காதலின் நம் பாதச்சுவடுகள்
அழியாத வரலாறென்று
மனம் மகிழ்ந்திருந்தேனே
அத்தனையும் பொய்யாகி
கண்ணீர் காயங்கள்
சுவடுகளாகிப் போய்விட்டனவே
இன்று இருவரும்
இரு வேறு துருவங்களாய்
என்னவாயிற்று நமக்குள்....?
மனசொடிய கடுஞ்சொல்
அணுகுமுறையில் கொஞ்சம் வெறுப்பு
விளையாட்டுக்காகவேனும்
உன் மேல் காட்டியதில்லையே
உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது...?
உண்மைக் காதலுக்கு
நீ காட்டியது
சோதனைகளையும் வேதனைகளையும்
உன் பொய் வார்த்தைகளில்
நம்பி ஏமாந்தது
நான் மட்டுமல்ல....
உன்னை மறந்து நெடுநாளாயிற்று
உன்னால் மனம் பட்ட
காயத்தை மட்டும்
மறக்க முடியவில்லை
நீ செய்த குற்றங்களுக்கு
தண்டனை பெறுவது
என் கண்களும், இதயமுமா....
கண்களைத் தண்டித்தேன்
உன் உருவை மறைத்து விட்டது
இதயம் மட்டும்
ஏனோ அடம்பிடிக்கின்றதே
தனிமையே பிடிக்காதவளுக்கு
இப்போதெல்லாம் எஞ்சியிருப்பது
தனிமையும் வெறுமையுமே......
9 comments:
எளிமையான அருமையான கவிதை...
நன்றி அண்ணா.......
உன்னை மறந்து நெடுநாளாயிற்று
உன்னால் மனம் பட்ட
காயத்தை மட்டும்
மறக்க முடியவில்லை
நீ செய்த குற்றங்களுக்கு
தண்டனை பெறுவது
என் கண்களும், இதயமுமா....
கண்களைத் தண்டித்தேன்
உன் உருவை மறைத்து விட்டது
இதயம் மட்டும்
ஏனோ அடம்பிடிக்கின்றதே
அருமை சகோ... கவிதை வரிகளில் வலிகளையே உணர்கின்றேன்...இனி சந்தோஷமான காதல் கவிதையை உன்னிடம் எதிர்பார்க்கின்றேன்...எழுதுவாய் என்ற நம்பிக்கையில் ரேவா
@ரேவா
நன்றி.முயற்சி பண்ணுவோம்.......
உன்னை மறந்து நெடுநாளாயிற்று
உன்னால் மனம் பட்ட
காயத்தை மட்டும்
மறக்க முடியவில்லை//
//
கண்களைத் தண்டித்தேன்
உன் உருவை மறைத்து விட்டது
இதயம் மட்டும்
ஏனோ அடம்பிடிக்கின்றதே//
காதலின் பிரிவில் சிக்கிய அனலிடைப் பட்ட மெழுகொன்றின் உணர்வினைக் கவிதையில் காண்கிறேன். ஏமாற்றப்படுவதற்கு காரணங்கள் இல்லையென்பதைக் கவிதையில் தத்ரூபமாகாச் சொல்லியிருக்கிறீர்கள்.
மறக்க முடியவில்லை.. மனதிற்குள் இன்றும் அழிக்க முடியாத நினைவுகளைச் சுமந்த ஒரு பெண்ணின் உள்ளத்து உணர்வுகளைச் சொல்லி நிற்கிறது.
உன்னை மறந்து நெடுநாளாயிற்று
உன்னால் மனம் பட்ட
காயத்தை மட்டும்
மறக்க முடியவில்லை
அருமை சித்தாரா தொடருங்கள்
தங்கா நல்லாயிருக்குடி... வலைச்சரத்திலெல்லாம் கலக்கறாய் போல வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
தனிமையே பிடிக்காதவளுக்கு
இப்போதெல்லாம் எஞ்சியிருப்பது
தனிமையும் வெறுமையுமே......//
அடுத்த ஒரு மகிழ்ச்சியான கவிதை தரவும்.
http://zenguna.blogspot.com
சகோதரம் குணசேகரன் அவர்களே உங்களது புளொக்கரின் கருத்தப்பெட்டியை சீர்திருத்த முடியுமா ?
Post a Comment