
நெடுநாட்களுக்கு அப்புறம் இன்று நிம்மதியைத் தேடி எங்க ஊர் கோயிலுக்கு சென்றேன்.எதற்காகவென்று தோன்றவில்லை.ஆனாலும் வேண்டிட கடவுளை தேடினேன்.எங்கு பார்த்தும் கடவுள் தோன்றவில்லை.எல்லாமே நீயாகவே தோன்றியது.மனம் வழிபாட்டில் ஒருமுகமாட்டேன் என அடம்பிடித்தது.அது கூட உன் மனமாச்சே.ஒருவாறு போராடி வென்று விட்டேன்.
கோயிலில் பல அறிந்த முகங்கள்.ஏனோ பேச மனமின்றி அங்கும் சிறு புன்னகையுடன் தனிமையையே நாடினேன்.என் மனம் புரிந்தவர்களாய் விலகினார்கள்.கூட்டத்தை தவிர்த்து ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டேன்.மனதை...