அண்ணன் தங்கை உறவை எடுத்துச் சொல்லும், எத்தனை தடவை பார்த்தாலும் அதே உணர்வை தூண்டிடும் ஓர் பாசக் காவியம். நீண்ட நாட்களின் பின் விழி இமைக்க மறந்து ரசித்துப் பார்த்த திரைப்படம் என்றே கூற வேண்டும்.
கிழிந்து போன தங்கையின் காலணியை எடுத்துச் சென்று தைத்து வரும் வழியில் எதிர்பாராமல் அதை தொலைத்து விட்டு விழிகளில் நீர் வழிய வீடு திரும்பும் அண்ணன். தந்தையிடம் அண்ணனை காட்டிக் கொடுக்க முடியாமலும், காலணியில்லாது பாடசாலை செல்ல முடியாமலும் தவிக்கும் தங்கையின் நிலை இருவரது பாசப்பிணைப்பை எடுத்துக் காட்டுகிறது.
வேறு வழியின்றி அண்ணனின் காலணியை இருவரும் பாவிப்பதென முடிவெடுத்து ஒருவர் மாறி ஒருவர் அணிந்து செல்வதும், தங்கை வரும்வரை அண்ணன் காத்திருப்பதும், அண்ணனுக்கு தாமதமாகிவிடும் என்று வேக வேகமாக தங்கை ஓடி வருவதும் உருக வைக்கிறது.
தொலைந்துபோன தன் காலணியை தன் பாடசாலை மாணவியே அணிந்துவருவதை அவதானித்து அவளுக்கு தெரியாமல் அவளைத் தொடர்ந்து சென்று அவள் வீட்டை தெரிந்து கொண்டு மறுநாளே தன் தமயனை அழைத்துச் சென்று காட்டியபோதும் அச் சிறுமியின் குடும்ப நிலவரம் அறிந்து அவர்கள் ஏதும் பேசாது வீடு திரும்புகையில் அவர்களது இரக்க குணத்தை எடுத்துக் காட்டுகிறது.
பாடசாலையில் ஓட்டப் பந்தயம் வைப்பதாயும் அதில் மூன்றாமிடம் பெறுபவர்க்கு காலணி பரிசு என்ற அறிவித்தல் அறிந்ததும் போட்டிக்கான பதிவு முடிவுற்ற பின்னரும் ஆசிரியரிடம் கெஞ்சி மன்றாடி சம்மதம் வாங்குவதும் அந்த சந்தோச செய்தியை தங்கையிடம் கூறி மகிழ்கையில் அவனதும் மன உறுதியையும், அவளது நம்பிக்கை தன்மையையும் காட்டுகிறது.
தங்கைக்காக பாசத்தில் உருகும் அண்ணன் , அண்ணனின் சூழ்நிலையை உணர்ந்து நடந்து கொள்ளும் தங்கையின் மனப்பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஆனால் இவ்வளவு உணர்வுகளையும் காட்டிய இயக்குனர் கடைசியில் யாரையும் அழ வைக்கவில்லை என்பது தான் சிறப்பு.
இப்படி ஒரு நல்ல படத்தை அண்ணாவின் மடிக்கணணியில் இருந்து திருடிப் பார்த்ததுமில்லாமல் எதிர் பதிவு போடுவதிலும் எனக்கு துளியளவும் திருட்டு உணர்ச்சியே இல்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணுமல்லவா. என் அண்ணன்களுக்கு அப்படி ஒரு தங்கச்சியாக இருக்கவே எப்போதும் ஆசைப்படுகிறேன்.