உறவுகளுக்கு புதுவருட நல்வாழ்த்துக்களுடன் நீண்டநாட்களின் நினைவுகளுடன் நான் உங்கள் சித்தாரா.
வீட்டிலிருந்தவாறே வருமானம் ஈட்டிக் கொள்வதற்கு பல வழிகள் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் கற்பூர தயாரிப்பு.இது ஒரு பொழுதுபோக்காக இருப்பது மட்டுமன்றி வருமான மூலமாகவும் இருக்கிறது.இன்றைய அவசர உலகத்தில் நாம் இவற்றையெல்லாம் சிந்திப்பதேயில்லை.
கற்பூரம் தயாரிப்பது எப்படி என்பது பற்றி நானறிந்த தகவலை விளக்கப் படங்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.
செய்முறை.
முதலில் விளைவு கற்பூர கட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த விளைவு கற்பூர கட்டிகளை இவ்வாறு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்த கற்பூரத்தை சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து கொள்ளவும்.
இப்போது கலவை தயார்.
சிறிய கரண்டியினால் தேவையான அளவு கற்பூரத்தை அச்சிற்குள் போட வேண்டும்.
அச்சினுள் கலவையை போட்டபின் இவ்வாறு சுத்தியலால் நன்கு அடித்துக் கொள்ளவும்.(உங்கள் பலம் முழுவதையும் காட்ட வேண்டுமென்று அவசியமில்லை.)
பின்பு அச்சினை தட்டி கற்பூர கட்டியினை வெளியில் எடுத்து கொள்ள வேண்டும்.
பெற்றுக் கொண்ட கற்பூர கட்டிகளை அதற்கென தயாரிக்கப்பட்ட காகிதத்தில் வைத்து இவ்வாறு சுற்றிக் கொள்ள வேண்டும்.
கற்பூரம் பற்றிய தகவல்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
20 comments:
நல்லதொரு சுயதொழில் முயற்சி. வருட ஆரம்பத்தில் நல்ல விடயத்துடன் வந்துள்ளீர்கள். சிறப்பான ஆக்கம். தொடர்க உங்கள் பணி.
மிக்க நன்றி சகோதரி.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.உங்கள் வாழ்த்துடன் தொடர்கிறேன்.
வீட்டிலிருந்தே மாதம் 15000 சம்பாதிக்கலாம். ரெடியா?
http://manasaali.blogspot.com/2012/12/15000.html
சுயதொழில் வேண்டுவோர்க்கு சிறப்பான வழிமுறை சொல்லியுள்ளீர்கள் .பாராட்டுக்கள்
பயனுள்ள தகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நல்ல தகவல் சித்தாரா.
நன்றி.
தொடர்ந்து நல்ல ஆக்கங்களை கொடுங்கள் சகோதரி
@LATEST APPS,
தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.
@கவியாழி கண்ணதாசன்
தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.
@இராஜராஜேஸ்வரி,
தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரி
@அருணா செல்வம்,
தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.
@♔ம.தி.சுதா♔
ம்ம்.முயற்சிக்கிறேன்.தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரா.
சுய தொழில் கற்க சிறந்தது வாழ்த்துக்கள்
ஒளிமயமான படைப்பு :-)
வாழ்வில் ஒளி கொடுக்கும் பகிர்வு . சிறப்புங்க.
வாழ்வை ஒளிமயமாக்கும் நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
மிகவும் எளிய வழி,புது தொழில் ஒன்று கற்றுக்கொண்ட திருப்தி/வாழ்த்துக்கள்.
.பாராட்டுக்கள்..
சிறப்பான பகர்வு இன்றைய இளைய தலைமுறை சுயமாய் நிற்க உதவும் தன்னம்பிக்கை கொடுக்க கூடிய பதிவு வாழ்த்துக்கள்
Post a Comment