Thursday 9 February 2012

சின்னச் சின்னதாய் நினைவுகள்.

நெடுநாட்களுக்கு அப்புறம் இன்று நிம்மதியைத் தேடி எங்க ஊர் கோயிலுக்கு சென்றேன்.எதற்காகவென்று தோன்றவில்லை.ஆனாலும் வேண்டிட கடவுளை தேடினேன்.எங்கு பார்த்தும் கடவுள் தோன்றவில்லை.எல்லாமே நீயாகவே தோன்றியது.மனம் வழிபாட்டில் ஒருமுகமாட்டேன் என அடம்பிடித்தது.அது கூட உன் மனமாச்சே.ஒருவாறு போராடி வென்று விட்டேன்.
கோயிலில் பல அறிந்த முகங்கள்.ஏனோ பேச மனமின்றி அங்கும் சிறு புன்னகையுடன் தனிமையையே நாடினேன்.என் மனம் புரிந்தவர்களாய் விலகினார்கள்.கூட்டத்தை தவிர்த்து ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டேன்.மனதை வேறு பாதையில் திருப்புவதற்காக வேடிக்கையில் கவனம் செலுத்தினேன்.அங்கு கண்ட ஓர் காட்சி கண்ணில் நீர் துளிர்க்க வைத்து விட்டது.
ஒரு அழகான சிறு பெண் குழந்தை.நான் நினைக்கிறேன் அதற்கு இரண்டு வயது இருக்கலாம்.ஏற்கெனவே பெண் குழந்தையென்றால் ரொம்பவே இஷ்ரம்.பார்த்ததுமே அக் குழந்தையை ரொம்பவே பிடித்திருந்தது.அப்போது முதல் அக்குழந்தையை சுற்றியே என் கண்கள் வட்டமிட்டுக் கொண்டன.அதன் குறும்புகளை ரசித்தபடியே அமர்ந்திருந்தேன்.
அப்போது மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அக்குழந்தை முன் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான்.குழந்தையும் மிகவும் சந்தோசமாய் அவன் விளையாட்டினை பார்த்து கைகொட்டி ரசித்திருந்தது.நேரமானதால் அச்சிறுவனை அவன் தாயார் அழைக்கவே ஓடினான்.அடுத்த நொடி அக்குழந்தையின் சின்னஞ்சிறு அழகிய பூ முகம் சிவந்துவிட்டது.அச் சிறுவன் ஓடிய திசையை நோக்கியே அண்ணா அண்ணா என அழைத்தபடி அழுதது.சிறுவனுக்கு தன்னைத் தான் பாசமாய் அக்குழந்தை அப்படி அழைக்கிறது என்பது புரியவில்லை.ஒருவேளை அவன் தங்கை இருந்திருந்தால் அக்குழந்தை நிலையினை புரிந்திருப்பானோ?அச் சிறுவன் சென்று மறைந்துவிட்டான்.சிறிது நேரம் அவன் போன திசையை பார்த்து அழுதபடியே நின்றிருந்தது.
ஒரு நிமிடம் என் இதயம் துடிப்பது நின்றுவிட்ட உணர்வு. அக்குழந்தைக்காகவோ, இல்லை எதற்காகவோ தெரியவில்லை என்னை அறியாமேலே என் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டியது.யாரும் அறியமுதல் அதனை அழித்துக் கொண்டேன்.கண்டவுடன் யார்மீதும் உறவு சொல்லி பாசம் வையாதே.அதன்பின் உன் கண்ணில் நீரையே காணமாட்டாய். ஓடிப் போய் அக்குழந்தையிடம் இவ்வாறு சொன்னாலென்ன என தோன்றியது.இருபது வயதே புரியாத குழந்தை வயசாய் தடுமாறும் நிலையில் இரண்டு வயது குழந்தையிடம் சொல்லி என்னாவது?

நிம்மதியைத் தேடி கோயில் சென்றேன்.இருந்த கொஞ்ச நிம்மதியையும் இழந்துவிட்டுத் திரும்பி வந்தேன்.



10 comments:

அழகான பதிவு..மகிழ்வை தருகிறது.நன்றி.

சைக்கோ திரை விமர்சனம்

நெகிழ்வு சித்தாரா.இதுதான் குழந்தை உலகம்.பெரியர்வர்கள் நாங்களே சிலசமயங்களில் உறவென்று
ஏமாந்துவிடுகிறோமே !

இருபது வயதே புரியாத குழந்தை வயசாய் தடுமாறும் நிலையில் இரண்டு வயது குழந்தையிடம் சொல்லி என்னாவது?

நிம்மதியைத் தேடி கோயில் சென்றேன்.இருந்த கொஞ்ச நிம்மதியையும் இழந்துவிட்டுத் திரும்பி வந்தேன்.

சகோதரி உண்மையில் அங்கு அந்த இடத்தில் என்னை நிறுத்திப் பார்க்கிறேன். அழுகையும் ஒரு ஆனந்தம் தானே உங்களால் அந்த குழந்தைப் போல நினைத்ததும் அழ முடிந்தால்...
உண்மையில் அந்தக் குழந்தையிடமிருந்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ளும் மனோபாவம் வந்துவிட்டால், சிரிப்பிலும் சரி, அழுகையிலும் சரி ஆனந்தித்திருக்கலாம்.
அந்தக் குழந்தையின் அன்பு உண்மையில் என் கண்களிலும் நீரை சுரக்க வைத்துவிட்டது.

//எல்லாமே நீயாகவே தோன்றியது.மனம் வழிபாட்டில் ஒருமுகமாட்டேன் என அடம்பிடித்தது.அது கூட உன் மனமாச்சே//கலக்கல் வரிகள்

அன்பரே உங்கள் தளத்தின் FEAUTRE POST WIDGET யை EDIT செய்ய வில்லையா DEFAULT POST மட்டுமே வருகிறது உங்கள் தளத்தின் பதிவுகள் இல்லையே

நெகிழ்வான சம்பவம், உங்களுக்கு அண்ணன்கள் என்றால் மிகவும் பிரியம் என்று சொல்லியிருப்பது மிகவும் சரியே!

தங்கா நீ குஷி படம் பார்க்கல போல...

உங்களுக்கு வெர்சாட்டைல் பிளாக்கர் அவார்ட் கொடுத்து பரிந்துரை செய்கிறேன்.. தாங்கள் பெற்றுக்கொண்டு, பின்வரும் என்னுடைய தளத்தில் http://www.rishvan.com/2012/02/blog-post_25.html உள்ள வழிமுறையை பின்பற்றவும். வாழ்த்துக்கள்....ரிஷ்வன்.

அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More