Monday 28 February 2011

நம்பிக்கையால்........................!


உடலின் வலியின் மத்தியிலும் 
வானம்பாடியாய் 
சிறகினை விரிக்கத்தான் நினைக்கின்றேன்
முடியாமல்..........
சுமைகள் சிறகினை உடைக்கின்றன
விண்மீனாய்
கண் சிமிட்டத்தான் முனைகின்றேன்
கண்கள் இருட்டினுள் 
தொலைந்து போகின்றன 
இதழைப் பிரித்து
புன்னகைக்கவும் முடியவில்லை 
மனதின் காயங்கள் 
மேலும் ரணமாகிப் போவதால்............
இத்தனையும் தாண்டியிங்கு 
வாழத்தான் நினைக்கின்றேன்!
வாழ்வின் ஓர் ஓரத்தில் 
மனதில் புதைந்து போகும் 
எதிர்பார்ப்புகள்
நிஜமாகும் என்னும்
நம்பிக்கையினால்........
 

15 comments:

ஃஃஃஃவாழ்வின் ஓர் ஓரத்தில்
மனதில் புதைந்து போகும்
எதிர்பார்ப்புகள்
நிஜமாகும் என்னும்
நம்பிக்கையினால்.ஃஃஃஃ

நம்பிக்கை தான் வாழ்க்கை சகோதரம்...

அலைகளை எதிர் கொணடால்..
சிறு வெள்ளத்தில் இலகவாயிருக்கும்...

//வாழ்வின் ஓர் ஓரத்தில்
மனதில் புதைந்து போகும்
எதிர்பார்ப்புகள்
நிஜமாகும் என்னும்
நம்பிக்கையினால்........//

நிச்சயம் நிஜமாகும்
வாழ்த்துக்கள்;

நிச்சயமாக அது எல்லோருக்கும் பொருந்தும் அண்ணா.............

@S மகாராஜன்
நிச்சயமாக.நன்றி...........

நம்பிக்கை வீண் போகாது என்றும் நம்புவோம்.

வாழ்வின் ஓர் ஓரத்தில்
மனதில் புதைந்து போகும்
எதிர்பார்ப்புகள்
நிஜமாகும் என்னும்
நம்பிக்கையினால்........//

வணக்கம் சகோதரி, முதன் முறை உங்களின் வலைக்கு வருகிறேன். எப்படி நலமா? மனதினுள் சிறகு முளைக்கத் துடிக்கும் எதிர்ப்பார்ப்புக்களும், அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத சூழ் நிலைகளையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். கவிதை நம்பிக்கை எனும் கால் கொண்டு பறக்கத் துடிக்கும் ஒரு பறவையின் குரல்.

//வாழ்வின் ஓர் ஓரத்தில்
மனதில் புதைந்து போகும்
எதிர்பார்ப்புகள்
நிஜமாகும் என்னும்
நம்பிக்கையினால்........//

என்னை கவர்ந்த வரிகள் ..
நன்றாக உள்ளது ..வாழ்த்துக்கள் சகோதரா ..

@Chitra
நிச்சயமாக அக்கா.நன்றி.............

@நிரூபன்
நலத்திற்கு ஒரு குறையுமில்லை.நன்றி..............

@இது உங்களுக்கு
நன்றி..............

சுமைகள் சிறகினை உடைக்கின்றன
விண்மீனாய்
கண் சிமிட்டத்தான் முனைகின்றேன்
கண்கள் இருட்டினுள்
தொலைந்து போகின்றன
இதழைப் பிரித்து
புன்னகைக்கவும் முடியவில்லை
மனதின் காயங்கள்
மேலும் ரணமாகிப் போவதால்....என்னை கவர்ந்த வரிகள் ..

கவிதை அழகாக உணர்வுகள் சொல்கிறது வாழ்த்துக்கள்

சித்தாரா...நம்பிக்கை என்கிற இறகை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள் தோழி.என்றுமே சந்தோஷம்தான் !

@ரேவா
நன்றி........

@ஹேமா
நிச்சயமாக நம்பிக்கைதான் நம் வாழ்க்கை.புரிகிறது தோழி.....

னம்பிக்கையில் தான் நகர்கிறது வாழ்க்கை... கவிதைக்கு பாராட்டுக்கள்.

அதெலாம் முடியாது
நாந்தான் FIRSTU
எனக்குத்தான் வடை ..

கவிதை
உணர்ந்து எழுதி இருக்கீங்கள்
உங்கட நம்பிக்கை
என்றும் தொடரட்டும்...

நம்பிக்கைதானே வாழ்க்கை. நல்ல கவிதை.

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More