
அடுத்தவரின் கவிதைகளை
ரசிக்க மட்டும் தெரிந்த என்னை
கவிதை எழுத வைத்தவனே
அழகிய கவிதையெனத் தோன்றுகிறாய்
ஒவ்வொரு வரியாக எழுதுகிறேன்
முடிய மறுக்கிறது கவிதை
முதல் பார்வையில் உணரவில்லை
நம் ஜென்ம பந்தத்தை
என் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது
என்னைக் கடந்து செல்கையில்
ஏதோ கூறிவிட்டுச் சென்றாயே
நினைவிருக்கிறதா
திகைத்து உன்னை நோக்கிய போது
சிறு புன்னகையுடன் நகர்ந்து சென்றாயே
அந்த முதல் சந்திப்பு
என் மனதில் இன்னும் பசுமையாய்
அலைபாயும் என் உணர்வுகளுக்கு...