
உன்னை நேசிக்கத் தொடங்கி
அன்றோடு முடிந்திருந்தது
என் வாழ்வையே வானவில்லாய்
மாற்றியிருந்த அந்த ஏழு நாட்கள்...
உன் முகம் பார்த்தறியேன்
உன் குரல் யாசித்தறியேன்
உன்னை மட்டும் அறிந்தேன்
உன்னைத் தான் நேசித்தேன்
அந்த ஏழு நாட்களில்
என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்
யாரிடம் உரைப்பேன்
என் மனவறைக்குள்
நுழைத்திட்ட உன்னை
மணவறையில் சந்திக்கும்
அந்நாளில்...
முதன் முதலாய்
உனை காணும் அந்த திருநாள்
தோழிகள் எனை சீண்ட
வெட்கம் எனை தூண்ட
யாருமறியாது கடைவிழியால்
உன் திருமுகம் நோக்க
உன்விழி மோதிய விபத்தில்
தடுமாறிய...