Thursday, 7 February 2013

காதல்னா இதுதாங்க!

இது காதலர் மாதம்னு சொல்றாங்களே.அதனால இந்த மாசம் முழுதும் காதல் பதிவுகள் எழுதலாம்னு நினைக்கிறேன்.என்ன சொல்றீங்க உறவுகளே..?

அண்ணலும் நோக்கினான் 
அவளும் நோக்கினாள் 
கண்ணும் கண்ணும் கலந்தன
காதல் பிறந்தது

 இது அந்தக்காலம்,,,

அண்ணலும் நோக்கியா
அவளும் நோக்கியா
அலைபேசிகள் கலந்தன
காதல் வளர்ந்தது

இது இந்தக்காலம்,,, 

நான் நினைக்கிறேன் இதுதான் காதலா இருக்குமோ..?
*** சின்னஞ்சிறுசுகளின் அன்பு மலர்ச்சி அதன் சந்திப்பில் உண்டாவது தான் காதல்.

*** மனிதாபிமானம் கூடிய, விட்டுக்கொடுத்து இன்பம் காண்கின்ற, மன்னித்து மகிழ்கின்ற, செக்ஸ் அடிப்படையில் தோன்றுகின்ற ஆண், பெண் உறவு தான் இந்தக் காதல்.

*** காதலன் / காதலியின் ஸ்பரிசத்தினால் எவ்வளவு இன்பம் உண்டாகின்றதோ அவ்வளவு இன்பம் அவன் / அவளைப் பற்றி நினைப்பதிலும் உண்டாகின்றது.

*** காதல் சாவில்லாதது.அதற்கு அழகு தெரியாது.

*** ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்னியோன்யமான காதலர்களாக இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து கொண்டபின் இல்லற நெறியின் நுணுக்கங்களை அறிந்து நடந்து கொள்ளவில்லையாயின் அவர்களின் காதலின் இனிமையே நாளுக்கு நாள் மறைந்து கொண்டே போகும்.

*** அன்றாடம் எத்தனையோ ஆண்கள் பெண்களைக் காண நேரிடுகிறது.ஆனால் அவர்களில் ஒரு சிலருக்குத்தான் மற்றவர்களைக் கண்டதும் மனதில் கவர்ச்சி உண்டாகிறது.அந்தக் கவர்ச்சியும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் அமையும் போது காதல் பிறக்கிறது.

*** காதலிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்காக ஏங்குபவர்களுக்கெல்லாம் அது கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது. ஆனால் அது பற்றியே எண்ணாமலிருப்பவர்களை அது வலியத் தேடி வராதென்று சொல்லவும் முடியாது

*** வார்த்தையின் உதவியில்லாது ஜாடை, கை நெளிவு, உடல் வளைவு, கன்னக்குழிவு, கண்பார்வை இவற்றின் மூலமாக சுலபமாக தன் உள்ளத்து காதல் உணர்வுகளை வெளியிட்டு விடுவார்களாம் பெண்கள்.

காதலின் தூய்மையை காவியங்களில் மட்டும்தான் காண முடியும்னு பெரியவங்க சொல்றாங்க.எனக்கு ஏதும் தெரியலங்க.நான் குட்டிப் பொண்ணுங்க.

x_3d7f9d59 photo x_3d7f9d59_zps619c619b.gif

12 comments:

*** காதலிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்காக ஏங்குபவர்களுக்கெல்லாம் அது கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது. ஆனால் அது பற்றியே எண்ணாமலிருப்பவர்களை அது வலியத் தேடி வராதென்று சொல்லவும் முடியாது
////////////////////////////////////

ஒத்துக்குறேன் இது 100 வீதம் உண்மையென்கிறத ஒத்துக்கிறேன் :)

கவிதையும் ரொம்ப நல்லா இருக்குது

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்." இது அந்த காலம் .... ஆனா இப்போ ? இருக்க இளவட்டம் பின்னால நடக்க போறத தெரிஞ்சே ("வாடா மல்லிக்காரி என் வருங்கால கொலகாரி")பசங்கள்லாம் உஷாருங்கோ. விளக்கம் அருமை வாழ்த்துக்கள் சகோதரியே

ம்ம் அப்படியா குட்டிங்களா!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ நீண்ட காலத்தின் பின் பதிவோடு சந்திப்பதில் மகிழ்ச்சி!

குழந்தைகளின் காதல் அற்புதமானது மறக்க முடியாத நினைவுகள் கொண்டது

எழுதுங்க......தொடர்கிறோம்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ரசிக்க வைத்தது எழுத்து.

பெரியவங்க சொல்றது சரி தான்

வணக்கம் !
தங்களுடைய தளத்தை இன்றய வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளேன் .இங்கு உங்களையும் வருக வருகவே வரவேற்கின்றேன் .
http://blogintamil.blogspot.ch/2013/07/4.html

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

குட்டிப் பொண் என்கிறாய்! காதல் என்பதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம். நீ ஏன் அதில் நுழைகிறாய்? கொஞ்சம் வளர்ந்த பிறகு பார்க்கலாம். சரியா?

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_18.html?showComment=1400457681427#c72669377640408477

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More