Saturday 2 April 2011

தேனின் மகிமை .

                   தேன் இயற்கை தரும் இனிய சத்துணவு.நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலம் பொருந்தி நோயின்றி வாழ விரும்புபவர்கள் பயன்படுத்துவதற்கு தேன் ஒரு சிறந்த அற்புத மருந்தாகும்.தேனை யார் ஒருவர் தொடர்ந்து சாப்பிடுகிறாரோ அவர் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.கண்பார்வை அற்றவர்கள் தொடர்ந்து தேனை உட்கொள்வதனால்  அவர்களது பார்வைக் கோளாறுகள் நீங்குகிறது என்பதை தேனைத் தொடர்ந்து அருந்துவதால்தான் உணர முடியும்.ஆயிரம் ஆண்டுகளாகியும் தேன் கெடுவதில்லை.சில நோய்களுக்கு தேனில் மருந்தை சேர்த்து கொடுக்கப்படுகிறது.ஏனெனில் தேன் மருந்துடனே தானும் மருந்தாகி வேலை செய்யும்.தேனில் பல சத்துக்கள் நிரம்பியுள்ளன.

                         தேன்,நோயை எதிர்க்கும் சக்தியையும்,நோய் வராமல் காப்பாற்றும் சக்தியையும் தருகிறது.தேன் கால வெப்பநிலைக்கு ஏற்றவாறும் .அந்தந்த இடத்தின் சூழ்நிலைக்குத் தக்கவாறும் கிடைக்கின்றது.பலவகையான தேன் இருந்தாலும் கொம்புத்தேன் எல்லாவற்றிலும் சிறந்தது.வாத நோய்,கொழுப்புச்சத்து ,இரத்த அழுத்த நோய் போன்ற நோய்களையுடையவர்கள் தேனை உட்கொள்ளலாம்.தேனைத் தண்ணீரில் கலந்து அருந்தினால் சிறுநீர் பெருகும்.தாது பலத்தை அதிகரிக்கச்செய்யும்.விஷம் உண்டவர்களுக்கு தேனுடன் நீர் கலந்து கொடுத்தால்,விஷத்தின் கொடுமை குறைந்து அத்தீங்கிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

                   உடல் எடை குறைய வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள்,தேனுடன் எலுமிச்சம்பழம் கலந்து பல மாதங்களாக உட்கொண்டால் உடல் எடை குறையும்.

                         தேனைப் பலர் மருந்துகள்,மூலிகைச் சாற்றுடன் கலந்து உபயோகிக்கின்றார்கள்.தேன் பல நாட்கள் ஆனதும் உறைந்து கற்கண்டாக மாறிவிடும்.இந்தக் கற்கண்டு ,தேனின் கற்கண்டை உட்கொண்டால் பாடுபவர்களுடைய குரலோசை இனிமையாக அமையும்.இசைப் பாட்டுக்குரிய குரலொலியை தேன் நல்ல முறையில் அமைக்கும்.இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து உட்கொண்டால் வாயு குணமாகும்.துளசிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி,இருமல்,கிருமி போன்றவை குறையும்.தேனும் சுண்ணாம்பும் கலந்து கட்டிகளின் மேல் தடவினால் கட்டி உடையும்.தீப்பட்ட புண்களுக்கு தேனைத் தடவினால் புண் குணமாகும்.தேனின் மகிமையை அறிந்து கொள்ளுங்கள்.நோயற்ற வாழ்வைப் பெற்றிடுங்கள் .

10 comments:

நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

பயனுள்ள பதிவு..
வாழ்த்துக்கள்..

இண்ட்லியில் இணைத்து விட்டேன்...

அருமையான மருத்துவ பதிவு....
ஒரிஜினல் தேன் கிடைக்கத்தான் சற்று சிரமமாக இருக்கிறது..

தேனின் முக்கியத்துவம் பற்றி அருமையான பதிவொன்றைத் தந்துள்ளீர்கள். உங்கள் பதிவினைப் படிக்கும் போது, வன்னியில் நாங்கள் குழவி குத்தக் குத்த, காட்டுத் தேன் குடித்த நினைவுகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

நல்ல தகவல்கள் தங்கா... அருமையான பதிவு... அத்துடன் மெல்லிய சுடு நீரில் கொஞ்சம் தேன் கலந்து அருந்தினால் உடல் மெலிவடையும் அதே போல் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும்...

ஃஃஃஃஃMANO நாஞ்சில் மனோ said...
அருமையான மருத்துவ பதிவு....
ஒரிஜினல் தேன் கிடைக்கத்தான் சற்று சிரமமாக இருக்கிறது..ஃஃஃஃஃ

கொஞ்ச நாள் பொறுங்க தலைவா என் வன்னி அனுபவத்திலிருந்து ஒறிஜினல் தெனை காண்பது பற்றி விளக்கமாக பதிவிடுகிறன்...

அருமையான மருத்துவ பதிவு....

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More