படிருக்கிறது. அருமை

@பாரத்... பாரதி...
நன்றி அண்ணா.

@அன்புடன் மலிக்கா
நன்றி அக்கா.

வணக்கம்.ந்ல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

பசுமையான நினைவுகளை
கொஞ்சம் மீட்டிப் பார்க்கின்றேன்
கண்ணீர் துளிர்க்கின்றது.

பசுமையான நினைவுகள் இந்த வார்த்தையை கவிதையில் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல... நிறைய கவிஞர்கள் முயற்சிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது.
அந்த வரிகளில் படிப்பவர்களின் பசுமையான நினைவுகளை மீட்டுவதும் சிலருக்கு மட்டுமே சாத்தியம். உங்கள் கவிதையில் என் பசுமையான நினைவுகளை மீட்டிப் பார்த்தேன்.அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். படத்தையும் சரியாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்
மிக்க நன்றி
http://tamilraja-thotil.blogspot.com/

காதல் என்றதும் காயமும் கூடவே ஓடி வருகிறது..இரட்டை குழந்தைகளாய்...
அருமையான கவிதை

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும்
மறக்காது கண்மணியே/
இன்று நினைத்தாலும்
இதயம் வலிக்கிறதே
அந்த நினைவுகளில
அலை வந்து அடிக்கிறதே
தொண்ணூறு நிமிடங்கள்
தொட்டணைத்த காலந்தான்
எண்ணூறு ஆண்டுகளாய்
இதயத்தில் கனக்குதடி.....!
அருமை உங்கள் கவிதை..வைர வரிகள் மேலும் அழகு சேர்க்கிறது..

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More