Sunday 23 October 2011

ஒருவரைக் கடுப்பேத்துவது எப்புடி......?


நீங்க எல்லாரும் தினந்தினம் எத்தனையோ பேரை கடுப்பேத்தியிருப்பீங்க இல்லா எத்தனையோ பேரால நீங்க கடுப்பாயிருப்பீங்க.அப்போ உங்க நிலைமையையும் அவங்க நிலைமையையும் ஒருக்கா நினைச்சு பாருங்க.உங்களில ஒரு சிலர் மற்றவங்கள எப்பிடி கடுப்பேத்தலாமெண்டு ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்க.ஒருத்தரை கடுப்பேத்துறதென்பது ஒன்றும் பெரிய கஷ்டமான வேலையில்ல.அதுக்காக நீங்க நேரமெல்லாம் செலவழிக்க தேவையில்ல.ரொம்ப சுலபம்.இதெல்லாம் எனக்கெப்பிடி தெரியும்னு நினைக்கிறீங்களா?எல்லாம் ஒரு அனுபவம்தான்.வேணுமென்றால் நீங்க கூட முயற்சி பண்ணி பார்க்கலாம்.

என்னோட அனுபவத்தில கொஞ்சம் சொல்றேன்.உங்களுக்கும் ஏதாச்சும் புது ஐடியா இருந்தா பகிர்ந்து கொள்ளுங்க . 

  • வீதியில கண்டால் தெரியாத மாதிரி போயிடுங்க.கேட்டால் நான் வேற யோசனையில போட்டன் கவனிக்கல எண்டு சொல்லிடுங்க.
  • வேறு ஒருத்தருக்கு நீங்க அனுப்பிய மெசேஜ்சினை அவருக்கு அனுப்பலாம்.கேட்டால் மாறி அனுப்பீற்றன் என்று சொல்லலாம்.
  • ஒருத்தர் call பண்ணினா நான் பிஸியா இருக்கேன் அப்புறம் பேசுறேன்னு சொல்லிற்று cut பண்ணிக்கலாம்.ஆனா கடைசி வரைக்கும் call பண்ணக்கூடாது.
  • மறுபடி மறுபடி call பண்ணினாங்கன்ன அவங்க நம்பர்களை call block பண்ணி விட்டுக்கலாம்.
  • அவங்க call மட்டும் தவிர்த்திட்டு நாம வேற call பேசிற்று இருந்தோம்னா call waiting cancel பண்ணிக்கலாம்.
  • மெசேஜ் அனுப்பினாங்கன்னா பதில் அனுப்பக் கூடாது.கேட்டா மெசேஜ் வந்ததை கவனிக்கல பிஸியா இருந்தேன்னு சொல்லிக்கலாம்.
  •  போனை off பண்ணி வச்சுக்கலாம்.அப்புறம் கேட்டால் current இல்லை charge இல்லைன்னு சொல்லிக்கலாம்.
  • மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பீற்றிருந்தால் wait a minute என்று சொல்லிற்று கடுப்பாகிற வரைக்கும் அவங்கள wait பண்ண வைக்கலாம்.
  •  e-மெயில் அனுப்பினாங்கன்னா reply பண்ணாதீங்க.கேட்டால் இன்டர்நெட் வேலை செய்யலன்னு சொல்லிக்கலாம்.
  • Skype இல call பண்ண சொன்னாங்கன்னா headphone சரியில்ல headphone  மாத்தணும்னு சொல்லுங்க.
  • Facebook இல அவங்களை பற்றி status போட்டுக்கலாம்.
  • இது எல்லாத்தையும் விட சிறந்த ஐடியா.ஏன் இப்பிடி அவங்கள பற்றி ஒரு பதிவு போட்டே கடுப்பேத்தலாமே.

கடைசியில அவரோட நிலைமை இப்பிடித்தானே இருக்கும் ?ஹ ஹ ஹ ஹா.....
அப்போ பதிவு போட்டவங்க நிலைமை இதுதானே ?





10 comments:

என்னோட அனுபவத்தில கொஞ்சம் சொல்றேன்.உங்களுக்கும் ஏதாச்சும் புது ஐடியா இருந்தா பகிர்ந்து கொள்ளுங்க . ///

அட... அனுபவம் எல்லோருக்கும் யூஸ் புல்லா இருக்கும் போல...

இது எல்லாத்தையும் விட சிறந்த ஐடியா.ஏன் இப்பிடி அவங்கள பற்றி ஒரு பதிவு போட்டே கடுப்பேத்தலாமே.

supper!!!..சூப்பர் ஐடியா. பாராட்டுக்கள்.

நல்லா கடுப்பேத்திட்டீங்க....

//
இது எல்லாத்தையும் விட சிறந்த ஐடியா.ஏன் இப்பிடி அவங்கள பற்றி ஒரு பதிவு போட்டே கடுப்பேத்தலாமே.



///

good idea

சூப்பர்... பாராட்டுக்கள்.

-சே.குமார்

எப்புடியெல்லாம் யோசிக்கிறாங்க......

//ஒருவரைக் கடுப்பேத்துவது எப்புடி......?//

இப்பிடி பதிவு போட்டா ஆட்டோமெட்டிக்கா கடுப்பாயிடுவாங்களே..

ஒருத்தரைக் கடுப்பேத்திப் பார்க்கிறதில இவ்வளவு சந்தோஷமா சித்தாரா.நீங்க எங்கேயோ நல்லா மாட்டியிருக்கிறீங்கபோல.அதுக்குத்தான் பழிக்குப் பழி !

இனிய தீபாவளி வாழ்த்துகள் தோழி !

இதுல ஒண்ணு மிஸ்ஸிங்

“ஒருவரை கடுப்பேத்துவது எப்படினு” பதிவு போட்டு கூட படிக்குறவங்களை கடுப்பேத்தலாம்... :)

ஐ ஐ என் பதிவு மாதிரியே இருக்கு

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More